திங்கள், 11 மே, 2009

காங்கிரசை ஒழித்துக்கட்டியே தீருவேன் -காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தமிழர் களை பாதுகாக்க முடியும் .திருமா

கே.வரதராசன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற காங்கிரஸ்-திமுக கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் கேலிக்கூத்தாகவே முடிந் தது. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கள் கூட்டணி மட்டுமல்ல காங்கிரஸ் கோஷ் டிகளும் தீவுகளாக சிதறிக்கிடப்பதை அந் தக்கூட்டம் உறுதி செய்தது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பேச்சை முதலில்வாசன் கோஷ்டியைச் சேர்ந்த ஞானதேசிகன் மொழிபெயர்த்தார். பேச்சு குறிப்பு பக்கங்களை மாற்றி மாற்றி வைத்ததால் சோனியா காந்தி ஒன்று சொல்ல இவரோ வேறு ஒன்றை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். நிலையான ஆட்சி தரு வோம் என்று சோனியா காந்தி கூற இவரோ, மூன்றாவது அணியை விமர்சித்துக் கொண் டிருந்தார்.

இந்நிலையில் இவரை யார் மொழி பெயர்க்கச் சொன்னது என்று மேடையி லிருந்த காங்கிரஸ் தலைவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மத்திய சென்னை தொகுதி திமுக வேட் பாளர் தயாநிதி மாறன் நான் மொழிபெயர்க் கிறேன் என்று தயாரானார். தேர்தல் பிரச் சாரத்தின்போது இவர் பேசும் தமிழே யாருக் கும் புரிவதில்லை. தமிழும் இல்லாமல் ஆங் கிலமும் இல்லாமல் இவர் ஏதோ ஒரு புது பாஷையை கண்டுபிடித்து பேசிக் கொண் டிருக்கிறார்.

இந்நிலையில் தங்கபாலு களத்தில் குதித்து மொழிபெயர்க்கத் துவங்கினார். இவர் ஆவேசமாக தமிழில் பேசியது தனி உரையாக அமைந்தது.

சோனியா காந்தியின் பேச்சில் சத்தும் இல்லை சாரமும் இல்லை. கடந்த ஐந் தாண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுது நாட்டிற்கு செய்த நன்மை என்ன வென்று இவரால் உருப்படியாக எதுவும் கூறமுடியவில்லை.

காங்கிரசை ஒழித்துக்கட்டியே தீருவேன் என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் தேசிய காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தமிழர் களை பாதுகாக்க முடியும் என்று பலமுறை சத்தியம் செய்தார். இலங்கை தமிழர்களை மட்டுமல்ல உலகத்தில் எங்கெல்லாம் தமிழர் கள் இருக்கிறார்களோ அவர்களையெல் லாம் காங்கிரஸ்தான் பாதுகாக்க முடியும் என்று கூறிய திருமா, இலங்கை பிரச்ச னைக்கு சோனியா காந்தி முடிவு கட்ட வேண்டும் என கெஞ்சி கேட்டுக்கொள் கிறேன் என்றார். போதி மரத்தடியில் புத்த ருக்கு ஞானம் தோன்றியது போல இவருக்கு தீவுத்திடலில் புதிய ஞானம் தோன்றியுள் ளது போலும் அல்லது காங்கிரசோடு சேர்ந்து அதை ஒழித்துக்கட்டப்போகிறார் போலிருக் கிறது.

முதல்வர் கருணாநிதி தனது உரையில், சோனியா காந்திக்கு 31.3.2009லேயே இலங் கைத் தமிழர்களை பாதுகாப்பது குறித்து கடிதம் எழுதியதாக கூறி அந்த கடிதத்தை வாசித்தார். இதைக்கேட்ட நமக்கு தோன்றிய சந்தேகம் இதுதான். மார்ச் 31 லேயே இலங்கைத் தமிழர்களை பாதுகாப்ப தாக சோனியா கடிதம் எழுதிய நிலையில், இவர் எதற்கு தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் அறிவித்தார்? எதற்காக காலை முதல் மதியம் வரை காலவரையற்ற உண் ணாவிரதம் இருந்தார்? என்று புரியவில்லை.

தீவுத்திடலில் சோனியா, கருணாநிதி பங்கேற்கும் கூட்டம் நான்கைந்து நாட் களுக்கு முன்பே நடைபெறுவதாக இருந்தது. கலைஞருக்கு உடல்நிலை சரியில்லாததால் இந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அத் தனை நாளும் தீவுத்திடலில் போடப்பட் டிருந்த நாற்காலிகளுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. நாற்காலிகள் எழுந்து எங்கேயும் ஓடிவிடக்கூடாது என்று பயந்தார் கள் போலிருக்கிறது.

ஆனால் கூட்டத்தை எதிர்பார்த்து வெயிலில் காய்ந்த நாற்காலிகள் பாவம். பேருந்துகளுக்கு பின்னால் 10 மீட்டர் இடை வெளிவிடவும் என்று எழுதியிருப்பது போல முடிந்தவரை இடைவெளிவிட்டுதான் நாற் காலிகளை போட்டிருந்தார்கள். காங்கிரஸ் கூட்டம் என்பதால் நாற்காலிகள் ஒன்றை யொன்று தாக்கிவிடக்கூடாதுஎன்று நினைத் திருப்பார்கள். அப்படியிருந்தும் பாதி நாற் காலிகள்தான் நிரம்பின. மீதி நாற்காலிகள் அசைவின்றி அப்படியே இருந்தன.

முதல் கோணல் முற்றும் கோணல் என் பது போல கருணாநிதி பங்கேற்ற முதல் பிரச் சார கூட்டத்திலேயே மேடையில் கை சின் னத்தை வைக்க, திமுகவினர் மறக்க அல் லது மறுக்க கோபித்துக் கொண்டுதான் கலைஞர் மேடைக்கு வந்தார். தீவுத்திடல் கூட்டத்திற்கு மக்கள் கோபித்துக் கொண்டு வரவில்லை.

அதிமுக அணி சார்பில் இதே தீவுத் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் லட்சக் கணக்கான மக்கள் திரண்டிருந்ததோடு இடமின்றி திடலுக்கு வெளியிலும் வெள்ளம் போல் மக்கள் கூட்டம்.

அதிமுக பொதுச் செயலாளர் 40 தொகுதிகளிலும் 41 கூட்டங்களில் பங்கேற் றுள்ளார். அனைத்து இடங்களிலும் திடலுக்குள் கடல் புகுந்ததுபோல பல்லாயிரக்கணக் கானமக்கள் அணிதிரண்டனர். அதே போன்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், பாமக, மதிமுக தலைவர்கள் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம் ஜன சமுத்திரம் பொங்கியது. இந்த காட்சிகளே போதுமானது. மக்களவைத் தேர்தலில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதற்கு.

2 கருத்துகள்:

ttpian சொன்னது…

ஒவ்வொரு தமிழனின் கடமை-
கான்கிரசை அழிப்பது!
எனது கடமயை நான் நிறைவேற்றுவேன்!

விடுதலை சொன்னது…

தீபன் அவர்களுக்கு நன்றி நிச்சயம் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை படுதோல்வியை சந்திக்கும்