வியாழன், 5 பிப்ரவரி, 2009

இலங்கை- தமிழ் மக்களை காக்க

இலங்கையில் பாசிசவெறியோடு அப்பாவி தமிழ்மக்களை இலங்கை ரானுவமும் விடுதலைப்புலிகளும் சேர்ந்து கொன்று கொண்டு இருப்பதும் . புலிகளின் இருப்பு குறைவதைப்பார்த்து தமிழகத்தில் ஓலம் ஈடும் கால்நக்கிகள்.

தவறான அரசியல் வழிமுறைகளை தமிழகத்தில் முன்வைப்பதோடு, தமிழகத்தில் ஒரு சிறுகுழுவாக செயல்படும் மகஇக மடையர்கள் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்துவிட்டால் தமிழகத்தில் உடனே புரட்சியை கொணடு வந்துவிடலாம் என்று பிரிவினைவாத கருத்துகளை அள்ளிவிடுவதோடு.

ஏதோ இலங்கை இனப்பிரச்சனைக்கு தடையாக இருப்பது சிபிஎம்தான் என்று நகைச்சுவை தளும்ப கதை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த முட்டாள்களின் அறிவு கொழுந்து சந்தி சிரிப்பதை கூட அறியாமல் ஓயாமல் ஊலை இடுகிறார்கள் .

ஐ.நா. உதவியை கோருக! மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

இலங்கையில் தமிழ் மக்களை காத்திட ஐ.நா. சபையின் உதவியை உடனடியாக இந்தியா நாட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் முல்லைத் தீவு மாவட்டத்தில் போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த தகவல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. ஐ.நா.சபையின் பிரதிநிதியிடமிருந்து கடைசியாக வந்துள்ள தகவல்கள், இந்தப்போரில் ஒரே நாளில் 52 பேர் கொல் லப்பட்டுள்ளனர். 80 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கிறது. 2 மருத்துவ மனைகள் குண்டுவீசி தாக் கப்பட்டுள்ள சம்பவங்கள் நடந்துள்ளன.

மோதல் நடந்துகொண்டிருக்கும் பகுதிகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் சிக்கியுள்ளனர். இந்த மக்களை மோதல் நடை பெறாத இடங்களுக்கோ அல்லது பாதுகாப்பான இடங்களுக்கோ செல்வதற்கான ஏற்பாட்டை இலங்கை அரசும், எல்டிடிஇ-யும் உறுதிசெய்ய வேண்டும்.

பல்வேறு உறுதிமொழிகள் அளித்திருந்த போதிலும் கூட, தமிழ் இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை உருவாக்குவதில் இலங்கை அரசு எந்தவிதமான முன்னேற்றமும் அடையவில்லை என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏமாற்றத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இந்நிலையில், இலங்கையில் வடக்கு மாகாணத்தில் அப்பாவி தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை இந்தியா உடனடியாக நாட வேண்டும். மேலும் அயல்துறை அமைச்சர்(பிரணாப் முகர்ஜி) கொழும்பு சென்றபோது அளிக்கப்பட்ட உறுதிமொழியின்படி ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு முறையான சுயாட்சி வழங்கும் அரசியல் அமைப்புச் சட்ட பிரிவை உடனடியாக இலங்கை அரசு அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தும் விதத்தில் இந்திய அரசு தனது ராஜீயரீதியான மற்றும் அரசியல் ரீதியான முயற்சிகளை அவசியம் தீவிரப்படுத்த வேண்டும். (ஐஎன்என்)

1 கருத்து:

baappu சொன்னது…

வாழ்த்துக்கள் தோழர் விடுதலை நல்ல பதிவு!

ம.க.இ.க ஆள்கூட்டத்தில் ஊளையிடும் பிணவாத அரசியல் கோமாளிகளாக மாறி இருக்கிறார்கள்.

அவர்களுக்கு கொள்கை கோட்பாடு லட்சியம் என்று அர‌சியல் இயக்கத்துக்கு வேண்டிய எந்த அடிப்படையும் இல்லை என்பதை முத்துக்குமாரின் தற்கொலை நிகழ்வுக்கு பின் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் மக்களுக்கு உணர்த்துகிறது.

அவர்களின் அரசியல் கருத்துருவை கட்டுரைகள் மூலம் அறிக்கை செய்யும் பழைய புலி திரு.ரயாகரன் "முத்துக்குமாரை மனநோய்" சிகிச்சைக்கு உள்ளாக்கி இருந்தால் இந்த தற்கொலை நிகழ்ந்திருக்காது என்று குறிப்பிட்டு ஏளனம் செய்த போது, இவர்களின் அணியினர் அந்த மரணம் மூலம் மக்கள் மத்தியில் எழுந்த கவலையும் ஆற்றாமையையும் கண்டு ஆள்கூட்ட அரசியல் கோமாளிகளாகி போனார்கள்.

முத்துக்குமார் சொன்ன கருத்துக்கள்:

(1) நம்பிக்கைக்குரிய ஒபாமாவே

(2) தேசியத்தின் ஒரே தலைவர் விடுதலை புலி பிரபாகரன்

(3) தமிழகத்துக்கும் அவரை போன்ற தலைவர் தேவை

(4) இளைஞர்களே அரசியல் ஏமாற்று காரர்களுக்கானது, அரசியல் இல்லாமல் போராடுங்கள்

(5) நான் செத்து போகிறேன் எனது பிணத்தை கைப்பற்றி ஒரு கருவியாக வைத்து போராட்டத்தை தொடருங்கள்

என்பனவற்றில் எதனுடன் தாங்கள் உடன் படுகிறார்கள் என்பதை சொல்வதற்கு வழியின்றி புத்தகத்தில் படித்த புரட்சி கதைகளை அப்படியே வாந்தி எடுப்ப‌து தொடர்கிறது.

கூடவே சரியான மாற்றுக்காக போராடும் சி.பி.எம்மை அவதூறுகள் மூலம் முடக்கிவிடலாமென கனவும் காண்கிறார்கள்.

இவர்கள் ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகள் என்பதை மக்கள் அடையாளம் கண்டு விட்டார்கள். இவர்களின் ஆட்டம் அதிக நாட்களுக்கு விலை போகாது.

ம.க.இ.க வின் தமிழரங்கம் தளத்தில் ரயாகரன் பின்குறிப்பு எழுதி பின்னூட்டங்களை வெளியிட மாட்டோமென்கிறார்.

சி.பி.எம் மை ஜனநாயக மறுப்பாளர்கள் என குற்றம் சாட்டும் ம.க.இ.க மடையர்கள் எப்படிப்பட்ட ஜனநாயக வாதிகள் என்பதை இது உணர்த்துகிறது.

அவர் சொல்கிறார் நீங்கள் எச்சில் துப்புவதும் அதை துடைப்பதுமா எங்கள் வேலை என்று!!

வேண்டாம் மல்லாக்க படுத்து நீங்களே அதை செய்யும் போது அடுத்தவர்கள் அதை செய்ய வேண்டியதில்லை.