இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இன்று துரதிர்ஷ்டவசமாகத் தமிழ்நாட்டில் இருந்து எழுப்பப்படும் கோரிக்கைகளிலும், கோஷங்களிலும் சுருதிபேதங்கள் எழுந்துள்ளன.
‘இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்ற பெயரில் பழ.நெடுமாறன், டாக்டர் ராமதாஸ், வைகோ, தா.பாண்டியன், தொல்.திருமாவளவன் போன்றோர் தனித்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இதில் பாஜக-வும் ஒட்டிக்கொண் டுள்ளது.
‘இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை’ என்ற பெயரில் திமுக தலைமையில் காங்கிரஸ், இ.யூ.முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் மற்றும் சில கட்சிகள் இணைந்து தனியே பிரச்சாரம் மேற் கொண்டுள்ளன.
விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும், இலங்கைத் தமிழர்களுக்குப் பொதுவாக ஆதரவை நீடித்தும், அதேநேரத்தில் மத்திய-மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சித்தும் அஇஅதிமுக அறிக்கைகளை விட்ட வண்ணம் உள்ளது. தேமுதிகவும் இந்த இரண்டு அமைப்புகளிலிருந்து விலகியே நின்று, தனது சுயேட்சையான நிலைபாட்டை முன்வைத்து வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1983 முதல் எடுத்து வந்துள்ள உறுதியான நிலைபாட்டை அடியொற்றி, இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை வலியுறுத்திக் குரல் கொடுக்கிறது: எதிர்வரும் 12ம் தேதி தொடர் முழக்கப் போராட்டத்தை மாவட்டத் தலை நகரங்களில் நடத்த உள்ளது.
இந்தப் பின்னணியில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய பேரணியில் 7.2.09 அன்று பேசிய தலைவர்கள் தா.பாண்டியனும், ராமதாசும் அவர்களோடு இணைய முன்வருமாறு மார்க்சிஸ்ட் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 5.2.09 அன்று ‘ஜனசக்தி’ நாளேட்டில் ‘இதயம் கதறுகிறது’ என்ற தலைப்பில் கட்டுரை தீட்டியுள்ள சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பா-வும் அவரது நிலைபாட்டைப் புரிந்து கொள்ள ‘தோழர் வரதராஜனும், முதல்வர் கலைஞரும், பத்திரிகை ஆசிரியர் ‘இந்து’ ராமும், துக்ளக் சோவும், சுப்பிரமணிய சாமியும் முயல வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தப் பெயர்ப்பட்டியலில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி மட்டும் இடம்பெறாமல் போனது புதிராக உள்ளது. அது ஒருபுறமிருக்க, இப்படி அடுக்கியுள்ள பெயர் வரிசையில் இடம் பெற்ற மற்ற சிலர் எடுத்துள்ள நிலைபாட்டையும், மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை பாட்டையும் தா.பா ஒரே தட்டில் வைத் துப்பார்ப்பது முறைதானா என்ற கேள் வியும் எழுகிறது!
சிபிஐ தமிழ்மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், 29.1.09 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது கீழ்வருமாறு தெளிவுபடக் கூறியுள்ளதை இங்கு நினைவு கூர வேண்டியுள்ளது.
“கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய மாநாட்டிலும், தமிழ் மாநிலக்குழுவின் மாநாட்டிலும் இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் இயற்றியுள்ளது. ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு-கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். இலங்கை போன்ற சிறிய நாடு துண்டா டப்பட்டால் ஏகாதிபத்தியத்தின் சூழ்ச் சிக்கு இரையாகும்” (ஜனசக்தி, 30.1.09)
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் சிபிஐ-யுடன் கை கோர்த்துள்ள அமைப்புகளில் மற்றவை இந்த நிலைபாட்டை ஏற்காதவையே என்பது தெளிவு. ஏற்காதது மட்டுமல்ல, விடுத லைப்புலிகளுக்கும், தனித் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் ஆதரவாக உரத்துக் குரல் கொடுப்பவை அவை. இப்படி அடிப்படையிலேயே முரண்பட்ட நிலைபாடுகளைக் கொண்டவர்களோ ஒரே மேடையில் கைகோர்ப்பது “அப்பா வித் தமிழர்களைப் பாதுகாக்க, உடனடிப் போர் நிறுத்தத்தை வலியுறுத்த” மட்டுமே என்று சொல்லலாம். ஆனால், போர் நிறுத்தம், அமைதி, பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு என்று பொத்தாம் பொது வாகச் சொல்லி நிறுத்திவிட்டு, அந்த மேடையிலேயே அவரவர் விருப்பம்போல் கருத்துக்களை விரிப்பதுதானே நடக்கிறது?
‘போர் நிறுத்தம், அப்பாவித் தமிழ் மக்கள் பாதுகாப்பு’ என்பதுதான் ஒரே அடிநாதமாக ஒலிக்கும் குரல் என்றால் அக்டோபர் 2, 2008இல் சிபிஐ நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திலும், அக்டோபர் 14, 2008 அன்று முதலமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்திலும் இதுதானே ஒருமித்தக் கோரிக்கையாக முன்னிறுத்தப்பட்டது. அந்தக் கருத் தொற்றுமை நீடித்துத் தொடர முடியாமல் போனது ஏன் என்று சிந்திக்க வேண்டாமா?
‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சில பேர், விடுதலைப் புலிகளுக்கு எதிராக சில பேர்’ என்ற நிலை இருப்பதாக சட்டமன்றத்தில் குறிப்பிட்ட நிதியமைச் சர் அன்பழகன், திமுக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இல்லை: எதிராகவும் இல்லை என்று (ஜன 29, 2009) விளக்கம் அளித்தார்.
ஆனால் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்தது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணத்தை. அது தள்ளிப்போகப்போக இங்கே ஒரு பதற்றமும், சூடும் எழுந்தது. இதனை எதிர்கொள்ளத் தமிழக முதலமைச்சரும், ‘இறுதி வேண்டுகோள்’ என்ற ஒரு தீர்மானத்தை சட்டமன் றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது கூடுதலான எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்தது. ஆனால், இதையடுத்து இலங்கை சென்று திரும்பிய பிரணாப் முகர்ஜியின் முயற்சிகள், முல்லைத் தீவிலிருந்து வெளியேறிக் காட்டுப்பகுதியில் சிக்குண்டு நிற்கும் சுமார் 2 லட்சம் அப்பாவித் தமிழர்கள் ‘பாதுகாப்பான பகுதிகளுக்கு’த் திரும்புவதற்கான 48 மணி நேரப் போர்நிறுத்தம் என்ற அள வோடு நின்றது, ஏமாற்றம் அளிப்பதாகவே கருதப்பட்டது.
ஆனால் மத்திய-மாநில அரசுகள், பிரணாப் முகர்ஜியின் பயணத்தை வெற்றிகரமான ஒன்றாகவே சித்தரித்தன. ஆனால், போர் நிறுத்தம் முடிந்து மீண்டும் ஆயுத மோதல்கள் தொடரும் நிலையில், பிரணாப் முகர்ஜிக்கே ‘அவரது பயணம் திருப்திகரமாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை’ என்று தமிழக முதல மைச்சர் சொல்ல நேரிட்டது. ஆனால் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் பிப்ரவரி-4 தமிழகத்தில் பந்த் என்று அறிவித்த போது, அதை நிராகரித்து தமிழக அரசு நிலையடுத்தது. திமுக, காங்கிரஸ், அஇஅதிமுக, சிபிஐ(எம்), தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்காத நிலையில் ‘பந்த்’ ஒருவாறாக நடந்து முடிந்தது.
இந்தப் பின்னணியில் திமுக செயற்குழு நிறைவேற்றிய தீர்மானமும், அதில் முதலமைச்சரின் பேச்சும், இலங்கைப் பிரச்சனை தொடர்பான திமுக-வின் நிலையில் ஒரு தெளிவான மாற்றத்தை உணர்த்துவதாக அமைந்தன.
‘இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முழுமையான அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் கிடைக்கின்ற அளவுக்கு, நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினை குறிப்பிட்ட காலவரையறைக்குள் உருவாக்கிச் செயல்படுத்திட இந்திய அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற தீர்மானம், ‘ஒன்றுபட்ட இலங் கைக்குள் அரசியல் தீர்வு’ என்ற நிலை பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
‘நாம் இலங்கையில் உள்ள தமிழர் களுக்காகத்தான் குரல் கொடுக்கிறோம். தனிப்பட்ட ஒரு பிரபாகரனுக்காகவோ அங்கே இருக்கிற தனிப்பட்ட சில நண்பர்களுக்காகவோ அல்ல’ என்று திமுக தலைவர் தெளிவுபடுத்தினார். கூடவே, விடுதலைப்புலிகள் இயக்கம், சகோதர யுத்தம் என்ற பெயரில் அமிர்தலிங்கம் போன்றோரைக் கொலை செய்ததையும், பிரபாகரன் ‘சர்வாதிகார ஆட்சி’ என்று பேட்டியளித்ததையும் சுட்டிக்காட்டி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு நிலை என்ற தோற்றத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இந்தப் பின்னணியில் இலங்கையில் அரசியல் தீர்வுக்கு வழி என்ன? இன் றைய ஆயுத மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? அல்லல்பட்டு நிற்கும் அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாப்பது எவ்வாறு? என்பவையே நம்முன் நிற்கும் அவசரக் கேள்விகள்.
இலங்கை அதிபர் ராஜபக்சே ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தத் தயாராக இல்லை; அவரது திட்டம் விடுதலைப் புலிகளைப் போரிட்டு முற்றாக ஒழிப்பது; அதற்குப் பிறகு வடக்கு மாகாணத்தில் தேர்தல்; அதையடுத்து அரசியல் சட்ட 13வது திருத்தம் அமல் போன்ற அரசியல் தீர்வை ஆறஅமர யோசிக்கலாம் என்ப தாகவே இருக்கிறது. இது இன்றைய கடு மையான சூழலுக்கு எவ்விதத்திலும் தீர்வு காண முடியாத ஒன்று. அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாக்க வழி வகுக்காது.
எனவே இந்திய அரசு, இலங்கையில் போர் நிறுத்தம், அமைதிப் பேச்சு, அரசியல் தீர்வு என்ற நிலையை எட்டு வதற்குத் தனது ராஜிய ரீதியிலான தலையீடுகளை வலுவாகத் தொடர வேண்டும். இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவியையும் பெற வேண்டும். அப்பாவித் தமிழ் மக்களின் பாதுகாப்பையும் அவர் களுக்கு நிவாரண உதவிகளையும் உத்தர வாதப்படுத்த வேண்டும்.
இதுவே பிப்.12 தொடர் முழக்கப் போராட்டத்தில் எழுப்ப வேண்டிய கோரிக்கை
-எழிலன்
திங்கள், 9 பிப்ரவரி, 2009
இலங்கை: அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாப்போம்! அரசியல் தீர்வை வலியுறுத்துவோம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
19 கருத்துகள்:
எனது பெயர் ராம்...
நீங்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகள்னு கேள்விப்பட்டிருக்கேன். ஊருல நடக்கிற அக்கிரமங்கள்ல நியாயத்துக்காக நிப்பீங்கன்னு நெனச்சேன். எப்படிங்க உண்மைய மறைச்சீங்க...இலங்கை தரப்பில போர் புரியும் பலரும் இந்திய ராணுவ வீரர்கள்னு நியூஸ் வருதே... மெய்யாலுமே அது கிசுகிசுதானா...அடுத்து நீங்ஙள்லாம் ஜனநாயகத்துக்காகப் போராடுவீங்கன்னும் கேள்விப் பட்டுருக்கேன்ங்க...மெய்யாலுமே அங்கே சுயாட்சி வேணுமுன்னு அங்க உள்ள தமிழ் மக்கள் சொன்னாங்களா என்ன ? அவிங்க தரப்பு நியாயத்த எல்லாரையும் கேக்க சொல்லிதான நீங்க போராடணும்... தப்பா எதுனாச்சும் சொல்லிருந்தா இனவாதி, ம.க.இ.க ன்னு திட்டிராம வெளக்குங்க
இலங்கை அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாப்போம் அரசியல் தீர்வை வலியுறுத்துவோம் என்பதே நியாயமான கோரிக்கையாகும். இலங்கைதமிழர்களின் தலையெழுத்து தமிழ்நாட்டில் புலிகளை பாது காப்போம் பிரபாகரனுக்கு முடிசூட்டுவோம் என்பதே கோரிக்கையாக உள்ளது. இலங்கை தமிழர் புலிகளால் அழிவது பற்றி சிறிதும் அக்கறை இல்லை.
ராம்...நீங்கள் நக்சல் மகஇகவில் இல்லை என்றே நினைத்துக்கொள்கிறேன்.
எந்த உண்மையை மறைச்சனு தெளிவா சொண்ணா நல்லாயிருக்கும்
// மெய்யாலுமே அங்கே சுயாட்சி வேணுமுன்னு அங்க உள்ள தமிழ் மக்கள் சொன்னாங்களா என்ன ?//
அவங்க என்ன சொன்னாங்கன்னு உங்களுக்கு தெரிந்தா சொல்லுங்க
புலிங்க சொல்லறத அங்க உள்ள எல்லா மக்களோடு தீர்வுன்னு எதையாவது உளபோறிங்க.
அனானி நீங்கள் சொல்வது சரிதான். அங்கு உள்ள மக்கள் சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்படுவதற்கு ஆதரவாக செயல்படுவது புலிகள்தான்.
//சுதந்திரமும் துணிச்சலும் கொண்டவர்கள் உமது முன்னோர்கள் என்பதில் பெருமை கொள்ள இயலுமா? பூமியின் மீதிலே அடிமையொருவன் இருக்கும் வரை நீங்கள் சுதந்திரமும் துணிச்சலும் கொண்டவர்கள் என்று கூற இயலுமா? சகோதரன் ஒருவனை விலங்கு பிணைத்திருப்பது உங்களை வருத்தாவிட்டால், நீங்கள் உண்மையிலேயே இழிந்த அடிமைகள் அல்லவா? விடுவிக்க தகுதியற்ற அடிமைகள் அல்லவா? நமக்கும் சொந்தபந்தங்களுக்குமான தளைகளை நொறுக்கித்தள்ளுவதுதான் உண்மை விடுதலையா? இறுகிய இதயங்களுடன் சமூகத்திற்கான கடமையை மறத்தல் தகுமோ? கூடாது, சகோதரர்களின் தளைகளையெல்லாம் அறுத்தெறிவதும் தோளோடு தோள் சேர்ந்து அவர்களையெல்லாம் விடுவிப்பதும்தான் உண்மையான விடுதலை! வல்லமையற்றவருக்காகவும் வாயில்லாதவருக்காகவும் பரிந்து பேச அஞ்சுவோர் அடிமைகளே! உண்மையைக் கண்டு உள்ளுக்குள் ஒடுங்கிப்போகாமல் சீறியெழாதவர்கள், சினந்து பேசாதவர்கள் அடிமைகளே! சரியான முடிவை எடுத்திடத் துணியாதவர்கள் அடிமைகளே!//
nanbaa....i dont expect you as a marx, engles, etc such leaders. But please follow your above words which had cut and paste from your home page. please apply the words to srilankan taml speaking peoples. Give the chance to them to express their wishes on eelam issues. please recognise their deciding rights on their countries which is based on your vies of freedom
அனானி நன்பருக்கு
சரியான முறையில் தெளிவானவழியில் எங்களுடைய போராட்டங்கள் எப்போதும் ஒடுக்கப்படுகிற, அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் மக்களை விடுப்பது அதை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக அறிவாயுத்தை ஏந்தி சமர் புரிவது எங்கள் கடமை
என். பெயர் ராம்
இரண்டு சந்தேகம் கேட்டேன். கேள்வியை சந்திக்க மறுப்பது போல படுகின்றது. சந்திப்பு ?! என்பது உண்மையோடு சம்பந்தப்பட்டது.
இரண்டு கேள்விக்கு ஒன்றுக்கு பதில் இல்லை. இன்னொன்றுக்கு கேள்விய திருப்பி போட்டு சமாளிக்குறீங்க. ஒரு தீர்வா நீங்கதான சொல்லிருக்கீங்க. அந்த நாட்டு அரசின் தன்மை பத்தியெல்லாம தெரிஞ்சுதான சொன்னீங்க... அதான் கேட்கிறேன். அந்த மக்களோட விருப்பத்த தெரிஞ்ச பிறகுதான முடிவு செஞ்சீங்க
my question is given below:
//சுதந்திரமும் துணிச்சலும் கொண்டவர்கள் உமது முன்னோர்கள் என்பதில் பெருமை கொள்ள இயலுமா? பூமியின் மீதிலே அடிமையொருவன் இருக்கும் வரை நீங்கள் சுதந்திரமும் துணிச்சலும் கொண்டவர்கள் என்று கூற இயலுமா? சகோதரன் ஒருவனை விலங்கு பிணைத்திருப்பது உங்களை வருத்தாவிட்டால், நீங்கள் உண்மையிலேயே இழிந்த அடிமைகள் அல்லவா? விடுவிக்க தகுதியற்ற அடிமைகள் அல்லவா? நமக்கும் சொந்தபந்தங்களுக்குமான தளைகளை நொறுக்கித்தள்ளுவதுதான் உண்மை விடுதலையா? இறுகிய இதயங்களுடன் சமூகத்திற்கான கடமையை மறத்தல் தகுமோ? கூடாது, சகோதரர்களின் தளைகளையெல்லாம் அறுத்தெறிவதும் தோளோடு தோள் சேர்ந்து அவர்களையெல்லாம் விடுவிப்பதும்தான் உண்மையான விடுதலை! வல்லமையற்றவருக்காகவும் வாயில்லாதவருக்காகவும் பரிந்து பேச அஞ்சுவோர் அடிமைகளே! உண்மையைக் கண்டு உள்ளுக்குள் ஒடுங்கிப்போகாமல் சீறியெழாதவர்கள், சினந்து பேசாதவர்கள் அடிமைகளே! சரியான முடிவை எடுத்திடத் துணியாதவர்கள் அடிமைகளே!//
nanbaa....i dont expect you as a marx, engles, etc such leaders. But please follow your above words which had cut and paste from your home page. please apply the words to srilankan taml speaking peoples. Give the chance to them to express their wishes on eelam issues. please recognise their deciding rights on their countries which is based on your vies of freedom
your answer is here
அனானி நன்பருக்கு
சரியான முறையில் தெளிவானவழியில் எங்களுடைய போராட்டங்கள் எப்போதும் ஒடுக்கப்படுகிற, அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் மக்களை விடுப்பது அதை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக அறிவாயுத்தை ஏந்தி சமர் புரிவது எங்கள் கடமை
question is asked directly. but answer is in abstract form.. why you cant meet the truth or ground
அனானி நன்பருக்கு
சரியான தீர்வு என்பது அந்த மக்கள்தான் முடிவு செய்யவவேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. யாரும் வெளியில் இருந்து எந்த தீர்வையும் திணிக்கமுடியாது. இதில் எந்த உண்மையும் மறைப்பதற்கு வழியில்லை நன்பா
ராம்...அந்த நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக நடைப்பெற்றுவரும் இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு கான்பதுதான் சரியாக இருக்கும். கடந்த 25வருடங்களாக புலிங்க வந்து அங்கு உள்ள மக்களின் ஒரே குரல் நாங்கள்தான் என்று சொன்னதோடு, மற்றகுரல்களை கொடுராமக கொன்றார்கள் என்பதையும் அது இப்போது கத்துவது தனிதமிழ்ஈழம் என்பதுதான். அந்த தீர்வைதான் தாங்கள் தாங்கி பிடிக்க முயலுவது போல் தெரிகிறது.
அங்கு உள்ள மக்கள் பல்வேறு தீர்வுகளை முன்வைக்கிறார்கள். அதில் ஒரு தீர்வுதான் ஒன்றுப்பட்ட இலங்கையில் அதிகார பகிர்வு என்று நாங்கள் கருதுகிறோம்.
நீங்க எப்படி அவங்களுக்காக முடிவு பண்ணுறீங்க
அங்குள்ள மக்கள் முன்வைக்கும் அனைத்து தீர்வுகளிலும் பெரும்பான்மை மக்கள் ஆதரிக்கும் தீர்வு நீங்கள் சொல்வதுதானா ? என். எபயர் ராம்
ஆம் அரசியல் ரீதியான சரியான தீர்வுதான் சொல்கிறோம்
ராஜிய ரீதியிலான தலையீடுகளை வலுவாகத் தொடர வேண்டும்.
oh ... u expect the katta panchayath
Dear Ram //மெய்யாலுமே அங்கே சுயாட்சி வேணுமுன்னு அங்க உள்ள தமிழ் மக்கள் சொன்னாங்களா என்ன ? அவிங்க தரப்பு நியாயத்த எல்லாரையும் கேக்க சொல்லிதான நீங்க போராடணும்... தப்பா எதுனாச்சும் சொல்லிருந்தா இனவாதி, ம.க.இ.க ன்னு திட்டிராம வெளக்குங்க//
விடுதலை புலிகளை தவிர மற்றவர்கள் சுயாட்சி வேண்டு மென்றுதான் கேட்டார்கள்.
அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பது நமது பணியல்ல.
நமது அண்டை நாட்டில் ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சனை. அதுவும் இந்தியாவின் ஒரு மாநிலத்தோடு பாரம்பரிய உறவுள்ள மக்கள் இனம் விடுதலைக்காக போராடுகிறார்கள்.
அந்த போராட்டத்தை அவர்கள் நடத்துவார்கள், நிச்சயமாக வெற்றியும் பெறுவார்கள். அப்போராட்டத்திற்கு யாருடைய தயவையும் அவர்கள் எதிர்பார்கவுமில்லை.
ஆனால் இன்று அங்கு ஃபாசிச வழியை பின்பற்றும் விடுதலை போராளிகளுக்கும் இனவெறி ராணுவத்திற்க்கும் இடையில் பெரும் மக்கள் திரள் சிக்குண்டு குண்டுவீச்சுகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை உயிருடன் காப்பாற்றியாக வேண்டும்.
அதற்கு இந்தியாவிலிருக்கும் நாம் என்ன செய்யவேண்டும் என்பதே நம்முன் உள்ள கேள்வி. அதற்கான கோரிக்கை போராட்டமே இது. நமது சூழலுக்கும் அரசியல் பார்வைக்கும் உட்பட்டு ஒரு தீர்வை முன் வைக்கிறோம் அதைதான் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நாம் அடம்பிடிக்க முடியாது.
ஆனால் போர்நடத்துவதற்கென்று ஒரு சர்வதேச மரியாதை உண்டு (யாரும் அதை மதிப்பதில்லை என்பது வேறு விஷயம்) அதை கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டும் அப்பாவிமக்களை விடுவித்தே ஆக வேண்டும் என்பதை உரத்து சொல்வோம்.
அதல்லாமல் "இன்ஸ்டன்ட் ரெடி மிக்ஸ் புரட்சி தீர்வுகள்" இல்லை.
***வல்லமையற்றவருக்காகவும் வாயில்லாதவருக்காகவும் பரிந்து பேச அஞ்சுவோர் அடிமைகளே! உண்மையைக் கண்டு உள்ளுக்குள் ஒடுங்கிப்போகாமல் சீறியெழாதவர்கள், சினந்து பேசாதவர்கள் அடிமைகளே! சரியான முடிவை எடுத்திடத் துணியாதவர்கள் அடிமைகளே!***
இப்படி ஒரு பதிலிருந்தும்
question is asked directly. but answer is in abstract form.. why you cant meet the truth or ground
ஆங்கிலத்தில் இப்படி ஒன்று
ஆகாய கோட்டை கட்டி புரட்சிவிதை தூவுவதால் ஏர்படும் பிரச்சனை இது.
முத்டுகுமாரை அம்போ என்று விட்டுவிடாதீர்கள் நண்பரே
/விடுதலை புலிகளை தவிர மற்றவர்கள் சுயாட்சி வேண்டு மென்றுதான் கேட்டார்கள்./
சந்திப்பு என்பவர் கிளிநொச்சியிலே தமிழர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள் என்ற் எழுதுகிறார். இங்கே இந்த வரிகள். என்ன உளறல் இது! உங்க காமெடிக்கு அளவே இல்லையா? இந்து ராம், சந்திப்பு, விடுதலை போல ஆளுங்க ஒழிஞ்சாத்தான் இந்தியாவே விடுதலையை சந்திக்கமுடியும்.
கம்யூனிசம் பேச முன்னாடி கொஞ்சம் வரலாறு படிங்க அய்யா
புலிகளிடம் 2 இலட்சம் தமிழர்கள் சிக்கி சின்னாபின்னாமாகி கொண்டுயிருக்கும் போது. இப்போதைக்கு எங்கு இருந்தால்
உயிரோடாவது இருப்பார்கள் என்பது அங்கு கடத்த சில வாரங்களில் 30 ஆயிரம்பேர் புலிகளிடமிருந்து தப்பித்து வந்து யிருப்பதை கண்டு உங்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியில்லாமல் இருக்கலாம்.
அதே சமயத்தில் சிங்கள இனவெறி அரசு ரொம்ப யோக்கியம் என்று கூறுவதாக கருதக்கூடாது அனானி.
/கம்யூனிசம் பேச முன்னாடி கொஞ்சம் வரலாறு படிங்க அய்யா/
எந்த வரலாறு படிக்கவேண்டும் அனானி. புலிபாச வரலாறா அல்லது நக்சல் பாச வரலாறா என்பதை விளக்குங்க
//இந்து ராம், சந்திப்பு, விடுதலை போல ஆளுங்க ஒழிஞ்சாத்தான் இந்தியாவே விடுதலையை சந்திக்கமுடியும்.
கம்யூனிசம் பேச முன்னாடி கொஞ்சம் வரலாறு படிங்க அய்யா//
அனைவரையும் ஒழித்துக்கட்டுவது தான் புரட்சிக்கும், சுய நிற்ணைய உரிமைக்கும், தனி ஈழம் பெறுவதர்க்கும் வழியாக அமையும்.
பழைய புலி ரயாகரன் முத்துக்குமாரை மன நல சிகிச்சைக்கு உட்படுத்தியிருந்தால் தர்கொலைக்கு முதிர்ந்திருக்க மாட்டார் என கட்டுரை வெளியிட்டது தான் நினைவில் வந்து ஆட்டம் போடுகிறது.
வரலாற்று புத்தகத்திலுள்ளவற்றை மட்டும் படித்து வாந்தியெடுத்தால் இப்படித்தான் இருக்கும்.
நடைமுறை சாத்தியமான போராட்டங்களை முன்னெடுக்காதவரை யாருக்கும் விடுதலை சாத்தியப்படாது.
கருத்துரையிடுக