புதன், 9 மார்ச், 2011

உண்னும் உணவை தட்டி பறிக்கும் பண்னாட்டு கம்பெணிகள் :-பிரபாத் பட்நாயக்


முன்னேறிய முதலாளித்துவ நாடுகள், மிக மிக மோசமான பொருளாதார மந்த நிலை மற்றும் வேலையின்மை ஆகிய நெருக்கடி யில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. அதே வேளையில், வளரும் நாடுகளோ, (முன் னேறிய நாடுகளின்) இந்த மந்த நிலையின் பாதிப்புக்களையும் சந்தித்துக் கொண்டிருக் கின்றன. அதற்கும் மேல், மிகவும் கடுமை யான உணவு நெருக்கடியையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டு களில் இல்லாத அளவிற்கு, பசிப்பிணி என்ற கொள்ளை நோயினால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணா த அளவிற்கு உயர்ந்துள்ளது. இது ஏதோ பெயரளவிற்கு என்று எண்ணிவிட வேண்டாம். மாறாக, (ஆலைகளில்) உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலையோடு ஒப்பிட்டு பார்த்தாலே வரலாறு காணாத விலையேற்றம் என்பதை உணரலாம். உணவுப் பொருட்களின் விலை 2008ல் எகிறி குதித்தது. பின்னர் 2009ல் சற்று குறைந்தது. ஆனால் 2008க்கு முன்னால் இருந்த விலைகளை விட மிக அதிகமாகவே இருந்தது. 2009க்குப் பிறகு விலையேற்றம் தொடர்ச்சியாக ஏறு முகத்திலேயே உள்ளது. சில மூன்றாம் உலக நாடுகளில் உணவு கலவரங்கள் வெடித்துள் ளன. ஏற்கனவே மக்கள் எழுச்சிகள் வெடித் துக் கொண்டிருக்கும் அரபு உலகில், போராட் டங்கள் வெடிக்க கடைசி காரணமே, விண் ணைத் தொடும் விலைவாசி உயர்வுதான்.

2008ல் உணவு தானியங்கள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களின் விலை யும் பாய்ச்சல் வேகத்தில் ஏறின. இந்தியர்கள் மற்றும் சீனர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்ததே விலையேற்றத்திற்கு காரணம் என்று அன் றைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் தெரி வித்தார். மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்த தால் அவர்கள் உணவுப் பழக்கம் பன்முகப் பட்டதாக மாறியது. வளம் சேர்ந்ததால், அவர் கள், வெறும் உணவு தானியங்களைத் தவிர, சிக்கன் மற்றும் மட்டன் ஆகியவற்றை அதிக மாக உட்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் இந்த உயிரினங்கள் ஏராளமான உணவு தானியத் தை தங்கள் உணவாக கபளீகரம் செய்கின் றன. ஆகவே, தனிநபர் வருமானம் உயரும் போது, நேரடியாகவும் மறைமுகமாகவும் தனி நபர் உணவுப் பொருள்(பதப்படுத்தப்பட்ட உணவு உட்பட) நுகர்வும் அதிகரிக்கிறது. புஷ் ஷின் வாதமே, இந்தியா மற்றும் சீனாவில் தனிநபர் வருமானம் மிக வேகமாக உயர்ந்துள் ளது. இதனால் உலக உணவுதானியச் சந் தையில் வரவைவிட மிக அதிகமான தேவை எழுந்துள்ளது. இதன் விளைவாகவே விலை கள் உயர்ந்துள்ளன என்பதாகும். மிகச் சரியாக இந்த வாதத்தையே தனது ஆதர்ச கருத்தாக கொண்டுள்ளார் நமது திட்டக் கமிஷனின் துணைத் தலைவர். அவர் இந்தியாவில் தற் போது உணவுப் பொருட்களின் விலையேற் றத்திற்கான காரணம் இந்தியர்களின் வாழ் வில் வளம் கொழிப்பதே என்று கருத்து தெரி வித்துள்ளார்.

இதைவிட பெரிய பொய் இருக்க முடியாது. தாராளமயம் அமலான காலத்திலிருந்து, நேரி டையாகவும், மறைமுகமாகவும் தனிநபர் உணவு நுகர்வு இந்தியாவில் இறங்குமுகமாக உள்ளது. சரிவு மெதுவாக ஆரம்பித்து, விரை வில் அது அதளபாதாளத்திற்கு சென்றது. இதன் காரணமாக 2008ஆம் ஆண்டில் தனி நபர் உணவு நுகர்வு 1953ஆம் ஆண்டைவிட குறைந்தது. 1953க்குப் பின் எந்த வருடத்தை யும் விட குறைவாக இருந்தது. சீனாவிலும் கூட தனிநபர் மொத்த உணவு நுகர்வு 1996 முதல் 2003 வரை வீழ்ச்சியடைந்தது. அதன் பின்னர், அந்த நாட்டில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இருப்பினும் 2005ஆம் ஆண்டில் கூட 1996ஆம் ஆண்டு நுகர்வு அளவு எட்டப் படவில்லை. ஆகவே 2008ஆம் ஆண்டில் மட்டும் அது எவ்வாறு தாவிக் குதித்திருக்க முடியும்? மேலும் இந்த இரு நாட்டிலும், மக் கள் தொகை வளர்ச்சி குறிப்பிடத்தகுந்த அள விற்கு குறைந்துள்ளது. இதனால், நிகர உணவு நுகர்வு 2008 ஆம் ஆண்டில் 90களின் மத்தி யில் இருந்ததைவிட உயர்ந்திருக்க வாய்ப் பில்லை. ஆகவே 2008 முதல் தற்போது வரை உணவு விலையேற்றத்திற்கான கார ணம், தேவை அதிகரித்தது அல்ல.

விலையேற்றத்திற்கான காரணமாக பலரும் சரியாக சுட்டிக்காட்டுவது ஊக வாணி பத்தையே. ஊகவாணிபம் சாதாரண சூழ்நி லையிலேயேகூட ஊதி ஊதி பணவீக்கத் தை உருவாக்கிவிடும். இந்த நிலையில் அது சப்ளை-டிமாண்ட் எனப்படும் தேவை-விநி யோகம் சமனற்ற சூழல்களில் கனகச்சிதமாக செயல்படும். அதன் காரணமாக பணவீக்கத் தின் பின்விளைவுகளை மேலும் மோசமாக் கும். ஆகவே மொத்த தேவை மற்றும் உற் பத்தி போக்குகளை பார்க்க வேண்டியுள்ளது. அவ்வாறு பார்க்கும் போது இரண்டு திடுக் கிடும் போக்குகள் வெளிப்படுகிறது.

இரண்டு திடுக்கிடும் போக்குகள்

முதலாவது திடுக்கிட வைக்கும் உண் மை, 80களுக்குப் பிறகு உலகம் முழுவதும் உணவு தானிய உற்பத்தி நிகர அளவில் குறிப் பிடத்தக்க அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. சராசரி தனிநபர் உணவு தானிய உற்பத்தி 1980-85ஆகிய ஐந்தாண்டுகளில் 335 கிலோவாக இருந்தது. இது 2000-05 ஆகிய ஐந்தாண்டுகளில் 310 கிலோவாக வீழ்ச்சிய டைந்தது. இதன் அர்த்தம், நுகர்வில் வீழ்ச்சி, பட்டினியில் வாடுவோர் எண்ணிக்கையில் உயர்வு ஆகியவையாகும். 2008ஆம் ஆண்டு விலை உயர்வுக்கு பல வருடங்களுக்கு முன்பே இவை நடைபெற்றது. இதையே வேறு விதமாக கூறலாம். உலக உணவு நெருக்கடி கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்ட தல்ல, மாறாக, கடந்த இருபது வருடங்களாக ஏற்பட்டதாகும்.

இரண்டாவது உண்மை அதைவிட மேலும் திடுக்கிட வைத்திடும். தனிநபர் வருமானம் உலகில் உயர்ந்து கொண்டே போகிறது. இதன் காரணமாக உணவு தானியத்தின் தேவை உண்மையில் உயர்ந்திருக்க வேண்டும். தேவை அதிகரிப்பின் காரணமாக உணவு தானியத்தின் விலையும் உயர்ந்திருக்க வேண் டும். ஒப்பீடு செய்வதற்கு 80களில் ஆலை உற்பத்தி பொருட்களின் விலையை எடுத்துக் கொள்ளலாம். 1980 முதல் 2000வரை இருபது ஆண்டுகளில் ஆலை உற்பத்தி பொருட் களின் விலையையும், உணவுப் பொருட்களின் விலையையும் ஒப்பிடப்பட்டது. அந்த ஒப்பீட்டில் உணவுப் பொருட்களின் விலை 46 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதை பார்க்க முடிந்தது. உண்மையில் விலைவாசி உச்சத் தில் இருந்த 2008ஐ 1980ஆண்டோடு ஒப் பிடும் போது, தனிநபர் உணவு தானிய உற் பத்தி வீழ்ச்சியடைந்திருந்தது. இந்த நிலையி லும் ஆலை உற்பத்தி பொருட்களுடன் ஒப் பிடும் போது உணவு தானிய விலை வீழ்ச்சி யடைந்திருந்தது.

வருமான வீழ்ச்சி

வருமான வீழ்ச்சி வாங்கும் சக்தியை குறைப்பதால் தேவையை குறைக்கிறது. மேலும் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகிய இரண்டையும் அது வெட்டிக் குறைக்கிறது. இது விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர் களை மிகவும் பாதிப்பிற்குள்ளாக்குகிறது. ஆத லால் அவர்கள் இந்த தொழிலிருந்து பெரும் லாபத்தை பெரிய அளவிற்கு குறைக்கிறது. இந்த காரணியும், இதோடு அரசின் ஆதரவும், பாதுகாப்பும் விவசாயிகளுக்கும், சிறு உற்பத்தி யாளர்களுக்கும் இல்லாத நிலை ஏற்படுத்தப் படுகிறது. (இந்திய அரசு கிட்டத்தட்ட விவசாய தொடர் நிகழ்வுகளை முழுமையாக மூடுவிழா நடத்தியுள்ளது இந்த வாதத்தை உறுதி செய் கிறது). இவ்வாறு செய்வதும் நவீன தாராள மயத்தின் ஒரு குணாம்சமே. ஆனால், இதன் விளைவாக இந்த துறைகளில் உற்பத்தி பெரும் வீழ்ச்சியை சந்திக்கிறது. ஆகவே, வரு மான வீழ்ச்சி பொருளாதாரத்தின் உணவு தானிய உற்பத்திப் பிரிவை மிகவும் குறை வான தேவை- விநியோகம் என்ற பொறியில் மாட்டிவிடுகிறது.

இதன் தொடர்விளைவாக உணவு தானி யத்தின் விலை தொடர்ந்து குறைவாகவே இருக்கும். அல்லது ஆலை உற்பத்தி பொருட் களின் விலையுடன் ஒப்பிடும் போது வீழ்ச்சி யடையும். தனிநபர் உற்பத்தி வீழ்ச்சியடைவ தற்கு நடுவில், அந்த அமைப்பில் திடீர் தேவை என்ற ஒரு அதிர்ச்சி அலை ஏற்படுத்தப்படும் போது, அது பணவீக்க வெடிப்புச் சிதறல் களை உருவாக்குகிறது. இதற்கு மேல் ஊக வாணிபத்தின் தாக்குதல்களும் சேரும் போது அந்த தாக்குதல் பெரும் அழிவை ஏற்படுத் துகிறது. உலக உணவு பொருளாதாரத்தில் அத்தகைய ஒரு அதிர்ச்சி அலையை பயோ பியுள் எனப்படும் உயிரி எரிபொருள் ஏற்படுத் தியது. உயிரி எரிபொருள் உற்பத்திக்காக மிகப் பெரிய அளவில் தானியங்கள் திருப்பி விடப் பட்டதால் இந்த அதிர்ச்சி அலைகள் ஏற்பட் டது. மிகப்பெரிய உணவுதானிய உற்பத்தி நாடாக திகழும் அமெரிக்காவில் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு உயிரி எரிபொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.

இதுவே 2008 உணவு தானிய விலை விண்ணைத் தொட்டதற்கான அடிப்படை காரணம். கச்சா எண்ணெய்யின் விலை ஊக வாணிபத்தின் காரணமாக கன்னாபின்னா வென்று உயர, பெரும் அளவில் உணவு தானி யம் எரிபொருள் தயாரிப்பிற்கு திருப்பிவிடப் பட்டது. இது உணவு தானியங்களின் விலை யை கடுமையாக உயர்த்தியது. இதற்கு மேலும் ஒன்றுண்டு. இந்த தானியம்-எரிபொருள் தொடர்பின் காரணமாக, எண்ணெய் விலை யுடன் உணவு தானியத்தின் விலையை ஊக வணிகர்கள் இணைத்துப் பார்க்கின்றனர். ஆகவே, ஒவ்வொரு முறை கச்சா எண்ணெய் யின் விலை உயரும் போதும், அதிகமான தானியம் எரிபொருள் உற்பத்திக்கு திருப்பி விடப்படும் என்ற ஊகத்தில், உண்மையில் திருப்பி விடப்படாமலேயே, உணவு தானியத் தின் விலை ஏற்றப்படுகிறது. எந்த நபர் உணவு தானியத்தை எரிபொருள் தயாரிப்பிற் காக திருப்பிவிட்டாரோ, அதே நபர், ஜார்ஜ் புஷ், உணவு விலையேற்றத்திற்கான தவ றான விளக்கத்தை அளித்தார். தனது குற்றத் தை மறைப்பதற்காக அவர், இந்தியர்கள் மற் றும் சீனர்கள் அதிகமாக சாப்பிடுவதால் உணவு விலைகள் ஏறியதாக பொய்யாக கருத்து தெரிவித்தார்.

உணவு பற்றாக்குறையை போக்க தற்போது ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் விவசாயம் கார்ப்பரேட் மூலதனத்திற்கு திறந்துவிடப்பட வேண்டும் என வாதிடப்படுகிறது. ஒரு வாதத்திற்காக நாம் அத்தகைய ஒரு செயல் உற்பத்தியை பெருக்கும் என்று வைத்துக் கொள்வோம். அது உலக வரைபடத்தில் பட்டினியால் வாடு வோர் எண்ணிக்கையை பெருமளவுக்கு அதிகரிக்கும். ஏனெனில் அது விவசாயிகளையும்; விவசாயத் தொழிலாளர்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழிவிட நிலத்திலிருந்து பிடுங்கி எறியும். அதன் மூலம் அவர்களின் வாங்கும் சக்தி ஒட்ட உறிஞ்சப்படும். ஆகவே, உலக உணவு நெருக்கடியிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் உண்டு. விவசாயிகளின் உற்பத்தி முறையை நில விநியோகத்தின் மூலம் மறு சீரமைப்பது, அரசு மீண்டும் விவசாயிகளுக்கு ஆதரவாக தலையிடுவது, கார்ப் பரேட் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவ னங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க, கிராமப்புறத்திற்கான நிதி உதவிகளை அதிகமாக அரசே செய்வது, கிராமப்புற வாழ்க் கையை மேம்படுத்த அரசு நலத்திட்ட செலவு களை அதிகப்படுத்துவது ஆகியன. கேள்வி இதுதான், நவீன தாராளமயம் இதனை அனுமதிக்குமா?

பீப்பிள்ஸ் டெமாக்ரசி பிப்.21-27 இதழில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்: தூத்துக்குடி ஆனந்தன்.

2 கருத்துகள்:

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அனைவரும் படிக்கவேண்டிய ஆக்கம் இது. பகிர்வுக்கு நன்றி.

விடுதலை சொன்னது…

கக்கு - மாணிக்கம் தங்கள் கருத்துக்கு நன்றி