திங்கள், 17 ஆகஸ்ட், 2009

போராட்டக்குரல் ஓங்கட்டும்!


தேர்தல் வெற்றியைப் பயன்படுத்தி இந்திய பொதுத்துறையை சூறை யாட முயற்சிக்கும் மன் மோகன் சிங் அரசுக்கு எதி ராக அனைத்துத் தரப்பு ஊழியர்களின் போராட் டக்குரல் ஓங்கி ஒலிக்கட் டும் என்று சீத்தாராம் யெச் சூரி அழைப்பு விடுத்தார்.

நாடாளுமன்றத் தேர் தலில் பல்வேறு காரணங் களால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் அதிகா ரத்திற்கு வந்துள்ளது. நாங் கள் முன்வைத்த அணி குறிப்பிட்ட சில மாநிலங் களை மட்டுமே பிரதிநிதித் துவப்படுத்தியதால் அது ஒரு பொருத்தமான மாற் றாக மக்களால் பார்க்கப் படவில்லை. மத்தியில் ஒரு நிலையான மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்ற கருத்தோட்டத்திற்கு இந்திய மக்கள் வாக்களித் தனர்.

ஆனால் இந்த வெற் றியை பயன்படுத்திக் கொண்டு, இடதுசாரிக் கட் சிகளுக்கு எதிராக, குறிப் பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து வலதுசாரி பிற்போக்கு சக் திகளும், ஆர்எஸ்எஸ் உள் ளிட்ட மத அடிப்படை வாத சக்திகளும், திரிணா முல் காங்கிரஸ், நக்சலைட் டுகள் மற்றும் பல்வேறு வித மான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் கடும் தாக்கு தலைத் தொடுக்க துவங்கி யிருக்கின்றன. இந்த அரசி யல் சவாலை இடதுசாரிக் கட்சிகள் அரசியல் ரீதியா கவே உறுதிபட எதிர் கொண்டு முன்னேறுவோம்.

இன்றைக்கு இந்தியா வில் இடதுசாரிகளுக்கு எதி ராக, ஒட்டுமொத்த வலது சாரி பிற்போக்கு சக்திகளும் கைகோர்த்துக் கொண்டு தாக்குதல் நடத்துவது, இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தை நினைவுக் குக் கொண்டு வருகிறது. இரண்டாம் உலகப்போரில் உலகையே நசுக்கத் துடித்த பாசிச ஹிட்லரை வீழ்த்து வதற்கு, மேற்கத்திய நாடுகள் ஒன்றிணைந்து கூட்ட ணியை உருவாக்கின. ஆனால் ஹிட்லரை அமெ ரிக்க கொடி வீழ்த்த வில்லை; பிரிட்டிஷ் கொடி வீழ்த்தவில்லை; பிரெஞ்சு கொடியாலும் வீழ்த்த முடியவில்லை. ஹிட்லரின் முடிவுரையை சோவியத் ஒன்றியத்தின் அந்த மகத் தான செங்கொடிதான் எழு தியது. இத்தகைய வரலாற் றின் பாரம்பரியத்தில் நின்று, இன்றைக்கு இந்தி யாவில் இடதுசாரிகளுக்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள சவாலை அரசியல் ரீதியாக தீரத்துடன் எதிர்கொள் வோம்.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவா தத் திட்டம், பழங்குடி மக் களின் வன உரிமைச் சட் டம், விவசாயிகளின் கடன் கள் தள்ளுபடி, பாரத் நிர் மாண் திட்டம் போன்ற பெரும் திட்டங்களில் பொதுச் செலவினத்தை அதிகரிக்க வைத்தது என இடதுசாரிக் கட்சிகளின் தொடர்ச்சியான நிர்ப்பந் தத்தால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைச் சொல்லி மீண்டும் ஆட்சிக்கு வந் துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அதற்கு நேர் எதிராக தற்போது செயல்பட்டு வருகிறது. ஒரு பக்கம் ஏழை, எளிய மக்க ளுக்காக என்று பேசுகி றார்கள்; மறுபுறம் அந்த மக்களின் வாழ்வைப் பறிக் கிற புதிய தாராளமய கொள் கைகளை தீவிரமாக அமல் படுத்துகிறார்கள்.

இன்றைக்கு கூட இந்திய நிலக்கரிக்கழக பங்குகளில் 15 சதவீதத்தை தனியாருக்கு தாரை வார்க்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கொஞ் சம், கொஞ்சமாக ஆனால், உறுதியாக அனைத்து பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளையும் தாரை வார்ப்பது என்பதில் மன்மோகன் சிங் அரசு தீவிர மாக இருக்கிறது.

எதிர்வரும் நாடாளு மன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் இன்சூரன்சில் அந்நிய நேரடி முதலீடு உச்ச வரம்பை அதிகரிக்கும் மசோதா, வங்கித்துறையை சீர்குலைக்கும் மசோதா உள் ளிட்டவற்றை நிறைவேற்ற துடிக்கிறது மன்மோகன் சிங் அரசு. இத்தகைய நடவ டிக்கைகள் இந்திய மக்க ளின் மீதான, இந்திய தொழி லாளி வர்க்கத்தின் மீதான நேரடி தாக்குதலே ஆகும்.

புதிய தாராளமயக் கொள்கைகளை அமலாக் குவதை மிகவும் தீவிரப் படுத்தியுள்ள அரசு, மறு புறம் அதற்கு மேலும் உத வும் விதத்தில் அமெரிக்கா வுடனான கேந்திர கூட்டா ளியாக தன்னை மாற்றிக் கொள்வதில் தீவிரமாக முனைந்துள்ளது. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அமெ ரிக்காவுடனான இத்தகைய அடிமை உறவு தேவைப் படுகிறது.

இன்றைய அரசியல் சூழலைப் பயன்படுத்தி அரசு வங்கித் துறையை சீர்குலைக்க முயற்சிக்கிறது. அதை எதிர்த்து அனைத்து தரப்பு வங்கி ஊழியர்களும் உறுதி மிக்க போராட்டத்தை களத்தில் இருந்து ஆற் றுங்கள். இடதுசாரிக் கட்சி கள் நாடாளுமன்றத் திலும் மக்கள் மன்றத்திலும் உறுதி மிக்க போராட்டத்தை நடத்தும். இரண்டு போராட்டங்களும் மன் மோகன் சிங் அரசின் முடிவு களை கைவிடச் செய்யும் விதத்தில் ஒரு பெரும் குர லாக, ஒரு பெரும் சக்தியாக சங்கமிக்கட்டும்.

வங்கிகளை நாட்டுடைமையாக்கியது யார்?

உலகப் பொருளாதார நெருக்கடி இந்திய நிதித்துறையை, இந்திய வங்கிகளை தாக்கா மல் பாதுகாத்து விட்டோம் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கூறிக்கொள்கிறது. வங்கிகளை நாட்டுடைமையாக்கிய இந்திராகாந்தியின் நடவ டிக்கை தான் இதற்குக் காரணம் என்றும் கூறி, பெருமைப் பட்டுக் கொள்கிறது.

ஆனால், உண்மை என்ன? 1967-ல் இந்திரா காந்தி ஆட் சியின் போது, நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ் கட்சி சிண்டிகேட் என்றும், இண்டி கேட் என்றும் பிரிந்து நின்ற போது, இந்திரா காந்தி, ஜனாதிபதி பதவிக்கு வி.வி. கிரியை முன்னிறுத்தினார். இடதுசாரி கட்சிகளின் ஆதரவைக் கோரினார். அப்போது, மூன்று முக்கிய நிபந் தனைகளை இடதுசாரிக் கட்சிகள் முன்வைத்தன. அவை, வங்கிகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்க வேண்டும்; நிலக்கரி சுரங்கங்களையெல்லாம் நாட்டுடைமையாக்க வேண்டும்; மன்னர் மானியம் ஒழிக்கப் பட வேண்டும் என்பதே ஆகும். அன்றைக்கு இடதுசாரிக் கட்சிகள் அளித்த நிர்ப்பந்தத்தின் விளை வாகவே இந்திரா காந்தி வங்கிகளை நாட்டுடைமையாக்கினார். அதில் காங்கிரஸ் கட்சி பெருமைப்படுவ தற்கு ஒன்றுமில்லை.

அதே இடதுசாரிக் கட்சிகள்தான், கடந்த 5 ஆண்டு காலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்திய பொதுத்துறை வங்கிகளை, பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை சூறையாட மேற் கொண்ட அனைத்து முயற் சிகளையும் தடுத்து நிறுத் தின. அதன் விளைவாகவே உலக பொருளாதார நெருக் கடி எனும் சூறாவளியில் சிக்கி சிதறாமல் இந்திய நிதித்துறை தப்பித்தது. அன்றைக்கும் இன்றைக்கும் இந்திய பொதுத்துறையை பாதுகாத்து நிற்பது இடதுசாரிக் கட்சிகளே.

கருத்துகள் இல்லை: