திங்கள், 23 மே, 2011

விக்கி லீக்ஸ்“ஊழலின் காரணமாக திமுக வீழ்ச்சி:தயாநிதி மாறன்


‘ஊழலின் காரணமாக திமுக வீழ்ச் சியடைந்து கொண்டிருக்கிறது’ என்றும் ‘ஆட்சி அதிகாரத்திலிருக்கும்போது, ஆட்சியாளர்கள் பணம் பண்ணத் தொடங்கி விடுகிறார்கள்’ என்றும் 2008ல் தயாநிதி மாறன், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரியிடம் தெரிவித்ததாக, விக்கி லீக்ஸ் அம்பலப் படுத்திய ரகசியத்தை ‘தி இந்து’ நாளிதழ் (23.5.2011) முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

2008 பிப்ரவரியில் அமெரிக்கத் தூதர கத்தின் கன்சல் ஜெனரலிடம் அப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பின ராக இருந்த தயாநிதி மாறன் மனந்திறந்து உரையாடியிருக்கிறார். அப்போது அவர், தன் கட்சியில் நிலவும் ஊழல் குறித்தும், மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிராக அதி கரித்து வரும் மனோபாவம் (யவேi-inஉரஅநெnஉல கயஉவடிச) குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்கத் தூதரகத்தில் கன்சல் ஜெனரலாக இருந்த டேவிட் டி.ஹோப்பர், 2008 பிப்ரவரி 23 அன்று அனுப்பிய கேபிள் செய்தியில் (இதனை விக்கிலீக்ஸ் மூலம் பெற்று, ‘தி இந்து’ நாளிதழ் வெளியிட்டி ருக்கிறது) அமெரிக்க அரசாங்கத்திற்கு, தயாநிதி மாறன் தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசாங்கம் குறித்து, தன்னிடம் மனம் திறந்து கூறியவற்றைத் தெரிவித் திருக்கிறார். மேலும் அவர் தெரிவித் திருப்பதாவது:

இப்போதுள்ளபடியே விஷயங்கள் தொடரும்பட்சத்தில், தமிழ்நாட்டில் திரா விட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், தாங்கள் தற்போது மக்களவையில் பெற்றிருக்கும் இடங்களில் பாதியை இழந்துவிடும் என்று மாறன் ஊகிக்கிறார். மேலும், மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிராக உள்ள மனோ பாவம் குறித்து மாறன் கூறுகையில், “திமுக பிரதானமாக ஒரு ஊழல் கட்சி என்று குறிப்பிட்டு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த வுடனேயே, அனைத்தையும் மறந்து விட்டு, பணம் பண்ணுவது ஒன்றிலேயே குறியாக செயல்படத் தொடங்கிவிடுகிறார் கள்” என்று மக்கள் மத்தியில் பொதுவான கருத்து இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

புதுதில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துடன் ஒருங்கிணைக்கப்பட் டுள்ள அந்தக் கேபிள் செய்தியானது, 2008 பிப்ரவரி 15 அன்று சென்னை கன்சு லேட் ஜெனரல் அலுவலகத்தில் உள்ள அரசியல் அலுவலர் (ஞடிடவைiஉயட டீககiஉநச), தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான கருணாநிதியுடன் தகராறு ஏற்பட்டதை அடுத்து, 2007 மே மாதத்தில் மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து கழட்டி விடப்பட்டபின் முதன்முதலாக தயாநிதி மாறனை சந்தித்தார். அப்போது மாறன், தமிழக அரசு “இலவசங்கள்” அளித்துவருவதில் உள்ள ஆபத்துக் களைச் சொல்லியிருக்கிறார். “ஆட்சிக்கு வந்தால் டி.வி.வழங்குவோம் என்று சொல்வதில் உள்ள பிரச்சனை என்ன வெனில், இலவசமாகப் பெற்ற டி.வி.யை மக்கள் விரைவில் மறந்துவிடுவார்கள். பின் அவர்கள், இப்போது எனக்காக என்ன செய்தீர்கள் என்றுதான் கேட்கி றார்கள்” என்று கூறியிருக்கிறார்.

திமுக- தலைமையுடன் மனக் கசப்புடன் இருந்தபோதிலும், மீண்டும் மத்திய ஜவுளித்துறை அமைச்சராகி யிருக்கும் மாறன், ஹோப்பரிடம் 15ஆவது மக்களவைத் தேர்தலில் ஐ.மு.கூட்டணி யின் வெற்றி வாய்ப்புகள் குறித்து “மிகவும் அடக்கி” வாசித்திருக்கிறார். “ஐ.மு.கூட் டணி, குறிப்பாக குஜராத்திற்குப்பின், மிக வும் கடினமான வடிவத்தில் இருப்பதாக” மாறன் கருதியிருக்கிறார். “தென்னிந்தியா விலும் கூட ஐ.மு.கூட்டணியினருக்கு கணிசமான இழப்புகள் எதிர்பார்க்கப்படு வதாக” மாறன் குறிப்பிட்டிருக்கிறார். ஆந் திரப் பிரதேசத்திலும் காங்கிரசின் செல் வாக்கு குறித்து அவர் ‘நம்பிக்கையற்ற வராகவே இருந்தார். “முதல்வர் ஒய்.எஸ். ஆர். ரெட்டியின் செல்வாக்கு சரிந்து வரு கிறது என்றும், எனவே தற்போதுள்ள 29 மக்களவை இடங்களையும் காங்கிரஸ் இழக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக வும்” மாறன் கூறியிருக்கிறார். ஆனால், “ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் இவ் வாறு எதிர்பார்க்கப்படும் இழப்புகள் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தோல்விகளிலிருந்துதான் ஏற்படுகிற தென்றும், அவை வலுவான எதிர்க் கட்சி களால் அல்ல” என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.

திமுக தலைமையுடன் மாறனுக்கு இருந்த உறவு முறிவுக்கு, “நிதிக் கார ணங்கள்” (கiயேnஉயைட சநயளடிளே) ஒரு முக்கிய மான பகுதி என்றும், “திமுக அடித்த கொள்ளையில் தனக்கு வரவேண்டிய பங்கு, தனக்கு வராமல் தட்டிப்பறிக்கப் பட்டதன் காரணமாகவே, “சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்ற மனோபாவத்தில் மாறன் இவ்வாறு தன் கருத்துக்களைப் பிரதிபலிக்கிறார் என்றும் மிகவும் அனு பவம் வாய்ந்த ராஜதந்திரியான ஹோப்பர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர், மாறனின் டிவி-யும் மற்றும் சில இலவசத் திட்டங்களும் 2006 மாநிலத் தேர்தலில் திமுக வெற்றி பெற உதவியது என்றும் கன்சல் ஜெனரல் அந்தக் கேபிளில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதில் மிகவும் குறிப்பிடப்பட வேண் டிய அம்சம் என்னவெனில், தயாநிதி மாறன் தான் சார்ந்திருக்கும் திமுக-வின் மீது அவதூறுகளை அள்ளிவீசும் அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை வானளாவப் புகழ்ந் திருப்பதுதான். 2009 மக்களவைத் தேர்த லின்போது ராகுல் காந்திதான் பிரதமர் என்று அறிவித்திருக்க வேண்டும் என்று வாதிடுகிறார். இதற்கு நீண்ட காலம் ஆகலாம் என்று மாறன் கருதினாலும், “ராகுல் மட்டுமே அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு” என்று வாதிடுகிறார்.

தென்னிந்தியாவில் ராஜீவ் காந்திக்கு இருக்கும் செல்வாக்கின் பாரம்பரியப் பயனை ராகுலும் பெற்றிடுவார் என்று மாறன் மேலும் கூறுகிறார். நேரு குடும்பத் திலிருந்து ராகுல் வருவது தென்னிந்தியா வில் மிக நன்றாக வேலை செய்யும் என்று குறிப்பிடும் மாறன், ‘‘நீங்கள் கவனிக்கா மல் இருக்கிறீர்கள் எனில், நாங்கள் வாரிசு அரசியலை அமல்படுத்துவதில் பிரச்சனையே கிடையாது. உண்மையில் நாங்கள் அதனை வெகுவாக விரும்புவது போன்றே தெரிகிறது” என்றும் கூறியிருக் கிறார்.

மேலும் மாறன், ராகுலை காங்கிரசின் வேட்பாளராக சித்தரிப்பதன்மூலம், இளம் வாக்காளர்களை ஈர்த்திட முடியும் என்றும், ஆனால் அவரை வழி நடத்தப்படுபவர்களால் அவர் பின்னுக்கு இழுக்கப்ப டுகிறார் என்றும், அவரிடம் பல விஷயங் களைக் கொண்டு செல்லாமல் மறைத்து விடுகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார். ‘‘ராகுலுக்கு உள்ள மிகப் பெரிய பிரச்சனை, அவரை உண்மையான மக்களைப் பார்க்க விடுவது இல்லை’’ என்று மாறன் கூறியதாக ஹோப்பர் குறிப்பிடுகிறார்.

மாறன் இவ்வாறு ராகுல் காந்தி குறித்து கூறுவதன் மூலம் மாறனின் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்த அகத்தூண்டுதல் உணர்ச்சிகளையும் ஹோப்பர் தான் அனுப்பியுள்ள கேபிளில் கடைசியில் மிகவும் கூர்மையாகக் குறிப்பிட்டிருக் கிறார். “காங்கிரசில் ராகுல் காந்திக்கு முக்கிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கருதுவதிலிருந்து, தமிழ்நாட்டில் திமுக-வில் தானும் அதேபோன்று இளம் அரசியல்வாதியாகக் கருதப்பட வேண்டும் என்று விரும்பியதாகத் தெரிகிறது. ராகுல் செல்லுமிடங்களில் எல்லாம் அவருக்கு வருவதுபோல் தனக்கும் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக மாறன் கருதிக்கொண்டிருந்தார்” என்று ஹோப்பர் குறிப்பிட்டிருக்கிறார்.

2008 டிசம்பர் 1ல் மாறன் மீண்டும் திமுக-வுடன் சேர்ந்து அவரது தாத்தா கருணாநிதிக்கு இனியவரானார். 2009 மக்களவைத் தேர்தல் வந்தபோது, தமிழ் நாட்டில் அவரது யூகங்கள் அடிபட்டுப்போயின. பணபலம் பெரும் பங்கு வகித்து, அஇஅதிமுக 9 இடங்கள் பெற்ற நிலையில் திமுக 18 இடங்களைக் கைப்பற்றி யது. திமுக கூட்டணி அதன் போட்டிக் கூட்டணி பெற்ற 12 இடங் களுக்கு எதிராக 27 இடங்களைக் கைப் பற்றியது. ஆந்திரா தொடர்பான மாறனின் நம்பிக்கையின்மையும் தவறாகிப்போனது. அங்கே ஒய்.எஸ்.ஆர். செல்வாக்கின் கீழிருந்த காங்கிரஸ் மொத்தம் உள்ள 42 மக்களவை இடங்களில் 33ஐ எடுத்துக் கொண்டது. மாறன் அஇஅதிமுக தலைவர் ஜெயலலிதாவின் பங்கினை முற்றிலும் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார். ஆயினும் திமுக ஊழல் கார ணமாக வீழ்ந்துகொண் டிருக்கிறது என் கிற அவரது யூகம் 2011ல் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மிகப் பெரிய அளவில் உண் மையாகிப்போனது.

இவ்வாறு ‘தி இந்து’ நாளிதழ் தெரி வித்துள்ளது. (ந.நி.)

தீக்கதிர் 24.05.2011

கருத்துகள் இல்லை: