திங்கள், 5 டிசம்பர், 2011

அழுகி நாற்றமெடுக்கும் அமைப்பின் மீது காறித் துப்புவதற்கு மாற்றாக

மிழ் நாவல்கள் குறித்த தர்க்கங்களும் விவாதங்களும் இன்றுவரை நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தொண் ணூறுகளுக்குப் பிறகு தமிழில் பொருட் படுத்தத்தக்க நாவல்களின் வருகை கணிசமாகியிருக்கிறது. பால்யகால ஞாபகங்கள் மட்டுமே இருந்த நிலை மையெல்லாம் காணாமல் போய்க்கொண் டிருக்கிறது. வரலாற்றை கட்டமைப் பதில் நாவல்களைத் தவிர வேறு எந்த இலக்கிய வகைமைக்கும் சாத்திய மில்லை. எழுத்தாளன் உருவாக்கி மிதக்கவிட்டிருக்கிற பிரதிகளே இவை யாவற்றிற்கும் சாட்சி. இத்தகைய பார தூர மாற்றங்களை தமிழில் உருவாக் கியதில் தனக்கு பங்கிருக்கிறது, தவறு, தனக்கு மட்டுமே பங்கிருக்கிறது என் பதில் மிகுந்த நம்பிக்கையோடிருப்ப வர் எழுத்தாளர் ஜெயமோகன். அந்த மாபெரும் நம்பிக்கையில் தான் “விஷ்ணு புரம்” எனும் தன்னுடைய நாவலைத் தலைப்பாக்கி இலக்கிய வட்டம் எனும் அமைப்பையே உருவாக்கியிருக்கிறார்.

பின்தொடரும் நிழலின் குரல், காடு கொற்றவை (நாவல் அல்ல காப்பியம்/ ஜெயமோகனின் மதிப்பீடு ) என இக் காலத்தில் அவருடைய புனைவிலக் கியங்கள் வெளிவந்திருக்கின்றன. மற்ற யாவற்றையும் விட அவருடைய ஏழாம் உலகம் கவனித்துப் பரிசீலிக்க வேண்டிய நாவலாக இருக்கிறது.

நிறுவனமயமாகிவிட்ட பெருங் கோவில்களின் வழிநெடுக வீற்றிருக் கும் பிச்சைக்காரர்களை நமக்குத் தெரியும். தம்முடைய கொடைப் பணியை நிரூபித்திடக் கிடைத்திட்ட வர்கள் அவர்கள் என்ற புரிதலுடன் தான் மனிதர்கள் அவர்களை அணுகு கிறார்கள். தரையோடு ஒடிந்து கிடக் கும் அவர்கள் எவரின் முகமும் பார்ப் பதில்லை. கால்களே அவர்களுக்கு மனிதர்கள். தன்னைக் கடந்து போகும் மனிதனிடம் இருந்து ஏதாவது பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு கூரான கத்தி யாக தொங்கிக் கொண்டிருக்கிறது. பிச்சைப் பாத்திரம் நிறைய வேண்டும், இல்லையென்றால் தண்டனை நிச்ச யம். தன்னை விலைக்கு வாங்கிய எஜ மானனுக்கு விசுவாசமாக இருந்து சம்பாதிப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை அவர்களுக்கு. அப்படி யான மனிதத் தசைகளின் கதையே “ஏழாம் உலகம்”.

போத்தி வேலுப் பண்டாரம் மூன்று பெண் குழந்தைகளின் தகப்பன். தன் செல்லப் பிள்ளைகளைக் கரையேற் றவே உருப்படிகளை வாங்கி பழனி படிக்கட்டிகளில் பிச்சையெடுக்க விடுகிறான். நாவலுக்குள் பழனி காட் சிப் படுத்தப்பட்டுள்ள விதம் மிக நுட்ப மானது. எல்லா இடங்களும் அதனதன் தன்மையில்தான் இருக்கிறது. இருப்பை உணர்வதும், இருத்தலைப் பற்றிய புரிதலும்தான் வேறு வேறாக இருக்கிறது. தைப்பூசத்து நாட்களில் பழனியின் வண்ணத்தையும் வாசத் தையும் பக்தர் கூட்டம் அள்ளித் தெளிக் கிறது. உருப்படிகள் பிச்சையேந்தி நிற்கிறார்கள். வாழ்க்கையில் எல்லோ ரும் தான் பிச்சையெடுக்கிறோம் என் கிற நூதன புரிதல் அவர்களுக்குள் வந்து சேர்கிறது. வாழ்க்கைதான் எல்லாவற்றையும் கற்றுத் தருகிறது. “பிச்சை எடுக்கானுகடே சாமிகிட்ட பிச்சை எடுக்கானுக சும்மா கேட்டா பிச்ச குடுத்துடுவானா?” என்றார் ராமப்பன் “ நாம இவனுகள்ட்ட பிச்ச எடுக்கம். இவனுக அங்க மேலே உள்ள பிச்சக்காரஆண்டிக் கிட்ட பிச்ச எடுக் கானுக” இப்படி வழிநெடுக நக்கலும் நையாண்டியுமாகத் தான் வாழ்நாளை எதிர்கொள்கிறார்கள்.

நாவலில் முத்தம்மை பிள்ளை பெற்றுத்தரும் இயந்திரம். வாழ்க்கை யில் கசப்பை ருசித்தபடியே வாழ எப்படி முடிகிறது இவர்களால் எனும் கேள்வி முளைத்துக் கொண்டேயிருக் கிறது. போத்தி வேலுப் பண்டாரத்தின் விளை நிலம் முத்தம்மை. அவளின் பிரசவ அவஸ்தையின் துயர்மிகு குர லில் தான் நாவல் துவங்குகிறது. நாவ லின் உரையாடல்கள் நம்மை பசுமாடு கன்று ஈனப்போகிறது போல என்ற மனநிலையில்தான் வைத்திருக் கிறது. முத்தம்மை மல்லாந்து கிடந்து உருவம் சிதைந்த குழந்தையைப் பெறும் போது மனம் அடையும் பெருந்துயரம் வழி நெடுக வாசகனை நிலை குலையச் செய்கிறது. பதினாறாவது பிள்ளையே நாவலுக்குள் முத்தம்மை பிரசவிக்கும் குழந்தை. எல்லாக் குழந்தைகளும் போலவே இதுவும் குறை பிறவிதான். அதற்கு பண்டாரமும், ஜெய மோகனும் நமக்குச் சொல்லும் காரணங்கள் குருடு, கூன் போன்ற சக உருப்படிகளோடு தான் இணையவிடப்படுகிறாள் முத் தம்மை. எனவே தான் இப்படி பிறக் கின்றன குழந்தைகள். அறிவியலுக்கு முரண் ஆனது என்று சொன்னால் ஜெயமோகன் நிச்சயம் சொல்வார், அறிவால் என்னுடைய படைப்பை உணர முடியாது. ஆழ்மனதிலுள் பய ணிக்கும் போது மட்டுமே எல்லாம் சாத்தியம் என்று.

“ஏழாம் உலகம்” நாவல் விவாதத் திற்குள்ளாக்கப்பட வேண்டிய எழுத் துப்பிரதி என்று எனக்குப்படுகிறது. விரிவும், அழகும் கொண்டதான தமிழ் புனைவுப் பரப்பில் மனிதகுலத்தின் வாழ்வு பதிவாகிக்கொண்டுதான் வருகிறது. வாழ்க்கை முன்வைக்கும் விசித்திரமான சிக்கல்களை எதிர் கொண்டு படைப்பிலக்கியம் இயக்கம் பெறுவது ஒருசில நேரங்களில் தான் நடக்கிறது. காலந்தோறும் மனித குலம் கட்டி வளர்த்த அறமும், அன்பும், ஒழுங் கும் இன்று நொறுங்கிப் போவதைக் கண்டு பதைத்திடத்தான் செய்கிறது மனம். வாழ்ந்து தீர வேண்டிய நிர்ப் பந்தத்தில் பொய்மையைக் கவசமாக் கித் திரிகிறார்கள் மனிதர்கள். படைப் பாளி இவையாவற்றையும் கூர்ந்து நோக்குகிறான். பொய்மைகளையும், தந்திரங்களையும் நிகழ்த்தியபடி பொருள் தேடியலையும் மனிதக் கூட்டத்தின் கதைகளை மறுமுறையும் உருவாக்கிப் பார்க்கிறான் படைப்பாளி. சொல்லித் தீராத வாழ்வின் சிக்கல்களின் தொகுப்பே “ஏழாம் உலகம்” எனும் படைப்பாகி யிருக்கிறது.

ஏழாம் உலகத்திற்குள் உலவித்திரி கிற மனிதக்கூட்டம் தமிழ் இலக்கியப் பிரதிகளுக்குள் இது வரை வந்து சேர்ந் திராத அங்க ஹீனர்கள், பெரு நோய்க் குள்ளானவர்கள், குரூரத் தோற்றம் கொண்டவர்கள், குறைபிறவிகள். அத னால் பிச்சையெடுத்து வாழ்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்கள். இவர்களைப் பின் நவீனத்துவ சொல் லாடலில் விளிம்புநிலை மாந்தர்கள் என்று சொல்லலாமா என யோசித் தால், விளிம்பிற்கும் வெளியே நிற்கும் வெளியே வாழ விதிக்கப்பட்டவர் களாக இருக்கிறார்கள். பிச்சை யெடுத்து வாழும் இரப்பானிகளாக வாழ வாழ்க்கை அவர்களை நிர்ப்பந்திக் கிறது. இதற்குள் இயங்கும் வர்த்தகம், உள்ளூர் அதிகாரக் குறியீடான போலீஸ் ஸ்டேஷனின் குரூரம் என யாவும் நம்மை நோக்கி முகத்தில் காறி உமிழ்கிறது, மனிதர்கள் அல்ல; இவர்கள் யாவரும் உருப்படிகள். ரத்தமும் சதையுமான ஊத்தப் பொருட்களாகவே இவற்றை போத்தி வேலுப் பண்டாரம் பார்க்கிறார். தனக்கும் தன் குடும்பத்திற்கும் பொருள் ஈட்டித் தரும் மாயாவிகளாக வும் அவரைப் பார்க்கச் செய்கிறது வாழ்க்கை.

ஆழ்மன பயண சாகசம் எதுவும் வாசகனுக்கு தேவையாக இருக்கப் போவதில்லை. ஏழாம் உலகத்தை வாசித்தறிய மிக நேரடியான மொழியில் எழுத்தாளனின் ஆழ்மனம் நாவலெங் கும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக் கிறது. உருப்படிகளை வைத்து பணம் பார்த்திடும் போத்தி வேலுப் பண்டா ரத்தின் மகள் சின்னவள். அக்காவின் கல்யாணத்திற்காக பிச்சையெடுக்க வைத்து சேர்த்திட்ட பணம், நகை என எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு ஒரு நாடாருடன் ஓடிப்போகிறாள். அவனுக்கு ஏற்கெனவே மூன்று திரு மணம் நடந்தேறியிருக்கிறது என்றும் நாவல் பதிவு செய்கிறது. ஏன் ஒடிப் போனாள் என்பதற்கான ஜெயமோக னின் கண்டுபிடிப்பு தான் இங்கு முக் கியம்.

“சின்னவள் அப்போதும் எழுந் திருக்கவில்லை, கலைந்த உடையும் உலர்ந்த எச்சில் கோடுகளுமாக பப் பரக்கா என்று தூங்கிக் கொண்டிருந் தாள்” “பண்டாரம் வீட்டிற்கு வந்த போது சின்னவள் திண்ணையில் ராணி, தேவி, வாரமலர் எல்லாவற்றை யும் பரத்திப்போட்டு உட்கார்ந்திருந் தாள்” ஒருவேளை ராமாயாணமும் மகாபாரதமும் படிக்கிற பெண்ணாக இருந்திருந்தால் ஒடிப்போகாமல் இருந்திருப்பாள் என நினைத்திருப் பார் ஜெயமோகன்.

நாவலுக்குள் மலையாள அரசியல் பேசுவதற்காகவே இரண்டு பேர் வந்து போகிறார்கள். ஒருவர் கொச்சன் என்கிற கம்யூனிஸ்ட், மற்றவர் அகமது குட்டி என்கிற எரப்பாளி. அகமது குட்டி பெரிய அறிவாளியாக தோற்றம் பெறுகிறான். லோக்கல் போலீஸிற்கே எப்.ஐ.ஆர் போட சொல்லித் தருகிற வன். “ கேரள மண்னை எடைபோட்டு தூக்கி விக்கிறாங்க, கேவலம் ஆயிரம் கோடிரூபாய்க்கு மரகதப் பட்டுடுத்த மலையாள மண்ணை விக்கிறானுங்க நாயின்ற மோம்மாரு....” “நாடு ஃபரிக் கான் அறியாத்த நாயின்டை மோன் அவனானு நாயனாரு. கேக்கிறதுக்கு நல்ல உசிருள்ள காங்கிரஸ்காரன் இல்லை. கருணாகரன்றெ பல்லு போயி, ஆன்டனிக்க பண்டே பல்லு இல்ல...” “உம்மயும் என்னையும் பண் டாரம் வித்து வாங்குறான். எல்லாரையும் சேத்து ராஜிவும் நாயனாரும் விக்கி றான்” இப்படி வழிநெடுக கம்யூனிஸ்ட் களின் மேல் இருக்கும் தன்னுடைய கோபத்தையெல்லாம் அகமது குட்டி வழியாக நாவலெங்கும் பேச விடுகிறார் எழுத்தாளர். நமக்கு, ஏன் அகமது குட்டி இந்துத்துவ அபாயம் குறித்தெல்லாம் பேசவில்லை என கேட்கத் தோன்று கிறது. நாவல் நிகழும் காலத்தில் இந் துத்துவ அபாயம் மேலோங்கியிருக்க வில்லை என ஜெயமோகன் சமாளிக் கத் தான் செய்வார். ஆனால் மாட்டுக் கறி உணவு பற்றி ய அகமதுவின் கருத் தில் மாடு ஹராம் இல்லை. ஆனால் குடியானவனும், பசுவும் சொர்க்கத்தில் நண்பர்கள் என்றெல்லாம் அகமதுவை சொல்ல வைத்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்.

மற்றொருவர் கொச்சன். அவர் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆள். அவரு டைய தொழிலும் உருப்படிகள் வாங்கி விக்கிறது தான். கட்சி பற்றிய உளறல், புரட்சி பற்றிய உளறல் எல்லாவற்றை யும் கொச்சன் வழியாகவே செய்து பார்க்கிறார் ஜெயமோகன். “மனுசனை மனுசன் விக்காம முதலாளித்துவம் உண்டா மக்கா?” “பண்டாரமே , இது ஒரு மாஸ் ஹீஸ்டீரியாவாக்கும். இதே மாதிரி மாஸ் ஹிஸ்டீரியாவாக்கும் போர். புரட்சியும் அப்படித்தான்” “ நீரு சாமியார் ஆயிடும் காவி வேட்டி, கமண் டலம் விபூதி காம்ரேடுன்னு சொல்லா மல் மைசன் அப்படீன்னு சொன்னா தீந்தது. உதிர நிமித்தம் பல வித வேஷம்”. இது போதுமானதாக இருக்கிறது ஜெயமோகனை அறிய, அவரின் இலக் கியப் புலத்தின் நிலை அறிந்திட.

எப்போதும் தன்னுடைய பணியை கச்சிதமாக செய்து முடிக்கிறவர் ஜெய மோகன். கடவுள்களின் கோவில் களின் மீது சின்ன , சின்ன அதிர்ச்சி களை ஏற்படுத்திட மட்டுமே ஏழாம் உலகைப் பயன்படுத்தியுள்ளார். அழுகி நாற்றமெடுக்கும் அமைப்பின் மீது காறித் துப்புவதற்கு மாற்றாக கம்யூ னிஸ்ட்களின் மீது வசை, கிறிஸ்தவத் தின் மீது கோபம், இஸ்லாமானவர்களி டம் மட்டும் இருக்கும் மதவெறியர் களைப் பட்டியலிடுகிறார். கவனமாக இந்துத்துவ விமர்சனம் எங்கும் இல்லை. இது தான் ஜெயமோகன்.

ம.மணிமாறன்

கருத்துகள் இல்லை: