தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூன் முதல் வாரம் நடந்து முடிந்துள் ளது. தேர்தல் முடிவு, தென் அமெரிக்காவில் தொடர்ந்து அடித்து வரும் சிகப்பு அலை பெரு நாட்டையும் தாக்கியுள்ளது என்பதை தெளிவு படுத்தியுள்ளது. ஒலாண்டா ஹூமாலா என்ற இடதுசாரி தேசியவாதி 51 சதவீத வாக்கு களைப் பெற்று, அவரை எதிர்த்துப் போட்டி யிட்ட கெய்கோ ஃ பியூஜிமோரி என்ற பெண் மணியைத் தோற்கடித்துள்ளார். கெய்கோ ஃ பியூஜிமோரி பெருவின் முன்னாள் குடியர சுத் தலைவர் அல்ஃபெரடோ ஃபியூஜிமோரி யின் புதல்வியாவார்.2006ல் நடந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய ஹூமாலா இம் முறை வெற்றி பெற்றுள்ளார்.
சென்ற தேர்தலின் போது வெனிசுலா தலைவர் சாவேஸுடன் தனக்கு உள்ள நெருக்கத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டார். சிகப்புச்சட்டை அணிந்து கொண்டே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட் டார். அன்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி புஷ், பெரு நாட்டின் தேர்தலில் நேரடியாகத் தலை யிட்டு, ஹூமாலாவின் தோல்விக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார். விக்கி லீக்ஸ் கேபிள்ஸ் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்க அரசு 2006 பெரு தேர் தலை எவ்வாறு உன்னிப்பாகக் கவனித்து தலையிட்டது என்பது தெரியவந்துள்ளது.
இம்முறையும் பெரு நாட்டு வலதுசாரிகள், ஹூமாலா ஆட்சிக்கு வந்தால் சாவேஸின் பிரதிநிதியாகவே செயல்படுவார் என்று பிரச்சாரம் செய்தார்கள். சாவேஸ், ஹூமாலா மூலம் பெருவிற்கு பொலிவாரியன் புரட்சியை ஏற்றுமதி செய்வதற்கு முயற்சிக்கிறார் என்றார் கள். கெய்கோ ஃ பியூஜிமோரியின் வெற்றி யையே அமெரிக்கா விரும்பியது. கெய்கோ ஃபியூஜிமோரி வெளிப்படையாகவே அமெ ரிக்க ஏகாதிபத்தியச் சார்பையும், ஹூமாலா தென் அமெரிக்காவின் இன்றைய அரசியல் பொருளாதாரத்தின் காந்த சக்தியாகத் திகழும் பிரேசில் சார்பையும் வெளிப்படுத்தினார்கள். ஹூமாலாவின் வெற்றி பிரேசில் நாட்டு கம்பெனிகளுக்கு பெருவின் உலோக வளம் திறந்துவிடப்படும் என்று ஒபாமா தன் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளார். பெரு நாட்டின் உலோக வளத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் பிரேசில் நாட்டிற்கும் இடையில் நிலவும் போட்டி கூர்மையடைந்து வருவது புலப்படுகிறது.
பெருவின் தேர்தல் முடிவை அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்கத் திற்கு ஏற்பட்டுள்ள தடையாகப் பார்க்கிறது. தென் அமெரிக்காவில் புதிதாகத் தோன்றி யுள்ள (ருசூஐளுஹசு) “தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு” மற்றும் (ஹடுக்ஷஹ)” அமெரிக்கா வுக்கு எதிரான பொலிவாரியன் மாற்று” போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு கூட்டமைப்பு கள் அமெரிக்காவுக்கு எரிச்சலூட்டுவனவாக உள்ளன. சிலி, கொலம்பியா ஆகிய இரு நாடு களில் மட்டுமே அமெரிக்க ஆதரவு வலது சாரி அரசுகள் அமைந்துள்ளன. அதிலும் கொலம்பியாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஜனாதிபதி மேனுவல் சான்டாஸ் இடதுசாரிகள் பக்கம் ஈர்க்கப்படுவது அதிர்ச் சியைத் தருகிறது. ஜூலை 5ம் தேதி கெர காஷ் நகரில் கூடவிருக்கும் கரீபியன் மற்றும் இலத்தீன் அமெரிக்க அரசுகளின் சந்திப்பு (ஊநுடுஹஊ) மேலும் சலிப்பைத் தருகிறது. இக்கூட்டமைப்பில் அமெரிக்க ஐக்கிய குடியரசு மற்றும் கனடா தவிர அமெரிக்கா கண்டத்தில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் ஒன்றுசேருகின்றன.
இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹூமாலா சாவேஸை அதிகம் முன்னிறுத் தாமல் மிதவாத இடதுசாரியாக அறியப்படும் பிரேசில் நாட்டின் முன்னாள் தலைவர் லூலா டி சில்வாவையே முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்தால் பிரேசில் நாட்டில் லூலா டி சில்வா சாதித்ததை எல்லாம் சாதித்துக் காட்டுவேன் என்று சொல்லியுள்ளார். பெரு நாட்டின் இயற் கை வளங்களை பன்னாட்டு பகாசுரக் கம்பெ னிகள் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்தி, பெரு நாட்டு உலோக வளங்களைப் பாதுகாப் பேன் என்று உறுதி கூறியுள்ளார். தனது வெற் றிக்குப் பின் ஹூமாலா பிரேசில் நாட்டுக்குச் சென்று பிரேசிலின் இந்நாள், முன்னாள் ஜனாதிபதிகளைச் சந்தித்து ஆதரவைத் திரட்டியுள்ளார். மிகப் பெரிய உலோக வளங் களைக் கொண்டிருந்தாலும் பெரு நாட்டில் வறுமை 30 சதவீத மக்களை பெரிதும் பீடித் துள்ளது. 8 சதவீத மக்கள் கொடிய வறுமை யில் உழல்கின்றனர். நாட்டின் இயற்கை வளத் தின் பலன்களை ஏழை எளிய மக்களுக்குச் சேர்ப்பேன் என்றும் கூறியுள்ளார். 65 வயதைக் கடந்த மூத்த குடி மக்களுக்கு முதியோர் பென்சனையும் உத்தரவாதப்படுத்தியுள்ளார்.
சந்தைப் பொருளாதாரம் பெரு நாட்டின் பெரும் பகுதி மக்களைப் பாதித்துள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். பெரு நாட்டு மக்க ளுக்கு ஹூமாலாவிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அருகாமையில் உள்ள நாடுகளில் தோன்றியுள்ள இடதுசாரி அரசுகள் மக்கள் நல அரசுகளாகச் செயல்பட்டு, மக்களின் வறு மையைப் போக்க முயற்சிப்பது போல் பெரு விலும் ஹூமாலா நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படு கிறது. மண்ணுக்குச் சொந்தக்காரர்களான அமெரிந்தியர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களின் இயற்கை வளங்களை எந்த பன்னாட்டு கம்பெனிகளும் கொள்ளையடிக்க விடமாட்டேன் என்று ஹூமாலா சூளுரைத் துள்ளார். விடியலுக்காகக் காத்திருக்கும் பெரு நாட்டு மக்களின் நம்பிக்கை வீண் போகாது என்று நம்புவோம்.

பேரா.பெ.விஜயகுமார்
1 கருத்து:
ரஜினி அவர் ஒரு புதிய படத்திற்கு தளிர்கள் அசல் முடிவு சத்தியங்களையெல்லாம் மற்றும் எல்லாம் அது நடைமுறைகள். மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR
கருத்துரையிடுக