ஞாயிறு, 12 ஜூன், 2011

தாங்க முடியாத கட்டணக் கொள்ளை! உயிர் ஆயுதம் ஏந்திய உன்னிகிருஷ்ணன்

தொழில்நுட்ப படிப்பிற்கு மகளுக்கும், பள்ளியில் மகனுக்கும் கட்டணம் செலுத்த முடியாத தந்தை ஒருவர் ஏக்கத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். கட்டணக் கொள்ளை காரணமாக தற்கொலை செய்வது அதிகரித்து வருவதால் கோவை மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கோவை எஸ்ஐஎச்எஸ் காலனி யைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ் ணன் (42). இவரது உடல் சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் வியாழன் நள்ளிர வில் ரயில்வே போலீசாரால் கண்டெ டுக்கப்பட்டது. வெள்ளியன்று அவ ரது உடல் கோவை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்ப டைக்கப்பட்டது. உன்னிகிருஷ்ணன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட தாகவும், தான் மனம் வெறுத்து தற் கொலை செய்யக் காரணம் தனது மகள், மகனுக்கு கல்விக் கட்டணம் கூட கட்ட முடியாத வறுமைதான் என்று கடிதம் எழுதி வைத்திருந்த தாகவும் போலீசார் தெரிவித்தனர். கடிதத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து கோவை ரயில் நிலையப் போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

உன்னிகிருஷ்ணன் தனது குடும்பத் தினருடன் ஒண்டிப்புதூர் கம்மவார் வீதியில் வசித்து வந்தார். அவரது மனைவி நந்தினி, மகள் சுபிக்ஷா(19), மகன் திவேக் (16). மகள் சுபிக்ஷா கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ (கம்ப்யூட்டர் சயின்ஸ்) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மகன் திவேக் என்.ஜி.ஆர். மேல்நிலைப் பள் ளியில் 10 ம் வகுப்பு தேர்வெழுதி மொத்தம் 474 மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக தேறினார். மனைவி நந்தினி சிப்ஸ் தயாரிக்கும் கடையில் தினக் கூலி தொழிலாளியாக உள்ளார். உன்னிகிருஷ்ணன் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் பால சுப்பிர மணியா பஞ்சாலையில் நிரந்தரத் தொழிலாளியாக பணியாற்றி வி.ஆர். எஸ் பெற்றவர். சமீபகாலம்வரை பெருந்துறையில் தனியார் மில்லில் பணியாற்றி வந்துள்ளார். மகளுக்கு முதலாமாண்டு படிக்க ரூ.32 ஆயிரத்து 500 செலுத்தியுள்ளனர். இந்த ஆண்டு ரூ.25 ஆயிரத்து 500 செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. நல்ல மதிப்பெண்கள் பெற்ற போதிலும் பணம் இல்லாத காரணத்தால் மகன் திவேக்கை ஒட்டர்பாளையத்தில் உள்ள கதிரிமில் மேல்நிலைப் பள்ளி யில் சேர்த்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாகவே மகள், மகன் படிப்பிற்கு பணம் செலுத்திட, எங்காவது சென்று பணம் தயார் செய்து வருகிறேன் என்று சென்றுவிட்ட உன்னிகிருஷ் ணனை மீண்டும் குடும்பத்தினர் பிணமாகத்தான் பார்த்துள்ளனர்.

“யாருக்கு கஷ்டமென்றாலும், நல்ல, கெட்ட காரியங்களிலும் முன் னின்று என் அப்பா செயல்படுவார். பிளஸ் 2 வரையே படித்திருந்த அப்பா எனக்கும், தம்பிக்கும் கணக்குப் பாடம் சொல்லித் தருவார். நாங்கள் டியூசன் சென்றதேயில்லை. என் தம்பி பத்தாம் வகுப்பில் கணக்கில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்திருக்கான், தெரியுமா அண்ணா” என்று அழுத வாறே சுபிக்ஷா கூறியது கூடியிருந் தோர் கண்களை குளமாக்கியது.
தீக்கதிர்

கருத்துகள் இல்லை: