வியாழன், 13 ஜனவரி, 2011

அம்பலப்படுத்துவது தொடரும்; விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாங்கே உறுதி


வழக்குகள் மூலம் தன்னை முடக்க முயற்சிகள் நடந்தாலும் ஆவணங் களை விக்கிலீக்ஸ் இணைய தளம் மூலமாக வெளியிடும் பணி தொடரும் என்று ஜூலியன் அசாங்கேஉறுதி யாகத் தெரிவித்துள்ளார்.

ஏகாதிபத்திய சக்திகளை தனது ஆவண வெளியீடு கள் மூலமாக உலுக்கி எடுத்த ஜூலியன் அசாங்கே பாலியல் பலாத்கார வழக் கில் சிக்க வைக்கப்பட்டுள் ளார். ஸ்வீடனில் நடந்த தாகச் சொல்லப்படும் அந்த விவகாரம் தொடர்பாக அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். ஸ்வீட னுக்கு அவரை அனுப்புவது தொடர்பாக விசாரணை நடக்கிறது. லண்டன் நீதி மன்றத்தில் விசாரணைக் காக வந்த இடத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், விக்கிலீக்சுடனான எங்கள் பணி தொடர்கிறது. மேலும் சில ஆவணங்களை வெளியிடுவது தொடர்பான பணிகளை முடுக்கி விட்டுள் ளோம் என்று அவர் கூறினார்.

எங்களோடு இணைந்து செயல்படும் சில செய்தித் தாள்களில் ஆவணங்கள் விரைவில் வெளியாகும். வழக்கு தொடர்பாக எனது தரப்பு என்ன என்பதை விரைவில் வெளியிடப் போகிறேன். இந்த வழக்கில் எனக்கு வெளியில் இருக்க அனுமதி கிடைத்தாலும், ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதை உயர்தொழில்நுட்ப வீட்டுக்காவல் என்று சொல் லலாம். அடுத்த விசாரணை பிப்ரவரி 6 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அசாங் கேயின் ஆதரவாளர்கள் குறித்த பட்டியலை அமெரிக்க அரசு சேகரித்து வருகிறது. அவருக்குள்ள ஆதரவைத் துண்டிப்பதற்கான வேலை களில் இறங்கவே இந்த சேகரிப்பு என்று கூறப் படுகிறது. டுவிட்டர், ஃபேஸ் புக் போன்ற பிரபலமான இணையதள சேவை நிறு வனங்களிடமும் விக்கி லீக்ஸ் மற்றும் அதற்கு ஆத ரவான வாடிக்கையாளர்கள் பற்றிய விபரங்களை அமெ ரிக்க அரசு கேட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: