புதன், 9 மார்ச், 2011

1 லட்சத்து 76 ஆயிரம் கோடியும், 63 சட்டமன்ற தொகுதிகளும்


தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்க திமுக சம்மதித்துள்ளது. இதைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையில் கடந்த சில நாட் களாக நடைபெற்று வந்த இழுபறி முடி வுக்கு வந்துள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 48 தொகுதி கள் ஒதுக்கப்பட்டன. இதுவே அதிகம் என்று திமுகவினர் வருத்தப்பட்டனர். தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தோடு ஒப்பிடும் போது 48 தொகுதிகள் மிகவும் அதி கம் என்று ஆதங்கப்பட்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு திமுக மத்திய அமைச்சரவையில் தங்களுக்கு சில குறிப்பிட்ட இலாகாக்கள்தான் வேண் டுமென்று பிடிவாதம் பிடித்தது. குறிப்பாக, தொலைத் தொடர்புத் துறை தங்களுக்கு வேண்டுமென்று வாதாடி பெற்றது. இதற்கு என்ன காரணம் என்பது மத்திய தலைமை தணிக்கைக் குழு அதிகாரியின் அறிக்கை வெளிவந்த பிறகுதான் தெளிவானது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசு கஜானாவிற்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிஏஜி குற் றம்சாட்டியது. இந்த அளவுக்கு பெரும் தொகை சுருட்டப்பட்டது கண்டு நாடே அதிர்ச்சி அடைந்தது.

இந்த ஊழல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி 2007 நவம்பர் மாதத்தி லேயே பிரதமருக்கு கடிதம் எழுதியி ருக்கிறார். ஆனால், பிரதமர் இதை கண்டுகொள்ளவில்லை. உச்சநீதி மன்றத்தின் உத்தரவு அடிப்படை யிலேயே இந்த ஊழல் வழக்கு தொடர்பான விசாரணை தீவிரம டைந்தது. ஆ.ராசா ராஜினாமா செய் தார். தற்போது திஹார் சிறையிலே அடைக்கப்பட்டுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் எந்தளவுக்கு நீண்டுள்ளது என்று தொடர்ச்சியாக தகவல்கள் வெளிவந்தன. முதல்வர் குடும்பத்தினர் பங்குதாரர்களாக உள்ள கலைஞர் டி.வி.யில் ஸ்பெக்ட் ரம் ஊழலில் தொடர்புடைய மும்பை நிறுவனம் முதலீடு செய்ய பேரம் செய்யப்பட்ட விபரமும் வெளியா னது. கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது.

இந்தநிலையில்தான் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங் கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடை பெற்றது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிக் கொண்ட திமுகவை காங்கிரஸ் உருட்டி மிரட்டி பணியவைக்க முயற் சித்தது. காங்கிரசுக்கு 57 தொகு திகள் வரை ஒதுக்க திமுக முன்வந் ததாகவும், குலாம் நபி ஆசாத் நடத் திய பேச்சுவார்த்தையின் அடிப்படை யில் 60 தொகுதிகள் தரவும் ஒப்புக் கொண்டதாகவும் ஆனால், தில் லிக்கு சென்று தொலைபேசியில் 63 தொகுதிகள்தான் வேண்டுமென் றும், அதுவும் அவர்களால் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறியதால் மத் திய அரசிலிருந்து திமுக விலக முடிவு செய்துள்ளது என்று திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானத்தில் கூறப்பட்டது.

காங்கிரசின் இந்தப் போக்கு அதிர்ச்சி தரக் கூடியதாக அமைந்தி ருப்பதாகவும், இதுவரை தி.மு. கழகம் இப்படியொரு நிலையை சந்தித்தது இல்லை என்றும் திமுக தலைவர் கலைஞர் விடுத்த அறிக்கையில் வேதனை தெரிவித்தார்.

அறிவித்தப்படி ராஜினாமா செய் வதற்காக மு.க.அழகிரி உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் தில்லி புறப்பட் டனர். கனகவிஜயன் தலைமையில் கல்லேற்றி கொண்டு வந்த சேரன் செங்குட்டுவனின் பெருமிதம் அவர் களின் முகத்தில் தெரிந்தது. காங்கிர ஸின் தலையில் கல்லேற்றாமல் விட மாட்டார்கள் என திமுக தொண்டர் கள் மகிழ்ந்தனர். மாநிலத்தின் பல் வேறு இடங்களில் திமுகவினர் பட் டாசு வெடித்து, இனிப்பு கொடுத்து கொண்டாடினர். இப்போது திமுக தலைமையின் சரணாகதி பட லத்தை கண்டு அந்த தொண்டர்கள் எந்தளவுக்கு வேதனை அடைவார் கள் என்பதை புரிந்து கொள்ள முடி கிறது.

தி.க. தலைவர் வீரமணி விடுத்த அறிக்கையில், குட்ட குட்ட குனிப வன் முட்டாள்; திமுக தனது சுய மரியாதையை விட்டு விடக் கூடாது; சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ராஜகுருவான ஆசிரியர் வீரமணி, திமுகவின் வில கல் முடிவை தாய்க் கழகம் மகிழ் வோடு வரவேற்பதாகவும், சுயமரி யாதை பாரம்பரியத்தில் வந்த திமுக எடுத்துள்ள நல்ல முடிவு இது என் றும் புளகாங்கிதப்பட்டு அறிக்கை விடுத்தார். கலைஞரை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். சுப.வீரபாண்டியன், திருமாவளவன் போன்றவர்களும் இந்த முடிவை வரவேற்றனர். திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று பாமகவும் அறிவித்தது.

ஆனால், ராஜினாமா செய்யச் சென்ற திமுக அமைச்சர்கள் ராஜி னாமா கடிதத்தை தரவில்லை. மாறாக, பிரணாப் முகர்ஜி, சோனியாகாந்தி என்று பலரது வீட்டு வாசலில் தவம் கிடக்க நேர்ந்தது. இரண்டு நாள் அலைச்சலுக்கு பிறகும் திமுகவினால் எதையும் சாதிக்க முடியவில்லை. இதுதான் கூட்டணி தர்மமா என்று சோனியா காந்தி சீறியதாக ஊட கங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெ னவே கேட்ட 63 தொகுதிகளை காங் கிரஸ் அப்படியே அல்வா துண்டு போல பறித்துவிட்டது. மத்திய அர சிலிருந்து விலகுவதாக திமுக விடுத்த மிரட்டலை காங்கிரஸ் அலட்சியப் படுத்திய தங்களுடைய வழிக்கு திமுகவை கொண்டு வந்துவிட்டது.

தொலைக்காட்சியில் குலாம் நபி ஆசாத் 63 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுவிட்டது குறித்து மகிழ்ச்சி பொங்க அறிவிக்கிறார். அருகில் அஞ்சாநெஞ்சர் என்று திமுகவி னரால் அழைக்கப்படும் அழகிரி பரி தாபமாக நின்று கொண்டு, இது வெற்றி கூட்டணி என்கிறார்.

1967ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் உதவியுடன் அறிஞர் அண்ணா, காங் கிரசுக்கு தமிழ்நாட்டில் சாவு மணி அடித்தார். ஆனால், இன்று அதே காங்கிரஸ் திமுகவின் உதவியுடன் புழக்கடையின் வழியாக உள்ளே நுழைய முயல்கிறது.

சுயமரியாதை உள்ள திமுக தொண்டர்கள் இதை எப்படி ஏற் பார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிக் கொண்ட காரணத்தினால் திமுக தலைமை இவ்வாறு வளைந்து குழைந்து செல்கிறது. இந்தக் கூட் டணியை முறியடிப்பதே சுயமரி யாதை உள்ள திமுக தொண்டர் களின் கடமையாக இருக்க முடியும்.

ஆனால், இந்த நாள் இனிய நாள் என்கிறார் கலைஞர். இனி குனி யவே முடியாத அளவிற்கு திமுக குனிந்துவிட்டது மகிழ்ச்சி அளிக்கி றது போலும்.

காங்கிரசுக்கு எதிராக தம்மால் உருவாக்கப்பட்ட திமுக, இன்றைக்கு இவ்வாறு சரணாகதி அடைந்திருப் பது கண்டு கல்லறையில் நீடுதுயில் கொண்டுள்ள அண்ணா திரும்பிப் படுத்திருப்பார்.

- டி.கே.ரங்கராஜன் எம்.பி.

2 கருத்துகள்:

Yoga.s.FR சொன்னது…

///ஆனால், இந்த நாள் இனிய நாள் என்கிறார் கலைஞர். இனி குனியவே முடியாத அளவிற்கு திமுக குனிந்துவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது போலும்.///"அந்த" (தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பும்) இனிய நாள் இன்னமும் வரவில்லை!மே-13 என்று அறிவித்திருக்கிறார்கள்!!!!!!!!!!!

விடுதலை சொன்னது…

நிச்சயம் வரும்
யோகா
தங்கள் கருத்துக்கு நன்றி