புதுதில்லிப் பயணம் அரசியல்ரீதியாகவும், அரசுரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது என்று சென்னை திரும்பிய முதல்வர் கலைஞர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதற்கு அடுத்த நாளே புதுதில்லியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசா கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சென்னையில் கூடிய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறி முதல்வருக்கு நன்றி பாராட் டும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை திமுக பொதுக்குழுவில் கலந்து கொண்ட அந்த கட்சிக்காரர்களே கூட நம்ப மாட்டார்கள்.
பெட்ரோல் விலை, திமுகவும் அங்கம் வகிக்கும் மத்திய அரசினால் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. இதனால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் திமுக அரசினால் பெட்ரோல் லிட்டர் ஒரு ரூபாய்க்கா விற்கப்படுகிறது. பெட்ரோல் விலை உயர்வால் பல்லாயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர் களும், லட்சக்கணக்கான பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது திமுகவுக்கு தெரியாதா?
உணவுப்பொருட்கள் மீதான பணவீக்கம் பிப்ரவரி முதல்வார நிலவரப்படி 17.5 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் வெங்காயம், பூண்டு, பருப்பு வகைகள் போன்றவற்றின் விலையை விசா ரித்தாலே விலைவாசி கட்டுப்படுத்தப்பட் டுள்ளதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
விலைவாசி உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது முன்பேரவர்த்தகம். இதை தடை செய்ததா ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. முன்பேர வர்த்தகம் என்ற மோசடி முறையால் ஆதாயம் பெறுபவர்கள் கள்ளச்சந்தை பேர்வழிகள் தானே.
உரவிலை உயர்த்தப்பட்டதில் அந்தத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் திமுகவுக்கும் பங்கு உண்டா இல்லையா?
விலைவாசி உயர்வால் அனைத்துப்பகுதி மக்களும் விழிபிதுங்கி நிற்கையில், முதல் வரைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையாக இல்லையா?
ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட 14வது தீர்மானத்தில் தி.மு.கழகம் ஒரு திறந்த புத்தகம் என்றும், அலைக்கற்றை பிரச்சனையை பெரிதுபடுத்தி கழகத்தை களங்கப்படுத்த நினைக்கும் எதிர்க்கட்சிகளுக்கு கண்டனமும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசா ரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ்பாட் டீல் குழு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறை கேடு நடந்திருப்பதை உறுதிசெய்துள்ளது.
இந்த வழக்கை புலனாய்வு செய்துவரும் சிபிஐ, முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அணுகுமுறை தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைக ளுக்கு முரணானது என்றும் சில நிறுவனங் களுக்கு மட்டும் ஏலத்தேதி குறித்து முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும். ஸ்வான், யுனிடெக் நிறுவனங் களுக்கு சாதகமாக ஆ.ராசா செயல்பட்டுள் ளார் என்றும் கூறி யுள்ளது.
எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இப்போது விசாரணைக் குழுவும் புலனாய்வுப்பிரிவும் உறுதி செய் துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது ஒரு தனிப் பட்ட அமைச்சர் சம்பந்தப்பட்ட ஊழல் மட்டுமல்ல. இந்த ஊழலில் கைமாறிய பெருந்தொகை பல்வேறு நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஏலம் எடுத்த சில நிறுவனங்களின் பின்னணி குறித்து வெளி வரும் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது நாட்டின் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாக் கப்பட்டுள்ளது.
தொலை தொடர்புத் துறைக்கு ஆ.ராசா தான் வரவேண்டுமென்று டாடா, அம்பானி போன்ற பெரு முதலாளிகள் நீரா ராடியா என்ற வடநாட்டுப் பெண்மணி மூலம் பேரம் பேசி யதும் தெளிவாகியுள்ளது. நீரா ராடியாவின் உரையாடல் டேப் போலி என்று சம்பந்தப் பட்ட யாரும் இதுவரை மறுக்கவில்லை.
இந்தியாவில் தாராளமயக் கொள்கை அமலாக துவங்கியபிறகு முதலாளிகள் பொரு ளாதார விஷயத்தில் மட்டுமின்றி அரசியல் விஷயத்திலும் நேரடியாக தலையிடுகின் றனர். பல முதலாளிகள் மக்களவையில், அதிக அளவில் மாநிலங்களவையில் இடம் பெற்றுள்ளனர்.
யார் அமைச்சராக வேண்டும், யார் அமைச்சராகக் கூடாது, யாருக்கு எந்தத் துறை என்பதையெல்லாம் இப்போது முதலா ளிகளே தீர்மானிக்கத் துவங்கிவிட்டனர்.
பிரதமருக்கு தெரிந்துதான் எல்லாம் நடக் கிறது என்று ஆ.ராசா அவையில் திரும்ப திரும்பக் கூறினார். அப்போது பிரதமரும் அவையில் இருந்தார்.
இப்போது எதிர்க்கட்சிகள்தான் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துவதாகக் கூறும் கலைஞர் தில்லிக்குச் சென்றிருந்தபோது இது குறித்து பிரதமரிடம் கேட்டறிந்தாரா? அல்லது சோனியாகாந்தியிடமோ பிரணாப் முகர்ஜியிடமோ இது குறித்து விவாதித்தாரா? அப்படி எதுவும் தகவல் வெளியாகவில்லையே.
பேசவேண்டிய இடத்தில் பேசாமல் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றுவதன் நோக்கம் என்ன? ஆ.ராசா அப் பாவி என்றால் ஊழலில் சம்பந்தப்பட்டவர் களை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு இல்லையா?
உலகமயச் சூழலில் காங்கிரஸ், பாஜக போன்ற முதலாளித்துவ கட்சிகள் உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு முத லாளிகளுக்கும்தான் சேவை செய்யும் என் பதை சாதாரண மக்களும் புரிந்துகொள்ளத் துவங்கியுள்ளனர். ஆனால் அந்தக் கட்சி களோடு போட்டிபோட்டு திமுகவும் வரலாறு காணாத வகையில் அதிகார வர்க்கத்தின் துணையோடும், பன்னாட்டு மூலதனத்தின் ஆசியோடும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு சேவை செய்துவருகிறது என்பதைத்தானே ஸ்பெக்ட்ரம் ஊழல் தெளிவுபடுத்துகிறது.
இந்த ஊழலால் திமுகவின் பெயர் மட் டுமல்ல, தமிழகத்தின் நற்பெயரும் பெருமளவு சேதமடைந்துள்ளது. திமுக தேசிய கட்சி யாகிவிட்டது என்பதன் பொருள் இதுதானா?
நல்ல ஆட்சியைக் கூட ஊழல் சீரழிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வருத்தப் பட்டிருக்கிறார். அப்படி ஒன்றும் அவர் நல்ல ஆட்சி நடத்தவில்லை. மோசமான ஆட் சியை மேலும் மோசமாக்கி இருக்கிறது ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ்,காமன்வெல்த் ஊழல் கள். இதில் திமுகவும் காங்கிரசும் இந்த ஊழல்களில் வலுவான கூட்டாளிகளாக இடம்பெற்றுள்ளன.
நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஆ.ராசா மட்டுமே சுருட்டியிருக்கப்போவதில்லை. அது திமுக தலைமையின் குடும்பத்தைச் சேர்ந்த பல கிளைகளுக்கும் போய்ச் சேர்ந்திருக்கும் என்பதே அனுமானம் என்று கூறியிருப்பவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் அல்ல. நேரு குடும்பத்தைச் சேர்ந்த அருண்நேரு தான் இவ்வாறு கூறியிருக்கிறார்.
இவ்வாறு எழும் கேள்விகளுக்கு எல் லாம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு திமுக தலைமைக்கு உண்டு.
திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களில் மாநில சுயாட்சி குறித்த தீர்மானமும் ஒன்று. கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக மாறி மாறி மத்திய அரசில் அங்கம் வகித்து வருகிறது. ஆனால் உயர்கல்வி உட்பட பல்வேறு துறைகளில் மாநில உரிமை கள் படிப்படியாக பறிக்கப்படுகின்றன. இதைத் தடுக்க மத்திய ஆட்சிப்பொறுப்பில் உள்ள திமுக எதுவும் செய்ததாக தெரிய வில்லை. பொதுக்குழு கூடுகிறபோது மட்டும் தான் திமுகவுக்கு மாநில சுயாட்சி ஞாபகம் வருகிறது.
பத்திரிகா தர்மம் குறித்து ஒரு தீர்மானம், திமுகவை விமர்சிக்கும் பத்திரிகைகளை கழகத்தோழர்கள் இனங்கண்டு அந்த ஏடு களை வாங்கக்கூடாது என்று அந்தத் தீர் மானத்தில் கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி ஏடுகள் என்ற முறையில் தனிப்பட்ட முறை யில் தரம் தாழ்ந்த முறையில் அன்றி கொள் கை அடிப்படையில் திமுகவை விமர்சனம் செய்து தீக்கதிர், ஜனசக்தி எழுதத் துவங்கி னால் அரசு விளம்பரங்கள் உடனடியாக நிறுத் தப்படும். இது எந்த வகை பத்திரிகா தர்மம் என்பதை திமுகதான் விளக்கவேண்டும். “இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்” என்ற குறள் முதல்வர் அறிந்த ஒன்றுதான்.
சேதுசமுத்திரத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. மதவாத காரணங்களால் அந்தத் திட்டம் முடக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் அதை தகர்த்து திட் டத்தை நிறைவேற்ற மத்திய அமைச்சரவை யில் இடம் பெற்றுள்ள திமுக எடுத்த நட வடிக்கைகள் என்ன என்பதை சேர்த்து சொல்லியிருக்க வேண்டாமா
ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011
திமுக- திறந்த புத்தகத்தில் மறைக்கப்படும் பக்கங்கள்
-டி.கே.ரங்கராஜன் எம்.பி.,
லேபிள்கள்:
அரசியல்,
அனுபவம்,
கருணாநிதி.,
சிபிஎம்,
தி.மு.க.,
நிகழ்வுகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
இந்த முண்டம் ஏமரா மன்னன் அல்ல;ஏமாத்தறதில் மன்னன்.தமிழ் நாட்டில் உள்ள திராவிடம் பேசும் முண்டங்களில் ஒரு முண்டத்துக்கும் இந்த மூஞ்சியைத் தட்டிக் கேட்கும் முதுகெலும்பு இருக்கிறதா என்ன?
கருத்துரையிடுக