புதன், 30 மார்ச், 2011

திமுகவினரின் கொடூரம் 10 நாய்கள் படுகொலை


பணப்பட்டுவாடாவிற்கு தடையாக இருந்த நாய்கள் விஷம்வைத்து சாகடிக்கப் பட்ட கொடூர சம்பவம் மதுரை கிழக்குத் தொகுதியில் உள்ள குலமங்கலம் கிராமத்தில் நடந் துள்ளது.

இங்கு திமுக சார்பில் பெ.மூர்த்தியும், அதிமுக சார்பில் தமிழரசனும் போட்டியிடுகின்றனர். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க பல்வேறு தில்லு முல்லு வேலைகள் திமுக தரப் பில் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசின் அறிவிக் கப்படாத இரவு நேர மின்தடை யை பயன்படுத்தி வாக்காளர்க ளுக்கு பணம், அன்பளிப்புகள் கொடுக்க வாய்ப்பிருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.

இந்நிலையில் இக்கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட நாய்கள் கொலை செய்யப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குலமங்கலத்தில் தேநீர் கடை நடத்தி வரும் மனோகரன், துரைசாமி, கண்ணன், பாப்பாத்தி, முருகன் ஆகியோரின் நாய்கள் திடீரென இறந்துள்ளன. இந்தச் சம்பவம் நாய் வளர்த்தவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இது குறித்து கிராமத்தில் வசிப்பவர்களிடம் விசாரித்த போது, கோழிக்கழிவுகளில் குருணை மருந்தை கலந்து விட்டுள்ளனர். கோழிக்கழிவு களை சாப்பிட்ட நாய்கள் இறந்து விட்டன. இரவு நேரங்களில் பணம், அன்பளிப்பு வழங்குவதற்கு நாய்கள் இடை யூறாக இருப்பதால் நாய்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை மறுப்பதற் கில்லை என்றனர். தேர்தல் களத்தில் நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

3 கருத்துகள்:

ராஜேஷ், திருச்சி சொன்னது…

இப்படி ஒரு காமெடி பீசா போய்டீங்களே விடுதலை

விடுதலை சொன்னது…

ராஜேஷ்
மனிதர்களையே அன்னன் அழகிரி தலைமையில் போட்டு தள்ளும் உங்களுக்கு இது எல்லாம் காமெடியாதன் இருக்கும்

கொஞ்சமும் கருனையில்லாத இல்லாத செயலை என்னவென்று சொல்வது

ராஜேஷ், திருச்சி சொன்னது…

காமெடி பண்ணாதீங்க விடுதலை.. வாய்ல வந்ததை எழுதகூடாது .. எங்க எரியால 13 பண்ணிகுட்டிங்க செத்து கிடக்கு.. கம்யூனிஸ்ட் ஆளுங்க அடிச்சு கொன்னுட்டாங்க தெரியுமா?