புதன், 27 மே, 2009

நாட்டு நலனை விஞ்சும் அமெரிக்கா நலன்!

இந்தியாவின் இயற்கை எரிவாயுத் தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா பைப்லைன் திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான அரசு கிடப்பில் போட்டுள்ளது.

ஈரானுடன் வர்த்தகம் செய்து கொள்ளக்கூடாது என்ற அமெரிக்க உத்தரவின்படியே இந்த ஒப்பந்தம் குறித்து தற்போது மத்திய அரசு வாய் திறப்பதில்லை. அமெரிக்காவுக்கு நெருங்கிய கூட்டாளியான பாகிஸ்தான் ஈரானோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தன்னைக் கூடுதல் விசுவாசியாகக் காட்டிக் கொள்ளவே இந்தத்திட்டத்தில் இணைய காங்கிரஸ் அரசு மறுத்து வருகிறது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பெட்ரோலியத்துறை அதிகாரி, நாங்கள் இந்தத்திட்டத்திலிருந்து வெளியேறவில்லை. எங்களுக்கு சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன. சேர்வதற்கு முன்பு அவற்றை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம் என்று கூறியுள்ளார். ஆனால் மாறுபட்ட கருத்துகளை அவர் விளக்கவில்லை. கடந்த இரு ஆண்டுகளாகவே இந்தியா இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை.

இந்தத்திட்டத்தில் இணைவதற்கான இரு தரப்பு ஒப்பந்தத்தில் ஈரானும், பாகிஸ்தானும் ஞாயிறன்று கையெழுத்திட்டுவிட்டன.

கருத்துகள் இல்லை: