திங்கள், 25 ஜூலை, 2011

திசைதிருப்ப முயன்ற திமுக பொதுக்குழு கூட்டம்

கோவையில் கூடிய திமுக பொதுக் குழு கூட்டத்தின் தீர்மானங்கள், அக்கூட் டத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஆற்றிய உரை, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி ஆகியவற்றைப் பார்க்கும் போது, திமுக திசை தெரியாமல் தவிக் கிறதா? அல்லது திசை திருப்ப முயல்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

இக்கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. கச்சத்தீவை மீட்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; மத்திய அரசு உடனடியாக டீசல், பெட்ரோல், கேஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையைக் குறைக்க வேண்டும்; தமிழ் உள்ளிட்ட மாநில ஆட்சி மொழிகளை மத்திய ஆட்சிமொழியாக, உயர்நீதிமன்ற மொழியாக மாற்ற வேண்டும்; மத்திய- மாநில உறவுகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி துவங்கி, காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசுகள் வரை, தொடர்ந்து திமுக மத் திய அரசில் அங்கம் வகித்து வருகிறது.

பெட்ரோல்- டீசல் விலையை வாஜ்பாய் அரசு துவங்கி மன்மோகன் அரசு வரை மத்திய அரசு உயர்த்திய போதெல்லாம், மத்திய அமைச்சரவையில் அதற்கு தலையாட்டியே வந்துள்ளது திமுக! “நான் கஷ் டத்தைச் சொன்னேன்; அவர்கள் நஷ்டத்தைச் சொன்னார்கள்” என்று விலை உயர்வை நியாயப்படுத்தவும் திமுக தலை வர் தயங்கியதில்லை. இப்போதும்கூட திமுக, மத்திய அரசில் அங்கம் வகிக்கிறது. கேபினட் கூட்டங்களில் திமுக பெட்ரோ லியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்ததுண்டா?

மத்திய ஆட்சிமொழியாக, உயர்நீதி மன்ற மொழியாக தமிழை மாற்ற மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சி என்ற அடிப்படையில் திமுக எடுத்த நடவடிக்கை என்ன?

கல்வித்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும், மாநிலங்களின் அதிகாரங் கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டே வருகின்றன; மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக, இதைத் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?

இப்போது, திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள மத்திய அரசு தொடர்பான தீர்மானங்கள் யாருக்காக, யாரை நோக்கி போடப்படுகின்றன என்பது பெரும் புதிர்!

திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது; மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கைது; அமைச்சர் தயாநிதி மாறன் ராஜினாமா என தொடர்ச்சியாக நடந்துவரும் பின்னணியில், காங்கிரஸ் கட்சியைக் குறைகூற திமுகவினால் முடிய வில்லை. கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க விடாமல் செய்வது மத்திய புலனாய்வுத் துறையில் உள்ள சிலரின் உள்நோக்கம் தான் என்று திமுக தலைவர் குற்றம் சாட்டி யுள்ளார்.

ஆனால் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, உச்சநீதிமன் றத்தில் வாதிடுகையில், ஸ்பெக்ட்ரம் முறை கேடு தொடர்பான அனைத்து முடிவுகளும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் முந்தைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்று ஒரே போடாகப் போட்டுள்ளார். இது ஆ.ராசாவின் சொந்தக் கருத்து என்று திமுக தலைமை உடனடி யாக மறுக்கிறது.

அப்படியென்றால், “ஸ்பெக்ட்ரம் ஊழலை ஒரு நபர் தனியாக செய்திருக்க முடியாது...” என்ற கருணாநிதியின் முந் தைய கருத்து என்னவாயிற்று?

உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை நடைபெறுவதால்தான் சிபிஐ ஓரளவு நடவடிக்கை எடுத்து வருகிறது; ஆ. ராசா, கனிமொழி, தயாநிதிமாறன் ஆகி யோர் குற்றமற்றவர்கள் என்று காங்கிரஸ் கட்சியினர் ஒருபோதும் கூறவில்லை; மாறாக “சட்டம் தன் கடமையைச் செய் கிறது” என்றுதான் கூறி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி மீது திமுகவினால் கோபத்தைக் காட்ட முடியாத நிலையில், சிபிஐ மீது பாய்கிறது திமுக! இதை அரசி யல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக வினால் கூறமுடியவில்லை.

ஆனால், தமிழகத்தில், திமுகவினர் மீது தொடுக்கப்பட்டு வருகிற நிலப்பறிப்பு புகார்கள் மீதான வழக்குகளை மட்டும்,, அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக தீர்மானம் கூறுகிறது. ஏனிந்த இரட்டை நிலை...?

2006-ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே நிலப்பறிப்பு புகார்களை விசாரிக்க வேண் டும் என்று திமுக பொதுக்குழு கூறுகிறது; இப்போது வீரபாண்டி ஆறுமுகம் உட்பட எழுந்துள்ள நிலப்பறிப்பு விவகாரங்கள் அனைத்தும், திமுக ஆட்சியில் நடந்தவை தான்; அதைத் தடுக்க முந்தைய திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

குறிப்பாக வீரபாண்டி ஆறுமுகத்தால் நிலத்தை இழந்த அங்கம்மாள் காலனி பொதுமக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போராடியது; அந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யக்கூட முந்தைய திமுக அரசு தயாராக இல்லை!

“திமுகவை நிலைகுலையச் செய்யும் ஆற்றல் வெற்றி- தோல்விகளுக்குக் கிடை யாது” என்று திமுக தலைவர் கருணாநிதி பேசியுள்ளார். திமுக கூட்டணிக்கு வாக் களித்த 1 கோடியே 45 லட்சம் பேருக்கு நன் றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது; ஆனால் தன்னுடைய ஆட்சிக்கால குடும்ப ஆதிக் கம், பொருளாதாரச் சீர்கேடு உள்ளிட்ட பிரச் சனைகள் குறித்து, குறைந்தபட்ச சுயமதிப் பீட்டிற்குக் கூட திமுக தயாராக இல்லை என்பதையே அக்கட்சியின் பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள் காட்டுகின்றன.

“திமுகவுக்கு, காங்கிரஸ் மீது எந்த அதிருப்தியும் இல்லை” என்று சமாளித்தா லும் திமுக- காங்கிரஸ் கூட்டணி மீது மக் களின் அதிருப்தியே தேர்தல் முடிவு என் பதை திமுக மறைக்க முயல்கிறது; மொத்தத் தில் பொதுக்குழு, அந்த கட்சிக்குள் பிரச் சனைகள் முற்றி வருகின்றன என்பதையே காட்டுகின்றன.

டி.கே.ரங்கராஜன் எம்.பி.,

கருத்துகள் இல்லை: