சனி, 6 ஜூன், 2009

ராகுல் காந்திக்கு ஓர் கடிதம்

-வி.ஆர்.கிருஷ்ணய்யர்

அன்புள்ள ராகுல் காந்தி,

நான் தங்களைச் சந்தித்ததில்லை, என்றாலும்கூட தாங்கள் ஏழை எளிய மக் களின் பால் இரக்க சிந்தனை படைத்த வர் என்றும், சோஷலிஸக் கோட்பாட்டில் ஈடுபாடுள்ளவர் என்றும் நிறையக் கேள் விப்பட்டிருக்கிறேன். நாட்டின் பிரதமரா கப்பட்டவர் ஒரு மக்களவை உறுப்பின ராக இருக்க வேண்டும் என்பது என் னுடைய கொள்கையாகும். தாங்கள் இந் திய நாட்டு இளைஞர்களின் பிரதிநிதி யாகத் திகழ்கிறீர்கள். மேலும் தாங்கள் நம்முடைய மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் சமதர்ம இந்தியக் குடியரசின் லட்சிய வேட்கைகளையெல்லாம் உள்ளடக் கியவராக விளங்குகிறீர்கள். இந்திய நாட்டின் பாரம்பரியமானது புஷ்ஷிடமிருந்தோ (அமெரிக்க) வெள்ளை மாளிகையிலிருந்தோ கடன் வாங்கப்பட்ட ஒன்றல்ல. அவ்வா றெல்லாம் கருதுவது ஆபத்தானதோர் சங் கதியாகும். ஆனால் இன்றைய அமெரிக்க அதிபரான ஒபாமா, உலகெங்கிலுமுள்ள பாமர மக்களின்பால் கருணையுள்ளம் கொண்டவராகத் தெரிகிறார்.

உண்மையிலேயே ஒரு பொருளாதார ஜனநாயகமானது சோஷலிஸக் கோட் பாட்டை உள்ளடக்கியதாகவே விளங்கிட முடியும்.

பிரதமர் மன்மோகன் சிங் நேர்மை யான மனிதர்தான். ஆனால் என்னால் அவருடைய பொருளாதாரக் கோட்பாடு களை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரு டைய பொருளாதாரக் கொள்கைகள் யாவும் சுதேசித் தன்மையுள்ளவை அல்ல. மன்மோகன் ஒரு சிறந்த ராஜதந்திரி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றைய இந்திய நாட்டுக்கு மூன்றாவது உலகைச் சார்ந்த பொருளாதாரமே அவ சியத் தேவையாக உள்ளது. இந்திய நாட் டின் விவசாயத் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். இந்திய கிரா மங்களில் புத்தொளி பரவிட வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நாம் தோல்வியடைந்துவிட்டோம். மேலும் நம்முடைய தார்மீக மற்றும் ஒழுக்க நெறி கள் யாவும் சீரழிந்துபோயுள்ளன. நம்மு டைய அரசியல் சட்டத்தில் கூறப்பட் டுள்ள சமுதாய சிந்தனைகளைப் பற்றிய அம்சங்களிலும் நாம் தோல்வியடைந்து நிற்கிறோம். மேலும் நாம் மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி, விவேகானந்தர், மாமன்னர் அசோகர் போன்ற மனிதநேய சிந்தனையாளர்களையெல்லாம் மறந்தேபோனோம்.

நான், விவேகானந்தர் முன்னர் புத்த ரைப் பற்றிக் கூறிய ஒரு சில கருத்துக் களை உங்களுக்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

“புத்தர் கர்ம யோகத்தைச் செயல் படுத்தியதோர் மாமனிதர். மற்ற ஞானிகள் யாவரும் தங்களைக் கடவுளின் அவதார மாக முன்னிலைப்படுத்திக் கொண்ட னர்; தாங்கள்தான் கடவுளின் உண்மை யான தூதர்கள் என்றும் அவர்கள் சொல் லிக்கொண்டனர். ஆனால், புத்தர் அப்படி யெல்லாம் சொல்லவில்லை. ஆத்மா வைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் ஏன் வீணான சர்ச்சைகளில் ஈடுபடுகிறீர்கள் என்று புத்தர் கேட்டார். “நல்லதை நினை யுங்கள்; நல்லதைச் செய்யுங்கள்” என்று அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டார். அதுவே உங்களை விடுதலைப்பாதைக்கு அழைத்தேகும்” என்றும் அவர் மக்களி டம் வற்புறுத்திக் கூறினார். புத்தர் எந்த வித சுயநலமுமில்லாத அப்பழுக்கற்ற தோர் ஞானியாவார். அவர், உலக மக்கள் யாவரையும் நேசித்த மகாஞானி. அவர் தான் உலகம் கண்டெடுத்த மாமனிதர். புத்தர் சொல்கிறார் “வேதங்கள் சொல் கின்றன என்பதற்காக எதையும் நம்பாதீர் கள். எந்த ஒரு பிரச்சனையையும் பகுத் தறிவுடன் சீர்தூக்கிப்பார்த்து முடிவெடுங் கள். எல்லோருக்கும் நல்லதையே செய் யுங்கள். அது ஒன்று போதும்”

மேலும் நான், உலகப்புகழ்வாய்ந்த வர லாற்றாசிரியரான எச்.ஜி.வெல்ஸ், மாமன் னர் அசோகரைப் பற்றிக் குறிப்பிட்ட ஒரு சில கருத்துக்களை உங்களுக்கு நினை வூட்டிட விரும்புகிறேன்.

“மனித குலத்தின் அமைதியான நல் வாழ்வுக்காகப் பாடுபட்ட மாமன்னர் அசோகர். உலக வரலாற்றில் மண்டிக் கிடக்கும் மாமன்னர்கள் மத்தியிலே மாமன்னர் அசோகரின் திருப்பெயர் மட் டும் தனியொரு தாரகையாக என்றென் றும் மின்னி மிளிரும் என்பது உறுதி. வால்கா நதி தீரத்திலிருந்து ஜப்பான் நாடு வரைக்கும் உள்ள மக்கள் இன்றளவும் அசோகரைப் போற்றுகிறார்கள்.

(ஆதாரம் “உலக வரலாறு” எச்.ஜி.வெல்ஸ்)

அன்புள்ள ராகுல்! ஒரு தேசியத்தலைவர் என்ற முறையில் தாங்கள் தங்களு டைய பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கக் கூடாது. நீங்கள் இந்திய நாட்டிலுள்ள கோடானுகோடி ஏழை, எளிய மக்களு டைய ஊழியனாகச் செயலாற்றிட முன் வரவேண்டும். மீண்டும் உங்களுக்கு விவேகானந்தரின் பொன்மொழிகளிலி ருந்து மேற்கோள் காட்டிட விரும்புகிறேன்.

“ஏழை, எளிய மக்களுக்காக உணவு பூர்வமாகச் சிந்தியுங்கள். உங்கள் இதயத் துடிப்பு அடங்கிடும்வரை அந்தப் பாமர மக் களுக்காகவே பணியாற்றிடுங்கள்”.

நான் உங்கள் தாத்தா பண்டித நேரு விடமிருந்து தேசிய சிந்தனைகளை ஸ்வீ கரித்துக் கொண்டவன். 1947ம் வருடம் ஆகஸ்ட் 15ம் நாளன்று பண்டிதநேரு பின்வருமாறு முழங்கினார்.

“ஒவ்வொரு இந்தியனுடைய கண்ணீ ரையும் துடைத்திட வாருங்கள்”.

நாம் மேற்கண்ட நன்னெறிகளையல் லாம் இன்று மறந்துபோனோம். நாட்டில் கோடீஸ்வரர்களும், தாதாக்களும், வகுப்பு வெறியர்களும் கொடிகட்டிப் பறக்கிறார் கள். எங்கும் ஊழல். பல்வேறு கிறுக்குத் தனமான அரசியல்வாதிகள் மக்களு டைய உரிமைகளையெல்லாம் தங்கள் கால்களில் போட்டு மிதித்து துவைத்து வருகிறார்கள்.

கோடானுகோடி இந்திய மக்கள் பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் வாடி வதங்கு கிறார்கள். இப்படிப்பட்டதோர் சூழ்நிலை யில் தாங்கள் தங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கவே கூடாது.

‘இந்து’ஏட்டில் வெளியான கட்டுரையின் பகுதிகள்.

தமிழில் : கே.அறம், திண்டுக்கல்.

கருத்துகள் இல்லை: