திங்கள், 24 ஜனவரி, 2011

தமிழர்களை வஞ்சிக்கும் காங்கிரஸ், திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவீர் :திருமாவளவன்

மீனவர் ஜெயக்குமாரை இலங்கை கடற்படை கொன்ற சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். சிரிப்பு கருத்துகள்

கடந்த 12-ந்தேதி நாகை மாவட்டம் சின்னங் குடியைச் சேர்ந்த மீனவர் பாண்டியன் இதே சிங்கள இனவெறியர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அந்த வேதனையின் வலி மறைவதற்குள் மீண்டும் ஜெயக்குமார் என்பவரை படுகொலை செய்துள்ளது இடிமேல் இடி விழுந்த பெருங்கொடுமையாய் நெஞ்சைச் சுட்டெரிக்கிறது. அடுக்கடுக்கான படு கொலைகள் நடந்தும் கூட இந்திய அரசு இத்தகைய போக்குகளை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை என்பது சிங்களவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவே அமைகிறது.

சர்வ தேசக் கடல் எல்லையைத் தாண்டி வந்து தமிழக மீனவர்களின் உடமைகளைச் சூறையாடுவதும் எண்ணற்ற உயிர்களைப் பறிப்பதும் சிங்களவர்களின் வாடிக்கையாகவே அமைந்துள்ளது. கடந்த 1983-ம் ஆண்டிலிருந்து தொடரும் இந்த கொடுமைகளை கண்டிக்கவோ தடுக்கவோ இந்திய அரசு ஒரே ஒரு முறை கூட முன்வரவில்லையென்பது மேலும் வேதனையளிக்கிறது.

தமிழீழ மக்களை மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிற இந்திய அரசின் போக்கையும் இலங்கை அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது.

Logoஎன்ன கொடுமை சார் இது

இவர்தான் கடந்தவாரம் வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற செய்ய தீவிரமாக போராடும் என்று அறிவித்துவிட்டு வந்தார் இப்ப என்னடான்னா

இந்திய அரசை வழி நடத்தும் சாணக்கியர் சுயமரியாதை சுயம்பு, அம்பேத்கர் சுடர்( உத்தபுரம், காங்கயநல்லூர் , துணைவேந்தர் காளியப்பன், உமாசங்கர் ஐஏஎஸ் இவற்றை மறந்துவிடுங்கள்) விருது பெற்ற நாயகர் முத்தமிழ் கலைஞர் ஆட்சியை எதிர்த்து வாய்வீச்சு சபாஷ்.....

2 கருத்துகள்:

bandhu சொன்னது…

அது போன வாரம்! இது இந்த வாரம்!

இதையெல்லாம் நீங்க எலெக்ஷன் -க்கு முன்னால மறந்துர மாட்டீங்க? அத நம்பித்தான் இருக்கார் இவரு!

விடுதலை சொன்னது…

bandhu said...

// இதையெல்லாம் நீங்க எலெக்ஷன் -க்கு முன்னால மறந்துர மாட்டீங்க? //

ரொம்ப சரியதான் சொல்ரிங்க என்ன பன்றது......