ஞாயிறு, 5 ஜூன், 2011

ஊழலை எதிர்க்க லோக்பால் மசோதாவால் முடியுமா?




லோக்பால் சட்டமுன்வடிவை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் கடந்த பல ஆண்டுகளில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்திடவில்லை என்பதையே அது தொடர்பாக நாட்டில் நடைபெற்றுவரும் வாதங்களும் எதிர்வா தங்களும் எடுத்துரைப்பதாகத் தோன்று கின்றன. ஊழலுக்கு எதிராக லோக்பால் போன்றதொரு சட்டம் கொண்டுவர வேண்டுமென்கிற கருத்துரு மறைந்த மொரார்ஜி தேசாய் தலைமை தாங்கிய நிர் வாக சீர்திருத்தங்கள் குழுவால் 1969இல் முதலில் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு ஒரு அமைப்பை நிறுவியபின் இதனைத் தொடர்ந்து இதேபோன்ற நிறுவனங்களை மாநில அளவிலும் லோக் அயுக்தா என்ற பெயரில் அமைத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டது. எதிர்பார்த்ததைப்போலவே, இவற்றைக் கொண்டுவருவதற்குப் பல் வேறு முனைகளிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியதால் இவ்வாறு அமைப்புகள் ஏற் படுத்தப்படுவது நீண்ட காலத்திற்குக் கிடப்பில் போடப்பட்டுவிட்டன.

ஐக்கிய முன்னணியின் முன் முயற்சி

போபர்ஸ் ஊழல் நாட்டைக் குலுக் கியதை அடுத்து நாட்டில் ஓர் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்ட சமயத்தில் இடது சாரிக் கட்சிகள் 1990களில் இச்சட்டமுன் வடிவினைக் கொண்டுவர நிர்ப்பந்தம் கொடுத்தன. 1996இல் ஒரு குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற உறுதிமொழியின் அடிப் படையில் இடதுசாரிக் கட்சிகள் வெளியி லிருந்து ஆதரவு அளிப்பது என்கிற நிபந் தனையுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவானது. அந்த குறைந்த பட்ச பொது செயல் திட்டத்தில் தூய்மை யான நிர்வாகம் என்ற பிரிவில் கூறப்பட்டி ருந்ததாவது: “ஐக்கிய முன்னணி ஓர் ஊழலற்ற தூய்மையான நிர்வாகத்தினை அளிக்க உறுதி பூண்டுள்ளது. லோக் பால் அமைப்பதற்காக ஒரு சட்டமுன் வடிவு பதினோராவது மக்களவையில் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறி முகப்படுத்தப்படும். இந்தச் சட்டமுன் வடிவின்கீழ் பிரதமர் அலுவலகமும் கொண்டுவரப்படும். இந்தச் சட்டத் தின்கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் லோக்பால் அமைப்பின் முன்பு ஒவ்வோராண்டும் தங்கள் சொத் துக்களை பிரகடனம் செய்திட வேண் டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டி ருக்கிறது.”

இன்றையதினம், ஊழலுக்கு எதிராகப் புனிதப்போரைத் துவக்கி இருப்பதாகக் கூறுவோருக்கு மத்தியிலும் ஆழமான முறையில் கருத்து வேறுபாடுகள் மீண் டும் ஒருமுறை உருவாகி இருக்கின்றன. அதாவது இந்தச் சட்டமுன்வடிவின் வரம் பெல்லைக்குள் பிரதமரையும் அவருடைய அலுவலகத்தையும் கொண்டுவர முடியுமா என்பது குறித்தே இந்தக் கருத்து வேறு பாடுகள் உருவாகி இருக்கின்றன.

1997இல் தேவ கவுடா தலைமையிலிருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் கொண்டுவந்த இந்தச் சட்டமுன்வடிவு அப்போதும் இதேபோன்ற கருத்துவேறு பாடுகளில் சிக்கிக்கொண்டதால் இது வெளிச்சத்திற்கு வராமலேயே கிடப்பில் போடப்பட்டு விட்டது. பின்னர் அமைந்த ஸ்திரமற்ற ஐக்கிய முன்னணி அரசாங்க மும் இதில் எந்த முன்னேற்றத்தையும் ஏற் படுத்த முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து 1998இலிருந்து நடைபெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்க மும், இப்போது ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்களாகத் தங்களைக் காட் டிக் கொண்டபோதிலும், அப்போது இந்தப் பிரச்சனை மீது வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டது. ‘எதிர்க்கட்சியாக இருக் கும்போது ஊழலுக்கு எதிராகப் போராடு வது, ஆட்சியிலிருக்கும்போது அதற்கு நேரெதிராகச் செயல்படுவது’ என்பது தான் பாஜக கொள்கைபோலும்! (கர்நாடக நிகழ்ச்சிப் போக்குகளைப் பார்த்தாலே இதனைப் புரிந்து கொள்ள முடியும்.)

ஐ.மு.கூட்டணி-1 உறுதிமொழி

இடதுசாரிகள் நிர்ப்பந்தம் அளித்த தை அடுத்து, மீண்டும் ஒருதடவை, 2004 இல் ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்தின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில், “லோக்பால் சட்டமுன்வடிவு சட்டமாக் கப்படும்” என்ற உறுதிமொழி மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

லோக்பால் சட்டத்தின் அதிகார வரம் பெல்லைக்குள் பிரதமரையும் சேர்ப்பது தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல, சச் சரவுக்கு இடமுள்ள மேலும் பல பிரச் சனைகள் குறித்தும் விவாதித்துத் தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. நீதித்துறை யை இதில் சேர்ப்பது, நாடாளுமன்றத் திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்ளும் நடத்தை ஆகியன போன்ற பிரச்சனைகளும் இருக்கின்றன. நம் அரசியலமைப்புச் சட்டத்தில் அரசு அதிகாரிகளை மிகவும் எளிதான முறை யில் டிஸ்மிஸ் செய்வது அல்லது நீக்கு வது என்பதிலிருந்து அவர்களைப் பாது காக்கக்கூடிய வகையில் நன்கு வரை யறுக்கப்பட்ட பிரிவுகள் ஏற்படுத் தப்பட்டிருக்கின்றன.

இந்திய அயல்துறைப் பணிகள் , இந்திய ஆட்சிப் பணிகள் போன்ற மத்திய அரசுப் பணியாளர்களும், உச்ச நீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். அரசியலமைப்புச் சட்டத் தின் இத்தகைய ஷரத்துக்களும் திருத் தப்பட வேண்டுமா? லோக்பால் அமைப் பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தனியாகவோ அல்லது சேர்ந்தோ ஏறத் தாழ நீதித்துறை போன்றே செயல்படக் கூடிய அதிகாரங்களைப் பெறுகிறார்களா? அப்படியெனில் தற்போது இருந்து வரும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அல்லது மத்தியக் குற் றப்புலனாய்வுக் கழகம் போன்றவற்றின் தகுதிநிலை அல்லது தேவை என்னவாக இருந்திடும்?

இத்தகைய பிரச்சனைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் மத்தியில் கலந்தா லோசனைகள் மேற்கொள்ளும் நடை முறையை மத்திய அரசு துவக்கியிருக்கிறது. அதன் இறுதி வெளிப்பாட்டிற்காக நாடு காத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. எல்லாமும் முடிந்தபின், நம் அர சியலமைப்புச் சட்டத்தின் வரையறைகளின்படி, நம் கலந்தாலோசனைகளின் தரநிர்ணயம் எந்த அளவில் அமைந்திருந் தாலும், இறுதியாக இது தொடர்பாக நாடாளுமன்றத்தால் மட்டுமே ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு, பிரகடனப் படுத்த முடியும். எனவே, இவ்வாறு பல் வேறு தரப்பினர் முயற்சிகள் மேற் கொண்டபோதிலும், நாடாளுமன்றத்தின் முன் லோக்பால் சட்டமுன்வடிவைக் கொண்டுவராமல் மத்திய அரசு தப்பிக்க முடியாது.

தேசிய நீதித்துறை ஆணையம்

ஆயினும் அதே சமயத்தில் வேறு சில அம்சங்கள் குறித்தும் போதிய கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. மேல்மட் டங்களில் நடைபெறும் ஊழல்களை ஒழித்துவிட, லோக்பால் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் அமைப்புகள் போது மானவைகளா? அவற்றால் நாட்டில் நடைபெறும் ஊழல்களை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும், குறிப்பிட்ட அளவிற்குத் தடுக்கக்கூடிய விதத்திலா வது செயல்பட முடியுமா? மேல்மட்டங் களில் நடைபெறும் ஊழல்களுக்கு எதி ராக ஒரு வலுவான போராட்டம் பல முனைகளிலும் நடத்தப்பட வேண்டும். லோக்பால் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப் படும் அமைப்புகளின் அதிகார வரம் பெல்லைக்குள் பிரதமர் மற்றும் பிரதமரின் அலுவலகத்தையும் கொண்டுவரக் கூடிய அதே சமயத்தில், வேறு பல நட வடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டி யிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் பல ஆண்டு காலமாகவே தேசிய நீதித்துறை ஆணையம் அமைக் கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன. நீதிபதிகள் மற்றும் உயர் நீதித்துறை அலுவலர்கள் நியமனங்களைத் தீர்மானிப்பதோடு, நீதித்துறையினரால் மேற் கொள்ளப்படும் நெறிதவறிய நடத்தை களை விசாரிக்கக்கூடிய விதத்திலும் அதிகாரங்கள் இவ்வாணையத்திற்கு அளிக்கப்பட வேண்டும். அரசியலமைப் புச் சட்டத்தின் தற்போதைய நடைமுறை யின்படி தவறிழைத்த ஒரு நீதிபதியை நீக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. அவரை நீக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தின் மூலம் பணிநீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். இது எளிதில் கை யாளமுடியாத ஒன்றாக அமைந்திருக் கிறது. நடைமுறையில் ஊழல் பேர் வழிகளை அவ்வளவு எளிதாக அகற்ற முடியவில்லை. எனவே, லோக்பால் சட்டத்துடன் அதேபோன்றதொரு தேசிய நீதித்துறை ஆணையமும் அமைக்கப்பட வேண்டியிருக்கிறது. இந்தத் திசைவழி யிலும் கலந்தாலோசனைகளைத் தொடங்கிட அரசு முன்வர வேண்டும்.

தேர்தல் நிதித்தொகுப்பு

இந்த வேலைகளைச் செய்து கொண் டிருக்கும் சமயத்திலேயே, ஜனநாயக முறையில் வேட்பாளர்களைத் தேர்ந் தெடுப்பதைக் கடுமையாகப் பாதிக்கக் கூடிய விதத்தில், தேர்தல்களில் பண பலம் பயன்படுத்தப்படுவதை முற்றிலு மாக ஒழிக்கமுடியாவிட்டாலும் கணிச மான அளவிற்குக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில், நடைபெற்ற தேர்தல்களில் கிடைத்திட்ட அனுபவங்களிலிருந்து அர்த்தமுள்ள உறுதியான தேர்தல் சீர் திருத்தங்களைக் கொண்டுவரவும் நட வடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்.

தேர்தல்களுக்கு அரசே நிதி அளிப் பது தொடர்பாக சில விவாதங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதனை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டி யிருக்கிறது. உயர் இடங்களில் உள்ள லஞ்ச ஊழல்களைக் களைந்திட உண் மையிலேயே அரசு ஆர்வம் கொண்டிருந் தால், அரசியல் கட்சிகளுக்கு அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் நிதி அளிப் பது தடை செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் கூறி வந்திருக்கிறது. அரசியல் ஊழலுக்கு இது ஒரு முக்கியமான மூலகாரணமாக விளங்குகிறது. ஏனெனில் இவ்வாறு இவை அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது என்பதை ஒரு முதலீடாகவே கருதுகின்றன. நம் நாட்டின் ஜனநாயக அமைப்பை வலுப்படுத்தவும், ஒருங்கி ணைக்கவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிச்சயம் பங்களித்திட வேண்டும்தான். இதற்கு அவை தங்கள் நன்கொடைகள் மற்றும் நிதி உதவிகளை நேரடியாகவே தேர்தல் ஆணையத்திடமே அதனால் நிர் வகிக்கப்படும் நிதித்தொகுப்பிற்கு அளித் திடலாம். அல்லது தேர்தல் செலவினங் களுக்கு நிதி அளிப்பதற்காக அரசாங்கம் ஏதேனும் அமைப்பினை உருவாக்கி னால் அதனிடம் செலுத்திடலாம்.

மேல்மட்டங்களில் உள்ள லஞ்ச லாவண்யங்களைக் கட்டுப்படுத்த இவ் வாறு ஒரே சமயத்தில் பல்வேறு அமைப் புகள் உருவாக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

நிறைவாக மேல்மட்டங்களில் காணப் படும் லஞ்சத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியது அவசியம் என்று மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் கூற வேண் டிய தேவையில்லை. கடந்த சில ஆண்டு களில் பல்வேறு ஊழல்கள் மூலமாகவும் சூறையாடப்பட்டுள்ள பல லட்சம் கோடி ரூபாய்களும் அவ்வாறு கொள்ளையடிக் கப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டு, நாட்டு மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை ஏற் படுத்திடவும் கல்வி மற்றும் சுகாதாரத் தை அளித்திடவும் பயன்படுத்தப்பட்டி ருக்குமானால், சிறந்ததோர் வாழ்க்கை யை நாட்டு மக்களுக்கு அளிக்கக்கூடிய வகையில் மிகவும் தரமான முறையில் நம் நாடு மாற்றியமைக்கப்பட்டிருக்கும். எனவே, ஊழலை ஒழிப்பதற்கான போராட்டம் அறநெறி அடிப்படையிலும், பொருளியல் அடிப்படையிலும் சிறந்த தோர் இந்தியாவை உருவாக்க மிகவும் அவசியமானதாகும்.

தமிழில்: ச.வீரமணி

கருத்துகள் இல்லை: