வெள்ளி, 14 ஜனவரி, 2011

புதிய உத்வேகத்தோடு சோசலிசத்தை கட்டுவதில் உறுதியேற்போம்


தற்போது நடைமுறைப் படுத்தி வரும் சோசலிச சந்தைப் பொருளாதாரத் திட்டத் திற்கு அடுத்து, சோசலிச சமூ கத்தை உருவாக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்ற உறுதியோடு வியட்நாம் கம்யூ னிஸ்ட் கட்சியின் 11வது மாநாடு ஹனோய் நகரில் ஜன வரி 12 ஆம் தேதியன்று துவங் கியது.

மாநாடு நடைபெறும் தலை நகர் ஹனோய் நகர் முழுவதும் கோலாகலமான கொண்டாட் டங்கள் நடைபெற்று வருகின் றன. சிகப்புக் கொடிகளும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க என்று எழுதப்பட்ட பதா கைகளும் நகரை அலங்கரித் துக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் ஹோசிமின் படங் கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளின் இதயங் களில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று சிறப்பான இடம் உண்டு. அமெரிக்கா வின் காட்டுமிராண்டித்தன மான ஏகாதிபத்திய ஆக்கிர மிப்பை எதிர்கொண்டு தோற் கடித்ததோடு மட்டுமில்லா மல், நாட்டை அடிமைப் படுத்த நினைத்த அனைத்து காலனி சக்திகளையும் வெற்றி கரமாக புறமுதுகிட்டோடச் செய்ததே அதற்குக் காரணமா கும். 21 ஆம் நூற்றாண்டில் தனது அனைத்து பலத்தையும் பொருளாதார வளர்ச்சியில் செலுத்த வியட்நாம் முடிவு செய்திருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் வியட்நாமின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி இரட்டை இலக்க வளர்ச்சியைத் தொட் டுள்ளது. மாநாட்டு அறிக்கை யில் பொருளாதார வளர்ச்சி மற்றும் எதிர்வரப்போகும் கால கட்டம் பற்றியும் குறிப்பிடப் பட்டுள்ளது. வரும் காலகட்டத் தில் 7 முதல் 7.5 விழுக்காடு வரையில் வளர்ச்சி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12 அன்று ஹனோய் நகரில் உள்ள தேசிய மாநாட்டு மையத்தில் மாநாடு துவங்கி யது. மாநாட்டைத் திறம்பட நடத்திச் செல்ல 24 பேர் கொண்ட தலைமைக்குழு தேர்வு செய்யப்பட்டது. தேசிய புனரமைப்புக்கான அரசியல் நகல் திட்டத்தை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தா வது மத்தியக் குழு சார்பில் நாங் டக் மான் முன்வைத்தார். 36 லட்சம் கட்சி உறுப்பினர்கள் சார்பில் 1,300 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள் ளனர். முன்னாள் ஜனாதிபதி கள், பிரதமர்கள், கட்சியின் பொதுச்செயலாளர்கள், அரசி யல் தலைமைக்குழு உறுப்பி னர்கள், விடுதலைப்போராட்ட வீரர்கள் ஆகியோரும் இதில் கலந்து கொண்டுள்ளார்கள்.

தனது அறிக்கையில் ஐந்து இலக்குகளை பொதுச் செய லாளர் முன்வைத்திருக்கிறார்.

* தேசிய விடுதலை மற்றும் சோசலிசம்

* சோசலிச ஜனநாயகத்தைப் பலப்படுத்துதல்

* தேச ஒற்றுமையைப் பலப்படுத்துதல்.

* தேசத்தின் வலுவை ஒருமுகப்படுத்துதல்

* சர்வதேச சக்திகளோடு வியட்நாமையும் இணைத்து வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமைப்பாத்திரத்தை உறுதிப்படுத்துதல்.

இந்த இலக்குகளை விளக் கிப் பேசிய நாங் டக் மான், சோசலிசக் கட்டுமானமும், தேசியப் பாதுகாப்பும் ஒன் றோடு ஒன்று தொடர்புடையது தான். இதுவரை வியட்நாமிற்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிகளுக்கு மக்கள் தான் சொந்தக்காரர்கள். மக்க ளோடு மக்களாக கலந்து இருப் பதே கட்சியின் பலமாகும். அதிகார வர்க்கத்தனம், மக்க ளிடமிருந்து தனிமைப்பட்டுக் கிடத்தல் போன்றவை நாட்டிற் கும், கட்சிக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்திவிடும்.

தற்போது நடைபெற்று வரும் மாற்றங்களும் சோசலிச சமூகத்தைக் கட்டும் பணியா கவே உள்ளது. அந்நிய முத லீட்டை நாங்கள் வரவேற்கி றோம். சோசலிச சந்தைப் பொருளாதாரத்தை நாங்கள் கட்டி வருகிறோம். உயர் தொழில் நுட்பத்தை மாற்றிக் கொடுக் கும் முதலீட்டையே வியட்நாம் வரவேற்கிறது. ஊகபேரம் நடக் கும் பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டை நாம் வரவேற்க வில்லை என்று குறிப்பிட்டார்.

வரும் ஏழு நாட்களில் பொதுச்செயலாளரின் நகல் அறிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. புதிய தலைமையும் தேர்வு செய்யப்படவுள்ளது. ஜனவரி 19 ஆம் தேதியன்று மாநாடு நிறைவு பெறுகிறது

கருத்துகள் இல்லை: