அபிஜித் மகதோ என்ற அந்த மாணவ னின் உடலிலிருந்து கொட்டிய ரத்தமும், அவனை சரமாரியாக சுட்டபோது விழுந்து தெறித்த கண்ணாடியின் துகள்களும் மண் ணோடு மண்ணாக கலந்து காய்ந்துக் கிடக் கின்றன.
ஜூன் 17.
காலைப் பொழுதில், இந்த மாணவனை தங்களது எதிரி என்று தீர்மானித்த அவர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டுக் கொன் றனர்.
கல்லூரிக்கு போய்விட்டு திரும்பி வரு வதற்குள் தங்களது குடும்பத்தினரும், கிரா மத்தைச் சேர்ந்த மக்களும் ஆயுத முனையில் ஊரை விட்டு விரட்டப்பட்டதால், அங்கிருந்து டிராக்டர்களில் ஏறி காரக்பூர்- ராஞ்சி நெடுஞ்சாலையில் அச்சத்துடனேயே வந்துக் கொண்டிருந்ததை பார்த்து, அவர்களோடு சேர்ந்து கொண்டார் அபிஜித் மகதோ. அன்று இரவு முழுவதும் சக தோழர்களோடு கண்விழித்து தனது கிராமத்து மக்களுக்காக கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட மகதோ, தனது சக நண்பர்கள் அனில் மகதோ, நீலா தர் மகதோ ஆகியோருடன் அருகில் இருந்த கடையில் தேநீர் குடித்துக் கொண் டிருந்தார்.
இவர்களை தேடி ஆறு மோட்டார் சைக் கிள்களில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுடன் வந்த அவர்கள், வாகனங்களிலிருந்த மக்களை பயங்கரமாக அச்சுறுத்தினர். அதன்பின்னர், தேநீர் கடையை நோக்கி வந்த அவர்கள், மூன்று பேரையும் குருவிகளை சுடுவது போல சுட்டுத் தள்ளினர்.
இந்த மூன்று பேரும், குற்றவாளிகள் என்று அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டே சுட்டனர். அவர்கள் செய்த குற்றம் என்னவென்பதை யும் சுட்டவர்களே தங்களது கூச்சலின்போது தெரிவித்தனர். குற்றம் என்ன?
மூன்று பேரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் என்பதுதான் குற்றம்.
மேற்குவங்கத்திலும் சரி, நாட்டின் பிற பகுதிகளிலும் சரி, மனித உரிமைகளை பற்றி தொண்டை கிழிய பேசுபவர்களின் கவனத்தை இந்த படுகொலை ஈர்க்கவில்லை போலும். லால்கார் பகுதியில் மாவோ யிஸ்ட்டுகள் மீது அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையை ஒரு மனித உரிமை மீறலாக குற்றம் சாட்டும் சில “அறிவு ஜீவிகளுக்கு”, அபிஜித் மகதோ என்ற அப்பாவி மாண வனும், சக தோழர்களும் சுட்டுக் கொல்லப் பட்ட கொடூரம், மனித உரிமைப் பிரச்சனை யாக தெரியவில்லை.
அபிஜித் மகதோவை போல, என்ன காரணம் என்றே தெரியாமல் ஏராளமான அப்பாவிகள் மிகக் கொடூரமாக ஆயுதமேந்திய மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் செய்த ஒரே குற்றம், அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் என்பது மட்டுமே.
கடந்த 2002ம்ஆண்டு முதல் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் மட்டும் 111 பேர், மாவோயிஸ்ட் கொலையாளிகளால் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில், பெரும்பாலான கொலைகள் சல்போனி, பின்போர் ஆகிய ஒன்றியங்களில் நடந்துள் ளன. லால்கார் பகுதியில் உள்ள இந்த ஒன் றியங்களில்தான் தற்போது பெரும் வன் முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் 74 பேர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆவர். 23 பேர் காவல்துறையைச் சேர்ந்த வர்கள். 5 பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதியவர்கள். ஒருவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மற்றொருவர் மாவோயிஸ்ட் இயக்கத்திலிருந்து வெளியேறியவர்.
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து மட்டும் 17 சிபிஎம் ஊழியர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.
இந்தியாவின் மிகக் கடுமையான பயங் கரவாதம் நிலவும் மாநிலம் என்று ஜம்மு - காஷ்மீரை சொல்கிறார்கள். ஆனால், மேற்கு மிட்னாப்பூரில் நடந்துள்ள படுகொலைகள் அதை மறுக்கின்றன. 2003ம் ஆண்டிலிருந்து தற்போது வரை ஜம்மு - காஷ்மீர் மாநிலத் தில் 71 அரசியல் ஊழியர்கள் கொல்லப்பட் டிருப்பதாக காவல்துறை பதிவேடுகள் கூறு கின்றன. ஜிகாதி பயங்கரவாதிகளால் கொல் லப்பட்ட இவர்களில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் அடங்குவர்.
ஆனால், மேற்குவங்கத்தில் ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் ஒரே ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஜம்மு - காஷ்மீரை விட அதிகமான எண்ணிக்கையில் மாவோ யிஸ்ட் மரணத்தூதுவர்களால் கொல்லப்பட் டுள்ளனர்.
இதில், நாம் இன்னும் குறிப்பாக கவனிக்க வேண்டிய அம்சம், லால்கார் பகுதியில் இவர் களின் கொட்டத்தை ஒடுக்க கடந்த வாரம் மாநில காவல்துறையினரும், மத்திய படை யினரும் நுழையும் வரை மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை.
மாவோயிஸ்ட் கொலைக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டவர்களில் பலரும் கிராமப்புற ஏழைகள்; அவர்களில் பலர் தற்போது போராட்டத்தில் மனித கேடயங் களாக முன்னிறுத்தப்பட்டுள்ள அதே பழங் குடியின இனத்தைச் சேர்ந்த மக்கள்.
அபிஜித் மகதோ தனது விதவைத் தாயின் 5 குழந்தைகளில் ஒரே மகன். எஞ்சிய நான்கு பேரும் தங்கைகள். அந்த குடும்பத் திலிருந்து முதல் முறையாக கல்லூரிக்கு சென்று படிக்கும் வாய்ப்பை பெற்றவர். அவ ரது தாய் சவிதா மகதோ, ஏன் இந்த கொடு மைகள் நடக்கின்றன என்று தெரியவில்லை என கதறுகிறார். ஒரு சிறுவனை கொல்கி றோமே என்ற உணர்வு கூட அவர்களுக்கு இல்லையா என்று கேட்கிறார்.
இப்படித்தான் ஈவிரக்கமின்றி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பலரை யும் மாவோயிஸ்ட்டுகள் சுட்டுத்தள்ளியுள் ளனர்.
கரம்சந்த் சிங் என்ற ஆசிரியர். அந்தப் பகுதியில் பாரம்பரிய நடனமான சாகு எனும் நடனத்தில் வல்லுனர். கடந்த ஆண்டு பின் பூரில் தான் பணியாற்றும் ஆரம்பப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது குழந் தைகளின் கண் முன்னாலே சுட்டுக் கொல் லப்பட்டார். மாவோயிஸ்ட்டுகளின் மிரட்ட லுக்கு பணியாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக பேசினார் என்பதே அவர் செய்த குற்றம்.
பெலாரம் டுட்டு... இவர் அப்பகுதியில் பிரபல கால்பந்து வீரர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர். மைதா னத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இதே போலத்தான் கார்த்திக் ஹன்ஸ்தா என்ற நாட்டுப்புற கலைஞரும் கொல்லப் பட்டார்.
லபோனி என்ற பகுதியில் பணியாற்றும் டாக்டர் ஹோனிரன் முர்மு. இவரும், அவரது மருத்துவமனையில் பணியாற்றும் செவிலிப் பெண் பாரதி மஜ்ஹி, டிரைவர் பாப்ஷி ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் காரில் குண்டு வைத்து கொல்லப்பட்டனர்.
மாவோயிஸ்ட் இயக்கத்தின் விவசாயப் பிரிவில் பணியாற்றியவர் ஹரிபாத மகதோ. இவர் பத்தாண்டுகளுக்கு முன்பு அவ்வியக்கத்தைவிட்டு வெளியேறி மிட்னாப்பூர் மருத்துவக் கல்லூரியில் இரவு காவலராக வேலை செய்து வந்தார். கடந்த மே மாதம், இவரது கிராமமான பூமிதன்சோலாவில் வீட்டுக்கு அருகேயுள்ள குளத்தில் குளித்துவிட்டு வெளியே வரும்போது சுட்டுக் கொல்லப் பட்டார்.
ஹரிபாத மகதோவின் மனைவி பத்மா வதி சொல்கிறார்: “எனது கணவர் காவல் துறையின் உளவாளியாக செயல்பட்டார் என்று மாவோயிஸ்ட்டுகள் கூறுகிறார்கள்; ஆனால், அவர் அப்படியில்லை. எனினும், துப்பாக்கி குண்டுகளுக்கு முன்னால் யாருடைய வாதம் செல்லும்?”
(ஜூன் 25ம்தேதி இந்து நாளேட்டின் செய்தியாளர் பிரவீன் ஸ்வாமி எழுதியது...)
மூன்றே மாதங்களில் 60 தோழர்களை கொன்று குவித்த மம்தா - மாவோயிஸ்ட் கூட்டம்
மக்களவைத் தேர்த லுக்கு முன்பும், பின்பும் மேற்குவங்கத்தில் திரிணா முல் - காங்கிரஸ் கூட்டணி குண்டர்களாலும், மாவோ யிஸ்ட் பயங்கரவாதிகளா லும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 53 தோழர் கள் உள்பட 60 பேர் கொடூ ரமாக படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.
2009 மார்ச் முதல் ஜூன் 18 வரை இந்த படுகொலைகள் நடந்துள்ளன.
அவர்களின் விபரம் வருமாறு:
வடக்கு 24 பர்கானா மாவட்டம் நைகாத்தியைச் சேர்ந்த தபஸ் மோந்தல், பன்ஸ்குரா மாவட்டம் ஜோய்ப்பூரைச் சேர்ந்த சையது அலி புனியா, கிழக்கு மிட்னாப்பூர் மாவட் டம் கெஜூரியில் சுபல் கஜ்லி, தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூரில் அன்சர் அலி, கிழக்கு மிட் னாப்பூர் போஹாவில் ஹிமாத்ரி பத்ரா, முர்சிதா பாத் மாவட்டம் பகராம் பூரில் கோபால் மோந்தல், பர்துவான் மாவட்டம் ரய் னாவில் சொகரப் தேவன், மேற்கு மிட்னாப்பூர் மாவட் டம் புலாவேதாவில் துர்க்கா தேசோவலி, சந்தோஷ் மகதோ, வடக்கு 24 பர் கானா தீத்தாக்கரைச் சேர்ந்த பிஜோய் ஷா, புரூலியா மாவட்டம் அர்சாவில் கனய்குமார், கிழக்கு மிட் னாப்பூர் பாகபன்பூரில் கணேஷ்தாஸ், மேற்கு மிட் னாப்பூர் புலாவேதாவில் அசிம்மோந்தல், சல்போனி யில் ஹம்பீர் மாண்டி, சக்தி சென், லால்காரில் கோபி நாத் முர்மு, புரூலியா மாவட் டம் சுபுர்தி கிராம பஞ்சாயத் தில் வைகுண்டமகதோ, விபூதி சிங் சர்தார், ஹூக்ளி மாவட்டம் ஹரிபாலில் பாபேன்திக், ஹவுரா மாவட் டம் அம்தாவில் மனோவர் உசேன் ஜமாதர், முர்சிதா பாத் ஜங்கிபூரில் காசிநாத் மோந்தல், ஹவுரா மாவட் டம் பக்னானில் சந்துதல்வி, ஷேக் சைதுல், ஷேக் பாபுவா, கிழக்கு மிட்னாப் பூர் நந்தி கிராமத்தில் அப் துல்லா கான், ஷேக் அக்சர், தம்லுக்கில் சாகுதீன் கான், தெற்கு 24 பர்க்கானா மாவட் டம் கேனிங்கில் ஜாய்னல் முல்லா, புரூலியா மாவட் டம் பந்தோனில் மானு சிங், முர்சிதாபாத் ராணிநகரில் மம்தாஜ் ஷேக், மால்டா மாவட்டம் அனந்தப்பூரில் பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த அரவிந்த மோந்தல், கூக்பிகார் மாவட்டம் கோக்சாதங்காவில் விவேக் பர்மன், மால்டா மாவட் டம் ரத்துவாவில் கார்திக் மகளாதர், புரூலியா பலராம் பூரில் தினேஷ் மகதோ, தெற்கு 24 பர்க்கானா விஷ் ணுபூரில் மனோரஞ்சன் நாசர், கிழக்கு மிட்னாப்பூர் நந்திகிராமத்தில் சந்தோஷ் பர்மன், புரூலியா ஜால் டாவைச் சேர்ந்த பார்வர்டு பிளாக் கட்சியின் போந்து லால் முர்ரா, நாடியா மாவட் டம் கிருஷ்ணநகரை சேர்ந்த அபூர்வா கோஷ், பிர்பூம் மாவட்டம் ராம்பூர்கட் டைச் சேர்ந்த நூருதீன் ஷேக், கிழக்கு மிட்னாப்பூர் பூபதி நகரில் சயந்திகா ரக்ஷித், தெற்கு தினாஜ்பூர் கங்காராம் பூரில் தினேஷ் தேவ் சிங்கா, கிழக்கு மிட் னாப்பூர் பன்ஸ்குராவில் கோவிந்த சமந்தா, மேற்கு மிட்னாப்பூர் பின்பூரில் மாமோனி கிஸ்கு, ஹவுரா மாவட்டம் பஞ்ச்லாவில் கிங்கர் தல்வி, லால்காரில் சால்குசோரன், முர்சிராபாத் மாவட்டம் லால்கோலா வில் ஸ்வேதாபர் ஷேக், பஹராம்பூரில் ஏக்ராம்முல் ஹேக், மேற்கு மிட்னாப்பூர் பேல்பஹாரில் சங்கர் டுட்டு, லால்காரில் அசித் சமந்தா, நாருல் சமந்தா, பிரபீர் மகதோ, நந்தி கிராமத்தில் பவித்ரா தாஸ், பர்துவான் மாவட்டம் மங்கள் கோட் டில் பல்குனி முகர்ஜி, மேற்கு மிட்னாப்பூர் லோதாசுளி யில் நீலாதர் மகதோ, அனில் மகதோ, அபிஜித் மகதோ, கோல்டோரில் பாதல் அஹிர், துப்ராஜ் சரண், தசரத் சரண், சைதன்யா சரண் ஆகியோர் அடுத்த டுத்து வரிசையாக படு கொலை செய்யப்பட்டுள் ளனர். (ஐ.என்.என்)
1 கருத்து:
மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் என்று சொன்ன பிறகு, என்ன அப்பாவி அது இது சீனை போடறீங்க!
தரகு முதலாளிகளுக்கு விசுவாசமான சேவை தொடங்கிய பிறகு தானே, பழங்குடிகள் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தரத் தொடங்கினார்கள்.
நீங்கள் பயங்கரவாதிகள் என குறிப்பிடுகிறீர்கள். அப்படியென்றால், மேற்கு வங்கத்தில் அந்த இயக்கத்தை தடை செய்திருக்கலாமே! மாவோயிஸ்ட் பயங்கரவாதம் (!)ஒன்றுமில்லாத சில மாநிலங்களில் கூட தடை இருக்கிறதே! ஆனால், உங்கள் தலைவர்கள் இதை அரசியல் ரீதீயாக தான் எதிர்கொள்ள வேண்டும் என்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் எத்தனை இளைஞர்களை நக்சல்பாரி என வேட்டையாடியிருப்பீர்கள்? அதை மகாசுவேதா தேவியிடம் கேட்டாலே சொல்வார்களே! அவர் ஒன்றும் மாவோயிஸ்ட் இல்லையே!
கருத்துரையிடுக