செவ்வாய், 31 மே, 2011

2ஜி ஊழல் மாறன் சகோ பெற்ற 700 கோடி: தெஹல்கா


 கலைஞர் குடும்பத்தின் சாம்ராஜ்யம் கொஞ்ச கொஞ்சமாக சரிந்துவரும் வேலையில் தயாநிதிமாறன் அவரது சாம்ராஜ்யத்தை அசைத்து பார்க் வந்துவிட்டது 2ஜீ ஊழல் இதுகுறித்த ஒரு புலனாய்வு கட்டுரை தெகல்காவில் வெளியாகியுள்ளது.

உடனே யோக்கியன் தயாநிதி 2006-ல் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் தொலைத்தொடர்பு உரிமம் பெற தயாநிதி ஆதரவாக இருந்ததாக குற்றம்சாட்டிய தெஹல்கா பத்திரிகைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.


இது புலனாய்வு என்ற பெயரில் இட்டுக்கட்டப்பட்ட பொய் என்றும் எந்தவித ஆதாரம் இல்லாத கட்டுக்கதை என்று வர்னித்துள்ளார்.  


இதனிடையே தயாநிதி மாறனிடமிருந்து இதுவரை தங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லை என்றும் ஏர்செல் கம்பனி சிவசங்கரன் என்பவர்க்கு சொந்தமாக இருந்தபோது அவர்கேட்ட லைசென்ஸ் கொடுக்கமால் பிறகு அந்த கம்பனி மலேசிய தொழில் அதிபர் ஆனந்த கிருஷ்ணன் என்பவருக்கு கைமாறிய உடன் 14 லைசென்ஸ்கள் அதே ஏர்செல் கம்பனிக்கு வழங்கப்பட்டதும் அதன் காரணமாக ஆனந்த கிருஷ்ணன் சன் குழுமத்திற்கு 700 கோடி முதலீடு செய்துள்ளார் என தெஹல்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை: