புதன், 4 மே, 2011

மாவீரர்கள் இரணியன், சிவராமன், ஆறுமுகம் தியாகிகள் தினம்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தியாகிகளான சிவராமன், இரணியன், ஆறுமுகம் ஆகியோரின் 50ம் ஆண்டு நினைவுதினம் இன்று (5.5.2011). செங்கொடி இயக்கத்தின் மகத்தான தியாகிகளான இவர்களது நினைவு தினம் வியாழனன்று பட்டுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெறவுள்ளது.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியாளர்களால் 1948முதல் 51 வரை தடை செய்யப்பட்டது. கட்சி மற்றும் விவசாய சங்க முன்னணி ஊழியர்கள் ஆட்சியாளர்களால் வேட்டையா டப்பட்டனர். அவர்களது குடும்பங்களும் அழிக்கப்பட்டன. நிலப்பிரபுக்கள், ஜமீன்தார் கள், மடாதிபதிகளை பாதுகாக்க காங்கிரஸ் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது.

இந்த அடக்குமுறை காலத்தில் ஏராள மான இளைஞர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத் தில் இணைந்து தீரமுடன் போராடினர். சாம்பானோடை சிவராமன், இரணியன் ஆகி யோர் மலேயாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு வந்தவர்கள். இரணியன், ஆம்பலாப் பட்டு ஆறுமுகம் ஆகியோரும் நிலவுடைமை மற்றும் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் தீரமுடன் பங்கேற் றவர்கள்.

50 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கும் அதிகமாக வைத்திருந்த நெடும்பலம் சாமியப்ப முத லியாருக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு தலைமையேற்ற சிவராமன், தலைமறைவாக இருந்து விவசாயிகளை அணிதிரட்டினார். பட்டுக்கோட்டை வட்டம் நாட்டுச்சாலை கிராமத்தில் 1950ம் ஆண்டு மே 3ம் தேதி சிவராமன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மலேயாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு தனது சொந்த ஊரான வாட்டாகுடியில் தங் கியிருந்த இரணியன் அந்த ஊரில் கம்யூ னிஸ்ட் கட்சியை துவக்கினார். அப்பகுதி யில் ஆதிக்கம் செலுத்திய மதுக்கூர், பாப்பா நாடு, அத்திவெட்டி ஜமீன்களின் கொடுமைகளை எதிர்த்து மக்களை அணிதிரட்டியவர் இரணியன். நாடிமுத்துப்பிள்ளைக்கு சொந்தமான பட்டுக்கோட்டை எஸ்டேட்டில் பணி யாற்றிய விவசாயத் தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டனர். அவர்களையும் இரணியன் அணிதிரட்டினார். தோழர் கே.பி. நடராஜன் போன்ற தலைவர்களின் வழி காட்டுதலுடன் செயல்பட்ட இரணியன், செம்பாலூர் பண்ணைக்கெதிரான போராட்டத்தை ஆம்பலாப்பட்டு, கரம்பயம், எட்டுப் புலிக்காடு ஆகிய கிராமங்களில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளையும் இணைத்து தலைமையேற்று நடத்தினார். இரணியன் அந்தப் பகுதி நிலவுடைமையாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினார். போலீசாரால் தேடப்பட்டு வந்த இரணியன் ஒரத்தநாடு வட்டம் வடசேரியில் கயவன் ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

1943ல் ஆம்பலாப்பட்டில் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டது. புண்ணியம் கதிரே சன் தலைமையில் செயல்பட்டு வந்த கம்யூ னிஸ்ட் கட்சியில் இளைஞரான ஆறுமுகம் தன்னையும் இணைத்துக்கொண்டு செயல் பட்டார். ஆம்பலாப்பட்டு மதுக்கூர் ஜமீனுக்கு உட்பட்ட கிராமமாகும். ஆம்பலாப்பட்டு முதல் வெண்குழி வரையிலான மதுக்கூர் ஜமீன்தாருக்கு சொந்தமான 12 கிராமங்களில் நிலவிய நிலவுடைமைக் கொடுமைகளை எதிர்த்து ஆறுமுகம் போராடினார். விவசாயி களை மிரட்ட பயன்படுத்தப்பட்ட ஜமீனின் பிரம்சேரி நோட்டுகளை தீவைத்துக் கொளுத் தும் போராட்டத்தில் முன்னணியாக இருந்த வர் ஆறுமுகம்.

வடசேரி கிராம சவுக்குத் தோப்பில் இரணியனும், ஆறுமுகமும் சந்தித்து விவா தித்த போது துரோகியால் காட்டிக் கொடுக் கப்பட்டு ஆறுமுகமும், இரணியனும் போலீ சாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

படுகொலை செய்யப்பட்ட சிவராமன், இரணியன், ஆறுமுகம் ஆகியோரின் உடல் களை அவர்களது உறவினர்களிடம் ஒப்ப டைக்க மறுத்து 1950ம் ஆண்டு மே 5ம் தேதி பட்டுக்கோட்டை ரயில்வே கேட் அருகிலுள்ள மைதானத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர். அந்த தியாகிகள் விதைக்கப் பட்டு 50 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால்அவர்களது தியாகம் இன்றும் ஜொலிக்கிறது. செங்கொடி இயக்கத்தின் மகத்தான தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.

- ஆர்.சி.பழனிவேலு

மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

2 கருத்துகள்:

தோழர் சொன்னது…

தோழரே இன்றுதான் உங்கள் பதிவைப்பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சி. காங்கிரசின் அடக்குமுறை ஆட்சியை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டியது இன்றைக்கும் மிக அவசியம். மீண்டும் காமராசர் ஆட்சி, மீண்டும் காங்கிரஸ் ஆட்சி என்றெல்லாம் ஓலமிடும் கூட்டத்தின் கடந்த கால முகத்தை அங்குலம் அங்குலமாக கிழித்தெறிய வேண்டும். இன்றைய இளம் தலைமுறைக்கு காங்கிரசின் ராஜபக்சே பாணி கொலைவெறி ஆட்சியைப பற்றிய வரலாற்று உண்மைகளையெல்லாம் தோளுரித்துக்காட்டவேண்டும. அன்று விதைக்கப்பட்ட எம் தோழர்கள் இன்றும் ஆயிரம் ஆயிரமாய் வளர்ந்துகொண்டே உள்ளனர். ஆனால் அடக்குமுறையாளர்கள் அம்பலப்பட்டு அழிகின்றனர். இது வரலாற்று நியதி. இப்பொழுதும் மேற்குவங்கத்தில் ஒரிஜனல் காங்கிரசும், முகமூடி காங்கிரசுகளும் (மம்தா கூட்டம், மாவோயிஸ்ட் கும்பல்,சமூகவிரோத கூலிப்படைகள்) உழைக்கும் வர்க்கத்தின் ஊழியர்களை வேட்டையாடிக்கொண்டுதான் உள்ளனர். வரலாறு நிச்சயம் இவர்களைத்தன்டிக்கும்.
"......அன்புத்தோழர்களே! உங்களின் தியாகம் எங்களை போராட்ட களத்தில் வலுப்படுத்துகின்றது."......முஷ்டி உயர்த்தி செவ்வணக்கம் செய்கின்றோம். red salut. ஜி.ஆனந்தன்,.விழுப்புரம்

விடுதலை சொன்னது…

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்