புதன், 4 மே, 2011

அமெரிக்கா திருந்தாதவரை பயங்கரவாதம் ஒழியாதுபயங்கரவாதி ஒசாமா பின்லே டன் கொல்லப்பட் டுள்ள போதிலும், உலகம் முழுவதிலும் தனது ராணுவத்தின் மூலமும், உள்நாட்டிலும் அரசு பயங்கரவாதத்தை ஏவி விட்டுள்ள அமெரிக்காவின் நட வடிக்கைகளில் மாற்றம் ஏற்படாத வரை பயங்கரவாதம் என்ற பிரச் சனையை வெற்றிகரமாக எதிர் கொள்ள முடியாது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி யுள்ளது.

அமெரிக்க சிறப்புப்படையின ரால் பாகிஸ்தானில் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டுள்ளார். எனினும், இது பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பயங்கரவாதம் என்ற பிரச்சனை முடிந்துவிட்டது என்று பொருளாகாது.

ஒசாமா பின்லேடனின் மரணம், அல்கொய்தா அமைப்பிற்கு பின்னடைவே என்ற போதிலும், மத அடிப்படைவாதத்தால் தூண்டி விடப்படும் பயங்கரவாத வன் முறைக்கு முடிவுகட்டுகிற விளைவை ஏற்படுத்தாது. அதே நேரத்தில், “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்” என்ற பெயரில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்காவால் பயன்படுத்தப் பட்ட முறைகள் நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்துள் ளன. அல்கொய்தாவுக்கு எதிராக போராடுகிறோம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானையும், இராக்கை யும் அமெரிக்கா மிகக்கடுமையாக சிதைத்தது. இந்த கொடிய போர் களில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் பறிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் பல ஆண்டு காலமாக பின்லேடன் வாழ்ந்தார் என்ற உண்மை, அந்த நாட்டி லுள்ள பாதுகாப்பு கட்டமைப்பிற் கும் சில பயங்கரவாத குழுக்களுக் கும் இடையே நெருங்கிய தொடர் புகள் இருப்பதை சுட்டிக்காட்டு கிறது. 1980களில் ஆப்கானிஸ்தா னில் அமைந்திருந்த சோவியத் யூனியன் ஆதரவு அரசை எதிர்த்து கலகம் செய்ய பாகிஸ்தானின் உத வியை அமெரிக்கா பெற்றிருந்தது. அமெரிக்காவின் ராணுவத்தலை மையகமான பென்டகனும், அதன் உளவு அமைப்பான சிஐஏவும் பாகிஸ்தானின் உளவு அமைப் பான ஐஎஸ்ஐ மூலமாக ஆயுதங் களையும் பெருமளவு நிதியையும் ஒசாமா பின்லேடன் போன்றவர் களுக்கு வழங்கின; இப்படித்தான் பின்னாட்களில் தலிபான் பயங்கர வாதிகளும் ஜிகாதி மத அடிப் படைவாதிகளும் ஊட்டி வளர்க்கப் பட்டார்கள்.

லிபியாவில் சமீபத்தில் துவக்கப்பட்டுள்ள ராணுவ தாக்குதலும், ஆப்கானிஸ்தானில் தொடரும் யுத்தமும், கடந்த காலத்திலிருந்து எந்த பாடத்தையும் அமெரிக்கா கற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. அரசு பயங்கரவாதமும் மத அடிப்படைவாதிகளின் பயங்கரவாதமும் ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கின்றன. ராணுவத் தாக்குதல்களையும் அரசு பயங் கரவாதத்தையும் ஏவும் அணுகு முறையை அமெரிக்கா மாற்றிக் கொள்ளாதவரை, பயங்கரவாதம் என்ற பிரச்சனையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாது.

கருத்துகள் இல்லை: