திங்கள், 24 ஜனவரி, 2011

ஹலோ டியூனில் சினிமா பாடல் மோசடி


சென்னையைச் சேர்ந்த பைசோர் ரெக்கார்ட்ஸ் உரிமையாளர் காஜா மொய்தீன், சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:

நாங்கள் சினிமா பாடல் கேசட்டுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். வோடபோன், ஏர்டெல் போன்ற மொபைல் நிறுவனங்கள் எங்களிடம் அனுமதி பெறாமல் நாங்கள் தயாரித்த கேசட்டுகளில் இருந்து பாடல்களை ஹலோ டியூன்களாக வாடிக்கை யாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது சட்ட விரோதமானது. இது குறித்து அவர்களுக்கு நோட் டீஸ் கொடுத்தோம். இதற்கு பதில் இல்லை.

எனவே அந்த நிறுவ னங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய குற்றப்பிரிவு, காவல் ஆணை யரிடம் புகார் கொடுத் தோம். அவர்கள் மீது வழக் குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் மேல் நடவடிக்கை எதுவும் இல்லை. நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி அக்பர் அலி திங்களன்று (ஜன. 24) விசாரித்தார். மனுதாரர் சார்பாக வழக் கறிஞர் எழில் ஆஜரானார். காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, இந்த புகார் குறித்து சிபிசி ஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகி றார்கள். 3 மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம் என்றார்.

இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு, 3 மாதத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் படும் என காவல்துறை தெரி வித்திருப்பதால் வழக்கை இத்துடன் முடித்துக் கொள் வதாக அறிவித்தார்

கருத்துகள் இல்லை: