ஞாயிறு, 12 ஜூன், 2011

பத்திரிகையாளர்கள் கொலை ‘சாதனை’ பட்டியலில் இந்தியா

பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுவதில் தீர்வு காண முடியாத நாடு கள் பட்டியலில் இந்தியா 7வது இடம் பெற்றுள்ளது. பெருமைப்பட்டுக் கொள்ள முடியாத பட்டியலில், மோச மான சாதனை நிலையில் இந்தியா நின்று கொண் டிருக்கிறது.

கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி முதல் 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம்தேதி வரை 13 நாடுகள் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பத்திரி கையாளர்கள் கொலை களில் தீர்வு காண முடியாத நிலையில் உள்ளன. பத்திரி கையாளர்கள் கொலையில் 70 சதவீதம் பேர் பணி சார்ந்த விஷயங்களிலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகையை கருத் தில் கொண்டு, தீர்வு காணப் படாத பத்திரிகையாளர்கள் கொலை விபரப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

தீர்வு காணப்படாத பத் திரிகையாளர்கள் கொலை கள் பட்டியலில் இராக் முத லிடத்தில் உள்ளது. அங்கு இந்த காலகட்டத்தில் 92 தீர்வு காணப்படாத பத்திரி கையாளர்கள் கொல்லப் பட்டனர். பிலிப்பைன்சில் 56 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மக்கள் தொகை அடிப் படையில் பத்திரிகையா ளர்கள் கொலையில் இராக், சோமாலியா, பிலிப் பைன்ஸ், இலங்கை, கொலம்பியா நாடுகள் உள்ளன.

பத்திரிகையாளர்கள் கொலை தொடர்பான பட் டியல் இந்த மாதம் துவக் கத்தில் வெளியானது. பாகிஸ் தான் 10வது இடத்திலும், வங்கதேசம் 11வது இடத்தி லும் உள்ளன. பத்திரிகை யாளர்கள் கொலை பட்டி யலில் இலங்கை, ஆப்கா னிஸ்தான், நேபாளம், பாகிஸ் தான், வங்கதேசம், இந்தியா ஆகிய நாடுகளும் உள்ளன.

ஜோதிர்மாய் என்ற எழுத்து போராளி படுகொலை


மும்பையில் மூத்த பத்திரிகையாளர் ஜோதிர்மாய் தேயை சுட்டுக் கொன்ற கயவர்கள், மும்பையை தலைமை யிடமாகக் கொண்டு இயங்கும் பெட் ரோலிய மாபியா கும்பலை சேர்ந்தவர் களாக இருக்கக்கூடும் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மும்பையிலிருந்து வெளியாகும் ‘மிட் டே’ என்ற ஏட்டின் சிறப்புப் புலனாய்வு ஆசிரியராக 56 வயதான மூத்த பத்திரி கையாளர் ஜோதிர்மாய் தே பணியாற்றி வந்தார். இவர் மும்பையின் நிழலுலக தாதாக்களின் கொடிய நடவடிக்கைகள் குறித்தும், பெட்ரோலிய கடத்தல் மாபியா கும்பலுக்கும் அதிகாரிகள் மற்றும் அரசி யல்வாதிகளுக்கும் இடையிலான தொடர் புகளை அம்பலப்படுத்தி வந்தார். இந்நிலையில் சனிக்கிழமையன்று மும்பை புறநகர் பகுதியான போவாய் எனு மிடத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பத்திரிகையாளர் தே கொடூர மான முறையில் சுட்டு படுகொலை செய் யப்பட்டார். இச்சம்பவம் மும்பை மட்டு மின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

   தேயின் இறுதி நிகழ்ச்சிகள் ஞாயிறன்று கத்கோபாரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.  பெரும் எண்ணிக்கையிலான ஊடகத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். கொல்லப்பட்ட இந்த துணிச்சல்மிக்க பத்திரிகையாளருக்கு சுபாஷ் சர்மா என்ற மனைவியும், தாயாரும் உள்ளனர்.


கருத்துகள் இல்லை: