உலகமே அழிந்துவிட்டது போல கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
நீதிபதிகள் தானாகவே முன்வந்து வழக்கு தொடுக்கிறார்கள் என்ன கொடுமை இது. பெரியார் இதைத்தான் "உச்ச நீதிமன்றம் அல்ல உச்சி குடுமி மன்றம்" என்றாரோ!
வாஜ்பாய் ஆட்சியிலும் மன்மோகன்சிங் ஆட்சியிலுமாக தீவிரமாக அமலாக்கப்பட்டிருக்கும் நாசகர நவீன தாராளமயக் கொள்கைகளால் விலைவாசி உயர்ந்து, வேலைகள் இழந்து, ஒட்டுமொத்தத்தில் நிம்மதியை இழந்து கடுமையான மன அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ள இந்திய மக்களிடையே, மன அமைதிக்காக யோகாகலை யின் மீது ஏற்பட்டுள்ள ஆர்வத்தை தனது தொழில் சாம் ராஜ்யமாக மாற்றிக் கொண்டிருக்கும் ‘யோகா குரு’ வான சாமியார் ராம் தேவ் நடத்திய உண்ணாவிரதத்தை மத்திய அரசு பலப் பிரயோகம் செய்து கலைத்த நிகழ்வு ‘ஒரு பாசிச நடவடிக்கை’ என்று ஆர்எஸ்எஸ்சும், பாஜக வும் கூக்குரல் எழுப்பியுள்ளன.
தில்லி ராம்லீலா மைதானத்தில் அமைதியான முறையில் உண்ணாவிரதம் மேற் கொண்டவர்கள் மீது போலீசை ஏவியது, ஜனநாயக விரோதமானதே; கண்டிக் கத்தக்கதே!
ஆனால், இது ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரானது என்ற வர்ணனையோடு மதவெறி சங்பரி வாரத்திற்கு வால்பிடிக்கும் கார்ப்பரேட் ஊடகங்கள் ஊதித்தள்ளிக் கொண்டிருப்பதும், நாடே தலைகீழாக கவிழ்ந்துவிட்டது போல ஒப்பாரி வைப்பதும் சகிக்கவில்லை.
வங்கம் முழுவதும், சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு கடந்த இருபதே நாட்களில் சுமார் 20 இடதுசாரித் தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்களே, கார்ப்பரேட் ஊடக நிருபர்கள் எங்கே போனார்கள்?
மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள், சிஐடியு அலுவல கங்கள், இடது முன்னணி அலுவலகங்கள் என 25க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக் கின்றனவே, என்டிடிவி, சிஎன்என்-ஐபிஎன், டைம்ஸ் நவ் போன்ற செய்திக் சேனல்களின் எடிட்டர்கள் என்ன செய்கிறார்கள்?
சிபிஎம் அலுவலகங்களை சூறையாடி, ஆயுதங்களை தாங்களே கொண்டு வந்து வைத்துவிட்டு, ஆயுதம் இருந்ததால் கைப்பற்றினோம் என்று திரிணாமுல் குண்டர்கள் கொலைவெறித்தாண்டவம் ஆடுகிறார்களே, ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ பேசும் அறிவு ஜீவிகள் எங்கே போனார்கள்?
எஸ்.பி.ஆர்.
அரசியல் தெளிவு பெற படியுங்கள் தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக