திங்கள், 24 ஆகஸ்ட், 2009

‘அவர்கள்’ வருகிறார்கள்...

கி. வரதராசன்

இந்திய வர்த்தகர் கூட்டமைப்பில் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா உரை யாற்றுகையில், செப்டம்பர் 3 அன்று இந்தியாவில் உலக வர்த்தக அமைப்பின் சிறு அளவிலான கூட்டத்தை நடத்திட இருப்பதாகவும், அதில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனி யன் நாடுகளைச் சேர்ந்த வர்த்தக அமைச் சர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர்கள் உலக அளவிலான வர்த்தகப் பேச்சுக்கள் தொடர்பான விவரங்களை முன்வைப் பார்கள் என்றும் கூறியிருக்கிறார். லண்ட னில் சமீபத்தில் ஏப்ரலில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின்போது இக்கூட் டத்தை இந்தியாவில் நடத்திட இந்தியா ஒப்புக்கொண்டது என்றும் அவர் கூறி யிருக்கிறார்.

ஒரு பக்கம் நாடு கடும் வறட்சியாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு திணறிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், பதுக்கல் உள்ளிட்ட காரணங்களாலும் கடும் விலைவாசி ஏற்றத்தாலும் மக்க ளில் பெரும்பான்மையினர் சோற்றுக்கு இல்லாமல் தவித்துக் கொண்டிருக் கிறார்கள். உலகளாவிய பொருளாதார நெருக்கடியும் அதன் அத்தனை சுமையை யும் இந்தியா போன்ற பின்தங்கிய நாடு களின் தலையிலே ஏற்றுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் முயற்சிகள் எடுத்துவரும் சூழலில்தான், இப்படி ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு இந்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எதைப்பற்றியுமே கவலைப்படாத பொறுப் பற்ற மனிதர்கள் பொறுப்பில் அதிகாரம் இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

விவசாயிகளை அதிகமாகக் கொண் டுள்ள இந்தியா - சீனா போன்ற நாடுகளில், விவசாயிகளின் மீதான தாக்குதல்கள் கொடூரமாக இருக்கப்போகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார் கள். சீனா போன்ற நாடுகள் இதற்கு என்ன மாற்று என்று விவாதித்துக் கொண்டிருக் கின்றன. சில மாற்று நடவடிக்கைகளை யும் எடுத்து வருகின்றன.

ஆனால், இந்தியாவைப் பொறுத்த வரை, பெரும்பகுதி விவசாயிகளின் வாழ் வைப் பாதிக்கும் இந்தப் பிரச்சனையைப் பற்றி ஆளுகிறவர்கள் கவலைப்பட்ட தாகத் தெரியவில்லை. மாறாக, இங்கு எதுவும் நடக்காது, கவலைப்படாதீர்கள் என்று வெட்டிப்பேச்சுக்கள் பேசுவதில் கவனம் செலுத்துவதோடு, கடும் தாக்கு தலுக்கு உடந்தையாகச் செல்லவும் தயா ராகிவிட்டார்கள் என்பதையே நடைபெற்று வரும் நிகழ்ச்சிப் போக்குகள் உணர்த்து கின்றன.

உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட் டுள்ள இன்றைய சூழ்நிலையில் உலக அளவிலான வர்த்தகத்தைப் பாதுகாப் பதற்கும், மேற்கத்திய நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டிருப்பதில் ஆச்சரியம் எதுவு மில்லை. கடந்த எழுபதாண்டு கால வர லாற்றில் உலக அளவிலான வர்த்தகம் இந்த ஆண்டுதான் மிகவும் குறைந்த நிலைக்கு வந்துள்ளது. உண்மையில், ஜூலை 22 அன்று நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில், 2009 இல் உலக அளவிலான வர்த்தகம் 9 சத வீதத்லிருந்து 10 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சி அடைந்துவிட்டதாக மதிப்பிட் டிருக்கிறது.

வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள்,வளர்முக நாடுகளை, தங்களுடைய ‘‘பிரித்தாளும் சூழ்ச்சியால்’’ தொடர்ந்து தங் களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் முந்தைய அளவிற்கு வெற்றிபெற முடிய வில்லை. அதே சமயத்தில், கடந்த பத் தாண்டுகளில் வளர்முக நாடுகள், தங் கள் விவசாயிகளுக்கு அளித்து வந்த மானியங் களைக் குறைத்திடவேண்டும் என்று நிர்ப் பந்தித்து வளர்ச்சியடைந்த முதலாளித் துவ நாடுகள் கணிசமான அளவிற்கு வெற்றி பெற்றுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

2008 ஜூலையில் ஜெனீவாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பு, விவசாயத்தின் மீதான சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் தொடர் பாக மேற்கொண்ட பேச்சுவார்த்தை களும் முறிந்துவிட்டன.

மற்றொரு முக்கியமான பிரச்சனை, பருத்தி விவசாயிகளுக்கு அளித்துவந்த மானியம் தொடர்பானதாகும். மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நான்கு நாடுகள், மாலி, பெனின், புர்கினா ஃபாசோ மற்றும் சாட் என்னும் நாடுகளின் கூட்ட மைப்பு, அமெரிக்க அரசாங்கம் தன் நாட் டுப் பருத்தி விவசாயிகளுக்கு அளித்து வரும் மானியங்களை வெட்ட வேண்டும் என்று கோரியுள்ளன. 2007 அக்டோபரில் உலக வர்த்தக அமைப்பானது, அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பின் விதிமுறை களை ஒழுங்காகப் பின்பற்றவில்லை என்று கூறியிருக்கிறது. அமெரிக்கா தன் நாட்டின் பருத்தி விவசாயிகளுக்கு அளித்து வரும் மானியத்தால், உலகில் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள 2 கோடி பருத்தி விவசாயிகளின் வாழ்க்கை முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடும் என்று மேலே கூறிய வட ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

இந்தியா மற்றும் நூற்றுக்கணக்கான வளர்முக நாடுகளும் தங்கள் நாடுகளில் வாழும் ஏழை விவசாயிகளுக்கு, உரிய அளவில் மானியங்கள் அளித்து, அவர் களின் நலன்களைப் பாதுகாத்திட வேண் டியது அவசியம். ஆயினும் விவசாயி களின் நலன்களைக் காவுகொடுத்து, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளுக்கு வெண்சாமரம் வீச இந்திய அரசு முயலு மானால், அதனை இந்திய விவசாயி களும், விவசாயத் தொழிலாளர்களும் ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்கள்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இத்த கைய மக்கள் விரோதிகளின் நடவடிக்கை கள் வரும்போது, அதனைத் தடுத்து அவற் றிற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு இடதுசாரிக் கட்சிகளின் வலுவான தலை யீடு நாடாளுமன்றத்தில் இருந்தது. இன்று துரதிர்ஷ்டவசமாக அந்த நிலைமை இல் லை என்பதைப் பயன்படுத்திக் கொண்டு, இவர்கள் தாராளமயக் கொள்கைகளை வெகுவேகமாகக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள்.

செப்டம்பர் 3ஆம் தேதி அன்று உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டை கண் டித்து அகில இந்திய விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கமும் நாடு முழுவதும் கண் டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர் மானித்துள்ளன.

கருத்துகள் இல்லை: