திங்கள், 30 மே, 2011

மேற்குவங்கத்தில் தொடங்கியது அடியாளின் அடாவடித்தனம்


மேற்கு வங்கத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மீது பொய்வழக்குப் போட மறுத்த போலீஸ் அதிகாரியை திரிணாமுல் கட்சிக் குண்டர்கள் தாக் கினர்.

மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாதன் என்ற ஊரில் பொய் வழக்குப் போட மறுத்த போலீஸ் அதிகாரி மாணிக் சக்கரவர்த்தியை திரிணாமுல் குண்டர்கள் தாக்கினர். படுகாயமடைந்த அவரை உடன் இருந்த போலீஸ் காரர்களும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களும் மருத் துவமனையில் சேர்ப்பித்தனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் தாதன் பகுதிக் குழுச் செயலாளர் அப்துல் ரஹீ மின் வீட்டைத் தாக்கிய திரிணாமுல் குண்டர்கள், அவரையும் கட்சி ஊழியராகிய அவரது மனைவியையும் தாக்கினர். இதைத் தடுக்கச் சென்ற கட்சி ஊழியர்களை யும் குண்டர்கள் தாக்கினர்.

தகவல் அறிந்து அந்த இடத்திற்கு வந்த தாதன் காவல்நிலைய அதிகாரி மாணிக்

சக்கரவர்த்தியிடம், மார்க்சிஸ்ட் ஊழியர் அப்துல் ரஹீமை கைது செய்யும் படி திரிணாமுல்காரர்கள் வற்புறுத்தினர். காரணமில்லாமல் ஒருவரைக் கைது செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார் அந்த போலீஸ் அதிகாரி. இது குண்டர்களை ஆத்திரமூட்டியது. போலீஸ் அதிகாரியை அவர்கள் தரக்குறை வாகத் திட்டியது மட்டு மல்லாமல் கடுமையாகத் தாக்கவும் செய்தனர்.


மேற்கு மிட்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் பல இடங்களிலும் திரிணாமுல் கட்சிக் குண்டர்கள் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களின் வீடுகளுக் குப் பக்கத்தில் ஆயுதங்களை ரகசியமாக ஒளித்து வைத்து விட்டு, பிறகு அவற்றைக் கண்டுபிடித்ததாகச் சொல்லி மார்க்சிஸ்ட் கட்சி யினர் மீது பொய்வழக்குப் போடச் செய்கின்றனர். மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் இது அதிகமாகும். ஒரு பகுதி போலீஸ்காரர்கள் இதற்கு உதவியாக இருக் கிறார்கள்.

பங்குரா மாவட்டத்தின் ஜய்ப்பூரில் திரிணாமுல் காரர்களின் தாக்குதலால் மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிக் குழுச் செயலாளர் பங்கஜ் மண்டலுக்கும் மற்ற ஐந்து ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டது. தலை யில் தாக்கப்பட்ட பங்கஜின் நிலைமை மோசமாக உள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த வடக்கு பணியபுக் கூர் பகுதிக்குழு அலுவலகத்தைத் திரிணாமுல் குண் டர்கள் தாக்கித் தகர்த்தனர். தாக்குதலைத் தடுக்கச் சென்ற பகுதிக் குழுச் செய லாளர் மிஹிர் தாஸையும் மற்ற ஊழியர்களையும் குண்டர்கள் தாக்கினர்.

மாநிலத்தில் அமைதி பாதுகாக்கப்படுமென்றும், நடுநிலையான ஆட்சி நடத் தப்படுமென்றும் முதல மைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார். ஆனால் மாநி லமெங்கும் நடப்பதெல் லாம் இதற்கு நேர்மாறாகத் தான்.


மேற்கு வங்கமெங்கும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் கள் தாக்கப்படுகிறார்கள். மம்தாவின் திரிணாமுல் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் மட்டும் 209 மார்க் சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்கித் தகர்க்கப்பட்டன. 393 ஊழியர்கள் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட னர். 2354 ஊழியர்கள் தாக் குதலிலிருந்து தற்காத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியேற வேண்டிய ஆபத்தான சூழ்நிலை ஏற் பட்டது. திரிணாமுல் குண் டர்களின் தாக்குதல்கள் மாநிலமெங்கும் பரவியுள்ளன. மம்தாவின் அரசு இதைத்தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்க்கிறது. மாநிலத்தின் அமைதியைச் சீர்குலைத்துவிட்டது திரி ணாமுல். மம்தா ஆட்சிக்கு வந்தபிறகு பத்து மார்க்சிஸ்ட் ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.




கருத்துகள் இல்லை: