வியாழன், 31 மார்ச், 2011

திமுக பண‘கிரி’யின் ‘மு.க’வரி...“பாரா உஷார்! பதுங்கி வருகிறது பணநாய கம்!” என கலைஞர் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் எதிர்க்கட்சிகள் கோடிகோடியாகப் பணத்தைக் குவித்து வைத்துக்கொண்டு வாக்கு களை விலைபேச அலைவதாக நா நடுங்காமல் பொய் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகிறார், “கார்களிலும் வேன்களிலும் பணத்தைக் குவித்து வைத்துக்கொண்டு வாக்குகளை விலை பேசு வோரை கையும் களவுமாக காவலர்களிடம் பிடித்துக் கொடுக்க வேண்டிய கடமை உணர் வும் நமக்குள்ளது” இதைப் படிக்கிறபோது ‘சாத் தான் வேதம் ஓதுகிறது’ என்ற பழமொழியின் முழுப் பொருளும் பளிச்சென புலப்படுகிறது.


மக்களை அப்பாவிகளாகவும் ஏமாளிகளாக வும் காசு கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம் என்றும் கங்கணம் கட்டித் திரிவது யார்? என் பதை இந்த உலகமே அறியும். வாக்காளர் களுக்கு காசு கொடுப்பது புதிய செய்தி அல்ல. காலங்காலமாய் நடப்பதுதான். அவை மிகச் சிறிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்ததுண்டு. ஆனால், இப்போது நடப்பது போல் திட்டமிட்டு வீடு வீடாய் கத்தைக் கத்தை யாய் கரன்சிகளை அள்ளி வீசுகிற கொடூர ஜன நாயக விரோத செயலின் தாய்-தந்தையே திமுக தானே. இதனை அமெரிக்கத் தூதரே தன் நாட் டுக்கு அனுப்பிய ரகசிய உளவுத் தகவலில் குறிப் பிட்டிருக்கிறார். அந்த அளவு பணநாயகத்தை உயர்த்திப் பிடித்தது திமுக: இதனை செயல் படுத்திய மு.க.அழகிரியை பாராட்டி - ‘திருமங் கலம் பார்முலா’ என அதற்கு ஒரு பெயரும் இட் டதை கலைஞர் கடிதம் எழுதும்போது மறந்து போனாரோ!

இப்போது காவல்துறை வாகனங்களிலேயே பணம் கடத்தப்படுவதை எதிர்க்கட்சிகளும் சுட் டிக்காட்டுகின்றன. தேர்தல் ஆணையமும் ஒப்பு தல் வாக்குமூலம் தருகிறது. அதே சமயத்தில் லத்திகா சரணை தேர்தல் நேரத்தில் மாற்றிய தேர்தல் ஆணையச் செயல் காவல்துறையின் தார்மீக உணர்வை சிதைத்துவிட்டதாக திமுக அரசு நீதிமன்றத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறது. உண்மையில் காவல்துறையை தங்கள் கட்சி யின் பணம் வழங்கும் ஏஜென்டுகளாக தரம் தாழ்த்தி தார்மீகத்தை சீர்குலைத்தது யார்? என் பதை ஒவ்வொரு வாக்காளரும் நன்கு அறிவார்.

தமிழக வாக்காளர்கள் காசுக்கு விலை போகும் ஆடு, மாடுகள் அல்ல. நடப்பது இடைத் தேர்தலுமல்ல. அராஜக ஆட்சியை தூக்கி எறிந்து ஒரு மாற்று ஆட்சியை உருவாக்க வேண் டும் என்கிற உணர்வு பேரலையாய் தமிழகத் தின் மூலை முடுக்கெல்லாம் வீசி அடித்துக் கொண்டிருக்கிறது. சிலரை சில நாள் ஏமாற்ற லாம். பலரை பல நாள் ஏமாற்றலாம். எல்லோ ரையும் எப்போதும் ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது. காலம் மாறிவிட்டது. காற்று திசை மாறி அடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக பண மூட்டைகளோடு எந்தப் பக்கம் தலை நீட்டி னாலும் விரட்டி அடிக்க மக்கள் தயாராகிவிட் டார்கள். துரத்திக்கொண்டுவரும் கூட்டத்திடமி ருந்து தப்பிப்பதற்காக ‘அதோ திருடன் திருடன் பிடி விடாதே’ என கத்திக்கொண்டு ஓடும் திருடனைப் போல இன்று திமுக அணி தோல்வி பயத்தில் பிதற்றத் தொடங்கியிருக்கிறது என்பதே நிதர்சனம்.

தேர்தல் ஆணையமும் மேலோட்டமாக சில கெடுபிடிகள் செய்வதைத் தவிர இன்னும் உருப் படியாய் எதையும் செய்திடவில்லை. ‘இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங் கெங்கோ அலைகின்றாய் ஞானத் தங்கமே’ என்று பாடத் தோன்றுகிறது. ‘மலை’யை ‘கிரி’ என்றும் சொல்வார்கள். பணமலையின் பணகிரி யின் மு..க..வரியை தேர்தல் ஆணையம் அறியா தோ? அழகிரியையும் மற்ற அமைச்சர்களையும் சோதனையிட்டால் போதுமே! செய்யுமா தேர்தல் ஆணையம்?

கருத்துகள் இல்லை: