ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

திண்ணைப் பேச்சு ஊழலை ஒழிக்குமா?


மக்களுக்கு மரத்துப்போன விசயமாக மாற்றப் பட்ட ஒன்று இருக்கிறது என்றால் ஊழலைத் தான் சொல்லவேண்டும். தங்களது சட்டப் பூர்வ கடமைகளைச் செய்வதற்கே மனசாட்சி இல்லாமல் அடித்தட்டு மக்களிடம் பணம் எதிர் பார்க்கிறவர்களிடம் கேட்டால், மேலிடங்களின் மெகா ஊழல் விவகாரங்களைச் சுட்டிக்காட்டு கிறார்கள். ஆட்சிபீடத்தின் மேல்மட்டத்தில் இருக்கிறவர்கள் ஊழல் குறித்து என்ன சொல் கிறார்கள்?

“ஊழல் என்பது நல்லாட்சியின் வேர்களை யே அழிப்பதாக, உலக அளவில் நம் நாட்டின் மரி யாதையைத் தகர்ப்பதாக, நம் சொந்த மக்களின் முன் நம்மைத் தாழ்த்துவதாக இருக்கிறது,” என்று கூறியிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். தலைநகர் தில்லியில் நடைபெற்ற மாநில அரசுகளின் தலைமைச் செயலர் கள் மாநாட்டில் இப்படிக் கூறியிருக்கிறார். பூங்கா நிழல் இருக் கைகளில் அமர்ந்து பொழுதுபோகாமல் ஊழல் பேர்வழிகள் பற்றிய கதைகளைப் பேசிக் கொண்டு, பின்னர் நேரமாகிவிட்டது என்று கலைகிற நுனிப்புல் மேய்கிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட திண்ணை முழக்கமாகத்தான் பிரதமரின் பேச்சு இருக்கிறது

இவரது ஆட்சியிலேயே மிகப்பெரிய ஊழல் களில் ஈடுபட்டவர்களைக் கடைசி வரையில் காப்பாற்றத்தானே இவர் முயன்றார்? இவர்களை இந்த அளவுக்குப் புகுந்துவிளையாட விட்டதில் இவருடைய பங்கு என்ன என்ற கேள்வி பூதா கரமாக மேலெழுந்தது, உச்சநீதிமன்றம் கிடுக்கிப் பிடி போட்டது. இப்படியாக, பிரச்சனை கையை விட்டுப்போய்விட்டது என்ற நிலை வந்த பிறகு தானே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன் வந்தார்? தொலைத் தொடர்புத்துறையின் தலை மைச் செயலராக இருந்தவரும், பாமாயில் இறக்குமதி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவரு மான தாமஸ், நாட்டின் தலைமை ஊழல்கண் காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டது எப்படி என்ற மர்மத்தை இன்று வரையில் இவர் தெளிவுபடுத்தவில்லையே. இத்தனை நடந்தபிற கும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தலை மைக் கணக்குத் தணிக்கையாளரின் மதிப்பீடு தவறா னது என்று புதிய தொலைத்தொடர்பு அமைச்சர் கூறினார். அவரை உச்சநீதிமன்றம் தான் இடித்து ரைத்ததேயல்லாமல், பிரதமர் எதுவும் சொல்ல வில்லையே? ஆகவே, இவர் நிகழ்த்திய போதனை உரையைக் கேட்டு, மனசாட்சியுள்ளவர்கள் மனதுக்குள்ளாவது சிரித்திருப்பார்கள்!

இவ்வளவு பெரிய ஊழல்கள் தாண்டவமாடு வதற்கு அடிப்படையே உள்நாட்டு - வெளி நாட்டு ஏகபோக முதலாளிகளின் நாட்டாண்மை தான். நவீன தாராளமயக் கொள்கைக்கும் ஊழல் பெருக்கத்துக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. ஆனால், பொருளாதார மேதை என்று புகழப்படும் பிரதமரோ, “போட்டியைக் கொண்டு வருதல், நவீன தொழில் நுட்பங்களுக்கான பரந்த வாய்ப்பு ஆகியவை ஊழலுக்கான வாய்ப்பு களைக் குறைக்கும்,” என்று கூறியிருக்கிறார். இவர் கூறுகிற போட்டி என்பதன் பொருள் மேலும் மேலும் சந்தை சக்திகளிடம் நாட்டின் பொருளாதாரத்தை ஒப்படைப்பது என்பதுதான். இதுவும், நவீன தொழில் நுட்பங்களும் எப்படி ஊழலைக் குறைக்குமோ? தொடரும் என்பதே உண்மை.

பிரதமரிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது இப் படிப்பட்ட உரைகளை அல்ல, உண்மையான நடவடிக்கைகளை. மேற்கு வங்கத்திலும், கேர ளத்திலும், திரிபுராவிலும் இடதுசாரிகள் தலை மையிலான அரசுகள் நேர்மைக்கான முன்னு தாரணங்களாகத் திகழ்கின்றன. அந்த அரசுகள் மீது அவதூறு பொழிவதற்கு முனைகிறவர் களோடு தோள் சேர்ந்து நிற்கிற பிரதமர், அந்த முன்னுதாரணத்திலிருந்து கொஞ்சமாவது கற் றுக்கொள்வாரா?

கருத்துகள் இல்லை: