செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

அம்பானிகள் சிரிக்கிறார்கள்
நிதியமைச்சகத்தின் தில்லி நார்த் பிளாக் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. பட்ஜெட் தயாரிப்பு வேகமாக நடந்து வருகிறது.

பட்ஜெட்டிற்கான முன் - ஆலோசனைகள் முடிந்துவிட்டன. எனவே நார்த் பிளாக் தற்போது உளவுத்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்திருக்கிறது.

பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், ஊழியர்களின் ஒவ்வொரு அசைவையும் சீருடையற்ற உளவுத்துறைக்காரர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியாட்கள், பத்திரிகையாளர்கள் உட்பட யாரும் நார்த் பிளாக்குக்குள் அனுமதிக்கப் படுவதில்லை.

பட்ஜெட் தயாரிப்பிற்கான சக்கரம் பொதுவாக செப்டம் பரிலேயே சுழலத்துவங்கிவிடும். பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் காலை 11 மணிக்குச் சமர்ப்பிக்கப் படுவதே தற்போதைய நடைமுறை. மே மாதம் வரை பட் ஜெட் சக்கரம் ஓடும். இவ்வளவு ரகசியமாகத் தயாரிக்கப் படுகிறது பட்ஜெட். ஆனால் இப்பட்ஜெட்டுகளால் கால காலமாய் யார் பயன்பெறுகிறார்கள் என்பது மட்டும் ரக சியமில்லை.

அம்பானிகள் சிரிக்கிறார்கள்.

வாய் பொத்தும் குரங்கு

2011-பட்ஜெட் பிப்ரவரி 28ம் தேதி தாக்கல் ஆகப்போகிறது. சட்டமன் றத் தேர்தல்கள் வரவிருப்பதால் ஆரவாரமாய் சில ஒதுக்கீடுகள் அறிவிக்கப் படலாம். ஒதுக்கப்படுவ தெல்லாம் ஒதுங்குகிறதா? என்பதே கேள்வி.

மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்ட அமலாக்கம் பற்றி பக்கம்பக்கமாக விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. 2010-11 பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக ரூ.44,000 கோடி களை மத்திய அரசு ஒதுக் கீடு செய்திருந்தது. டிசம்பர் 31 வரையிலான 9 மாத காலத்தில் செலவிடப்பட்டிருப்பது ரூ.20854 கோடிகள் மட்டுமேயாகும். 56 சதவீதம் மட்டுமே ஒதுங்கியிருக்கிறது.

இப்படி ஒதுக்குவதிலும், ஒதுங்குவதிலுமுள்ள இடை வெளி இந்திய பட்ஜெட் வரலாற்றிலும் புதிது அல்ல. இந்த மகாத்மாகாந்தி தேசிய கிராம வேலை உத்தரவாதத் திட்டத்திற்கும் புதிது அல்ல. 2008-09ல் 72 சதவீத ஒதுக் கீடு மட்டுமே செலவிடப்பட் டது. 2009-10ல் 76 சதவீதம் மட்டுமே கரை ஒதுங்கியது. இதனால் சராசரிக் குடும்ப வேலை நாட்களும் திருக்கின்றன. 2008-09ல் 47 நாட்களாகவும், 2009-10ல் 54 நாட்களாகவுமே இருந்துள் ளன. 2010-11லும் இது 35 நாட் களாக மேலும் குறைந்துள்ளது. 100 நாள் வேலைத்திட் டத்தின் நிலைமை இதுதான்.

இந்த ஆண்டு 64000 கோடிகள் வரையிலான ஒதுக் கீடு அறிவிக்கப்படலா மென்ற செய்திகள் வருகின் றன. வாயைப் பொத்திக் கொண்டு அமர்ந்திருக்கும் காந்தியின் குரங்குதான் நினைவுக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை: