வெள்ளி, 4 மார்ச், 2011

அமெரிக்க ஓநாய்யே லிபியாவில் தலையிடாதே!லிபியாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைமையை பயன்படுத்தி அந்நாட்டின் மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்கா, பிரிட்டன், நேட்டோ ராணுவக் கூட் டமைப்பு ஆகியவை மேற்கொண்டு வரும் முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது.

லிபியாவில் ராணுவ ரீதியாக தலையீடு செய்ய அமெரிக்கா, பிரிட்டன், நேட்டோ ஆகியவை மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவிக் கிறது.

லிபியாவின் கடலோரப் பகுதிகளில் அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை தயாராக நிலை நிறுத்தியுள்ளது. லிபியாவை, விமானங்கள் பறக்கக் கூடாத பகுதியாக அறிவிப்பது தொடர்பாக பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. லிபியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர அனைத்து விதமான பலப்பிரயோக நடவடிக்கைகளையும் பயன்படுத்துவது குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகளின் தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது பிரச்சனைகளை எப்படி தீர்த்துக் கொள்வது என்பதையும், எப்படிப்பட்ட அரசியல் அமைப்பை உருவாக்கிக் கொள்வது என்பதையும் தீர்மானிக்க வேண்டியது லிபியமக்கள் மட்டுமே. இந்நிலையில், மனிதநேய அடிப்படையிலான தலையீடு என்ற பெயரில் லிபியாவின் இறையாண்மையில் எந்தவிதத்திலும் தலையிடுவதற்கு அமெரிக்காவுக்கும், அதன் கூட் டாளிகளுக்கும் எவ்வித உரிமை யும் இல்லை.

இதற்கு முன்பு இராக்கில் நடந்ததுபோலவே, மேற்கத்திய சக்திகள் லிபியாவின் அளப்பரிய எண்ணெய் வளத்தின் மீது தீராத ஆர்வம் கொண்டுள்ளன; தங்களது நலன்களை நிறைவேற்றிக் கொள்ள, லிபியாவில் கடாபி அரசுக்கு எழுந்துள்ள கிளர்ச்சி யை பயன்படுத்திக் கொள்ள முனைகின்றன.

லிபியாவில், அமெரிக்கா அல்லது நேட்டோ படைகளால் எந்தவிதமான ராணுவ தலையீடும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று இந்திய அரசு உறுதியாக பிரகடனம் செய்ய வேண்டும். லிபியாவிலிருந்து இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். (ஐஎன்என்)

3 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

sariyaakaththaan patukirathu...valthukkal

Ezhilaruvi சொன்னது…

எதுக்கு இந்தியாவ இழுக்குறீங்க. அங்கே சோனியாவின் கள்ளக்காதலனை யாரும் கொன்னுட்டான்களோ ? பிறகு ஏன் இந்தியா தலையிட போகுது?

எழிலருவி சொன்னது…

எதுக்கு இந்தியாவ இழுக்குறீங்க. அங்கே சோனியாவின் கள்ளக்காதலனை யாரும் கொன்னுட்டான்களோ ? பிறகு ஏன் இந்தியா தலையிட போகுது?