வியாழன், 3 மார்ச், 2011

ஆ.ராசா மனைவி பெயரில் ரூ.3 ஆயிரம் கோடி பதுக்கல்


முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம் கிடைத்த பணத்தில் ரூ. 3 ஆயிரம் கோடியை தனது மனைவியின் பெயரில் மொரீசியஸ் மற்றும் சீசல்ஸ் நாடுகளில் உள்ள வங்கிகளில் முதலீடு செய் துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சிபிஐ அதிகாரிகள் ஆதாரத்துடன் கண்டறிந்துள்ளதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் திட்ட மிட்டு செய்யப்பட்ட முறைகேட்டின் மூலம் ரூ.45 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட் டுள்ளது என்று சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த ஊழல் மூலம் ஆ.ராசாவுக்கு சுமார் ரூ.3 ஆயிரம் கோடிவரை லஞ்சமாக தரப் பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இந்த பணத்தை ஆ.ராசா தனது மனைவியின் பெயரில் கணக்குத் துவங்கி மொரீசியஸ் மற்றும் சீசல்ஸ் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளார்.

இந்தப்பணம் தொடர்பாக மொரீசியஸ் மற்றும் சீசல்ஸ் நாட்டு அதி காரிகளுக்கு சிபிஐ சார்பில் ஏற்கெ னவே கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சிங்கப்பூர், மொரீசியஸ், சைப்ரஸ், துபாய், ரஷ்யா, நார்வே, ஜெர்ஸி-ஐஸ் லாண்டு, பிரிட்டிஷ் வெர்ஜின் ஐஸ் லாண்டு உள்ளிட்ட பல்வேறு நாடு களில் உள்ள வங்கிகளில் ஊழல் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து பூர்வாங்க விசாரணை நடை பெற்றது. இதில் மொரீசியஸ் மற்றும் சீசல்ஸ் வங்கிகளில் ஊழல் பணம் பதுக்கப்பட்டுள்ளது கண்டறியப் பட்டு அந்த நாடுகளுக்கு தகவல் தரப் பட்டுள்ளது என்று சிபிஐ வட்டாரம் தெரிவித்துள்ளதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏடு தெரிவித்துள்ளது.

சிபிஐ விசாரணை திருப்திகரமாக உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் செவ்வாயன்று தெரிவித்தனர். மூத்த வழக்கறிஞர் கே.கே.வி.வேணுகோபால் தாக்கல் செய்த புதிய அறிக்கைக்குப் பின்பு நீதிபதிகள் மேற்கண்டவாறு கூறினர்.

வேணுகோபால் தனது அறிக்கை யில், 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு தொடர்பாக 63 பேரை சிபிஐ விசாரித்ததாக தெரிவித்தார். நாடாளு மன்ற உறுப்பினர்கள், 10 தனியார் தொலைபேசி நிறுவனங்களின் உயரதி காரிகள், தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் விசார ணை நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் மார்ச் 31ம் தேதிக் குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட வேண்டும் என்று கெடு விதிக்கப் பட்டுள்ள நிலையில் விசாரணையை அந்நிய செலாவணி மோசடி உள் ளிட்ட பல்வேறு கோணங்களில் விசா ரிக்க வேண்டியுள்ளதால் ஜூன் மாதம் வரை சிபிஐ அவகாசம் கோரியுள்ளது.

இந்த வழக்கில் ஆ.ராசா நிரபராதி என்று திமுக கூறிவருகிறது. கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆ.ராசாவும் விசாரணை முடிவில் தாம் நிரபராதி என்பது நிரூபிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்நிலையில், ஆ.ராசா ஊழல் பணத்தை வெளிநாட்டு வங்கி களில் பதுக்கியுள்ளதாக வெளியாகி யுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக புதனன்று நடைபெற்ற விசாரணையின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் அரசின் கொள்கையை சில தனியார் தொலைபேசி நிறுவனங்கள் ஆதரிப்ப தாகவும் சில நிறுவனங்கள் எதிர்ப்ப தாகவும் வழக்கறிஞர் வேணுகோபால் அறிவித்தார்.

அரசு முதலில் தனது கொள்கை நிலையை விளக்க வேண்டும் என நீதி மன்றம் கேட்டுக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

ஆனால் நீதிபதிகள் இந்த வாதத்தை நிராகரித்தனர். அரசின் கொள்கை களால் அனைத்துக் கம்பெனிகளும் ஆதாயமடைந்துள்ளன. இந்நிலையில் எந்த ஒரு நிறுவனமும் உங்கள் கொள் கையை எதிர்க்க மாட்டார்கள் என நீதிபதிகள் கூறினர்.

பிரதமருக்கு எழுதிய வார்த்தைகள் ஆட்சேபணைக்குரியது: உச்சநீதிமன்றம்

பிரதமருக்கு ஆ.ராசா 26.12.2007 அன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள வாசகங்களும் அந்த கடிதத்தின் தொனியும் மிகவும் ஆட்சேபணைக்குரியது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

“முதலில் வருபவருக்கு முன்னுரிமை” என்பது குறித்து மறுபரிசீலனை செய்யு மாறு ஆ.ராசாவுக்கு பிரதமர் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளித்து ஆ.ராசா எழுதிய கடிதத்தில், “நியாயமற்றது, பாரபட்சமானது, எதேச்சதிகாரமானது , ஏறுமாறான மனப்போக்கு” என்பன போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார்.

புதனன்று நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கூறுகையில், நாட்டின் மிக உயர்ந்த பொறுப் பில் உள்ள ஒருவருக்கு எழுதப்பட்ட கடிதம் மிகவும் அவமரியாதையான முறையில் அமைந்துள்ளது என கூறினர்.

வயது முதிர்ந்த ஒருவருக்கு எழுதப்படும் கடிதம் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வேறுவகையான மொழியை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று நீதிபதிகள் கூறினர்.

ஆ.ராசாவின் கடிதத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் மிகவும் கவலைக்குரியது. இந்தக்கடிதம் சாதாரண ஒரு குடிமகனுக்கு எழுதப்பட்ட கடிதமல்ல, நாட்டின் பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம், பிரதமரின் முடிவு குறித்த கடிதம் என்று நீதிபதிகள் கூறினர்.

2 கருத்துகள்:

Namy சொன்னது…

What attiude SC against Carporate beneficieries of 2G scam. The SC have real nation interest , scrap all action and order fresh allocation of spectrum.

முகமூடி சொன்னது…

இந்த நாட்டில் இப்போது மிச்சம் இருப்பது சுப்ரீம் கோர்ட் மட்டுமே.... அவர்கள் கூட சீக்கிரம் அரசியல்வாதிகள் வழிக்கு வந்துவிடுவார்களோ என்று பயமாக உள்ளது.