புதன், 30 மார்ச், 2011

மக்களை ஏமாற்ற முடியாது :திமுக மன்னர்களே



இன்றைய தினம் தமிழக மக்களும் பொதுவாக இந்திய மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலேயே ஆகப்பெரிய பிரச் சனையாக இருப்பது விலைவாசி உயர்வு தான் என்பதைக் கூறுவதற்கு விலைவாசி நிலவரம் குறித்த புள்ளி விபரங்கள் எவற்றை யும் வெளியிடவேண்டிய தேவை இல்லை. மக்களின் உணர்வுகளும் இவ்வாறே இருக்கின்றன என்பதை தேர்தல்கள் தொடர்பாக ஊடகங்களில் நடத்தப்பட்ட பல கருத்துக் கணிப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

‘மீண்டும் எங்களை ஆட்சியில் அமர்த்துங்கள்’ என்ற வேண்டுகோளுடன் மக்கள் மத்தியில் பவனி வரும் திமுக என்ன செய்திருக்க வேண்டும்? ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நாங்கள் எடுத்துள்ள நட வடிக்கைகள் இவை இவை .மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று பட்டியலிட்டிருக்க வேண்டாமா?அவ்வாறு செய்தார்களா?இல்லை இல்லை. ஆனால் இதில் வியப்படைய எதுவுமில்லை. விலை வாசி உயர்வுக்கான காரணங்களாக இவர்களின் கருத்துக்களைத்தான் சட்டமன்றவிவா தங்களிலேயே வெளிப்படுத்திவிட்டார்களே.

கருணாநிதியின் அருமை நண்பரும் மத்திய நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வைப் பற்றிப் பேசும் போது என்ன கூறினார் தெரியுமா?

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவ தற்கான மந்திரக் கோல் எதுவும் என்னிடம் இல்லை என்று ஆடம்பரமாகக்குறிப்பிட்டார். விலைவாசி தானாகவே உயர்வது போலவும் அவர்களுடைய கொள்கைகளுக்கும் விலை வாசி உயர்வுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பது போலவும் அமைந்திருந்தது அவரது உரை. முன்பேர வர்த்தகம், பெட்ரோ லியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதி கரிக்கப்படுதல், ஏற்றுமதி-இறக்குமதிக் கொள்கைகள் போன்றவை விலையேற்றத் தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை மறுக்கமுடியுமா? உணவுப்பொருட்களின் விலையுயர்வுக்கு அவற்றின் வேண்டல் வழங்கலில் உள்ள பொருத்தமின்மை காரண மல்ல, ஊகவணிகமே காரணம் என்று வணி கம் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா. மாநாடே தெரிவித்துள்ளதே. ஆகவே விலைவாசி உயர் வைக் கட்டுப்படுத்துவதற்கான மந்திரக் கோல் கொள்கை மாற்றமேயன்றி வேறல்ல.

ஆனால் பிரணாப் முகர்ஜியின் இதே கருத்தைத்தான் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் சட்டமன்றத்தில் தெரிவித்தார். விலைவாசி உயர்வு என்பது நிலநடுக்கம் போன்ற இயற்கைப்பேரிடர் என்று கூறிய அவர், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து வதற்கு கம்யூனிஸ்டுகள்தான் ஆலோசனை கூறவேண்டும் என்று கிண்டலடித்தார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவ தற்கு கம்யூனிஸ்டுகள் தெரிவித்துள்ள பல ஆலோசனைகளை மத்திய அரசு புறக்கணித்து வருவதை அறியாதவரைப் போல அவர் பேசினார் .

இந்தியர்களும் சீனர்களும் அதிக அள வில் உண்ணத்தொடங்கியுள்ளதால்தான் உலகஅளவில் உணவுப்பொருட்களின் விலை ஏறிவிட்டதாக ஒரு அரிய கண்டுபிடிப்பை அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் வெளியிட்டார் என்றால், திட்டக்குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலு வாலியா இதே கருத்தை வேறு சொற்களில் கூறினார். அரசு அமல்படுத்திவரும் கிராமப் புற வேலை உத்தரவாதத்திட்டம் போன்றவற் றால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து விட்டது. அதுவே விலையுயர்வுக்குக் காரணம் என்று அவர் திருவாய் மலர்ந்தருளினார். இந்த அலுவாலியாவை நிதி அமைச்சராக் காமல் ஏன் பிரணாப் முகர்ஜியை நிதிஅமைச்ச ராக்கிவிட்டார்கள் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் துருவித் துருவிக்கேட்டுள்ளதை விக்கி லீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளதை நினைவில் கொள்வோம். முன்னாள் உலக வங்கி அதிகாரியும் அமெரிக்க ஆதரவாளரு மான மாண்டேக் சிங் அலுவாலியாவின் கருத் தைத்தான் முதல்வர் கருணாநிதி தனக்கே யுரிய பாணியில் வெளிப்படுத்தினார். விலை வாசி உயர்வினால் மக்கள் அனுபவித்துவரும் துன்ப துயரங்களைப்பற்றி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத்தலை வர் கே.பாலபாரதி பேசிய போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் கருணாநிதி, தியாகராய பாண் டிபஜார் கடைகளில் கூடும் கூட்டத்தை போய்ப் பாருங்கள்; அப்போது உண்மைநிலை புரியும் என்று கூறினார். அங்கே பொருட் களை வாங்கக்கூடும் உயர் மத்தியதர வர்க் கத்தினரைப்போலவே தமிழ் நாட்டின் எட்டு கோடிமக்களும் வசதியான வாழ்க்கை வாழ் வதைப்போல அவர் பேசினார்.

ஆக விலைவாசி உயர்வுக்கு அரசின் கொள்கைகள் காரணமல்ல. அது நில நடுக் கத்தைப்போல, சுனாமியைப்போல தடுக்க முடியாதது. மக்களின் வாங்கும் சக்தி அதிக ரித்துவிட்டதால் மக்கள் விலைவாசி உயர் வினால் பாதிப்புக்குள்ளாக மாட்டார்கள் என்பதே மத்திய ஆட்சியாளர்களான காங் கிரஸ்-திமுக கூட்டணி மற்றும் தமிழக திமுக அரசின் கருத்தாக உள்ளது .எனவே விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அக்கறைஅவர்களுக்கு இல்லை. எனவே திமுக தேர்தல் அறிக்கையிலோ முதல்வரின் தேர்தல் கூட்ட உரைகளிலோ விலைவாசி உயர்வுப்பிரச்சனை முக்கியத் துவம் பெறாமல் இருப்பதில் வியப்பில்லை. விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கவனத்தை திசை திருப்ப, இலவ சங்கள் உள்ளிட்ட கவர்ச்சி அம்சங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஆனால் தமிழக மக்களை இவற்றின் மூலம் ஏமாற்றமுடியாது என்பதை தமிழக தேர்தல் களம் தெளிவாக நிரூபித்துவருகிறது .

1 கருத்து:

விடுதலை சொன்னது…

மாண்டேக் சிங் அலு வாலியா இதே கருத்தை வேறு சொற்களில் கூறினார். அரசு அமல்படுத்திவரும் கிராமப் புற வேலை உத்தரவாதத்திட்டம் போன்றவற் றால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து விட்டது. அதுவே விலையுயர்வுக்குக் காரணம் என்று அவர் திருவாய் மலர்ந்தருளினார். இந்த அலுவாலியாவை நிதி அமைச்சராக் காமல் ஏன் பிரணாப் முகர்ஜியை நிதிஅமைச்ச ராக்கிவிட்டார்கள் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் துருவித் துருவிக்கேட்டுள்ளதை விக்கி லீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளதை நினைவில் கொள்வோம்.