செவ்வாய், 30 ஜூன், 2009

லால்காரில் நடப்பது பழங்குடி மக்களின் எழுச்சியா?

லால்காரிலிருந்து நேரடி ரிப்போர்ட் -பிரவீண் சுவாமி

லால்கார்: இம்மாத துவக்கத்தில் லால்கார் பகுதியைச் சுற்றியுள்ள காடுக ளில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள துவங்கியபோது, சல்போனி யில் இருக்கும் பழங்குடி மக்களிடம் சென்ற மாவோயிஸ்ட்டுகள், தடுப்பு அரண்களை கட்டுமாறு நிர்ப்பந்தித்தனர்.

துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களோடு கூடிய அந்த பயங்கரவாதிகளின் உத்தரவுக்கு கீழ் படிந்து கிராம மக்கள் மரங்களை வெட்டி வீழ்த்தினர்; சாலைகளில் பெரும் பள்ளங் களை வெட்டி துண்டித்தனர். எவரும், அவர்களது உத்தரவுகளை எதிர்த்துக் கேட்கவில்லை என்பது ஆச்சரியமானது அல்ல.

ஆனாலும், கடந்த திங்களன்று, இப்படி கடும் நிர்ப்பந்தத்தின் பேரில் தடுப்பு அரண்களை அமைக்க கட்டாயப்படு த்தப்பட்ட ஏராளமான உள்ளூர் மக்களின் சார்பாக துணிச்சலுடன் போங்காராம் லோகர் என்ற கிராமவாசி பேசினார். இந்த “ஒழுங்கீனத்திற்காக” போங்காராம் லோகர் மிகக் கடுமையாக தாக்கப்பட்டார்; அந்த கிராமத்தை விட்டே வெளியேற் றப்பட்டார்.

லால்கார் பகுதியில் ஏற்பட்டிருக்கும் வன்முறை, பழங்குடி மக்களின் கோப உணர்வின் வெளிப்பாடு என்று பெரும் பாலான மீடியாக்கள் எழுதுகின்றன. தங் கள் பகுதிக்கு வளர்ச்சியும், நீதியும் மறுக் கப்பட்டதை எதிர்த்தே அவர்கள் இவ் வளவு கோபத்துடன் திருப்பி அடிக்கி றார்கள் என்று எழுதுகிறார்கள். இன்னும் ஒருவர் ஒருபடி மேலேயே சென்று, கடந்த 30 ஆண்டுகளாகவே லால்கார் பகுதியில் எந்த வளர்ச்சியும் எட்டிப்பார்க்கவில்லை என்று எழுதியிருக்கிறார்.

ஆனால், போங்காராம் லோகரின் கதை - இந்தப் பகுதியில் இருக்கும் வெகு மக்களின் வாழ்க்கை - மேற்கண்ட கருத் துக்கள் வெறும் கதைகளே என்பதை உணர்த்துகின்றன.

வளர்ச்சி இல்லையா?

1977-ம் ஆண்டுக்கு செல்வோம்.

மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசு முதன்முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர், மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத் தின் லால்கார் பகுதியில் நிலப்பிரபுக் களின் பிடியில் சிக்கியிருந்த ஒட்டு மொத்த கிராமங்களையும் அவர்களிட மிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் விடுவித்தனர்.

இன்றைக்கு மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைக்கு இலக்காகியுள்ள ஜார்க்ரம், பின்பூர் மற்றும் சல்போனி ஆகிய ஒன்றி யங்களில் உள்ள விவசாயிகளுக்கு 2002-03-ம் ஆண்டு வரை 16 ஆயிரத்து 280 ஹெக்டேர் நிலம் விநியோகம் செய்யப்பட் டுள்ளது. இதை மேற்கு வங்க அரசின் நிலம் மற்றும் நிலச்சீர்திருத்தத்துறையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் நிலச்சீர்திருத்தம் தொடர்பாக கொல்கத்தாவில் இருக்கும் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன் றான இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத் தின் மூத்த ஆராய்ச்சியாளர் அபராஜிதா பக்ஷி, ஆய்வு செய்துள்ளார். ஜார்க்ரம் ஒன்றியப் பகுதியில் நடத்திய ஆய்வில், “மொத்தமுள்ள குடும்பங்களில் 75 சதவீத குடும்பங்கள் நிலச்சீர்திருத்தத்தால் பயன டைந்தவர்கள். குறிப்பாக, பழங்குடி மக்க ளின் குடும்பங்களில், சுமார் 70 சதவீதம் குடும்பங்கள் விவசாய நிலத்தை பெற்றி ருக்கிறார்கள்; 90 சதவீதத்திற்கும் அதிக மானோர் வீட்டுமனை நிலங்களை பெற் றுள்ளனர். இது முற்றிலும் நிலச்சீர் திருத்தத்தின் விளைவாக கிடைத்த பலனே” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ள நிலச்சீர்திருத்தம், நாட்டின் இதர பகு திகளில் வாழும் பழங்குடி மக்களை விட இப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் சுதந்திரத்தையும், வாழ்வுரிமையையும், சுய பாதுகாப்பையும் அதிகரித்துள்ளது என் பதே உண்மை.

லால்கார் பகுதி, மாவோ யிஸ்ட்டுக ளால் “விடுதலை” செய்யப்பட் டிருப்ப தாக, நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் எழுதி வியாபாரம் செய்து கொண்டிருக் கின்றன. ஆனால் அங்கு, பழங்குடி மக்க ளின் வாழ்நிலை தற்போது கடும் சிக்க லுக்கு உள்ளாகியுள்ளது. அன்றாடம் வனப் பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மூலம் இப்பகுதி முழுவதும் இருக்கும் பழங்குடி மக்களுக்கு வருமா னம் கிடைத்து வந்தது. அந்த வருமானம் தற்போது முற்றிலும் நின்று போயுள்ளது. இந்த மக்களின் வாழ்க்கையை சீராக வைத்திருந்த அரசின் திட்டங்கள், தற் போது செயல்படுத்த முடியாததால், அவர் களின் வாழ்நிலை மோசமான முறையில் சீர்குலைந்துள்ளது.

பூமிதன்சோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த மானேக் சிங், “கடந்த நவம்பர் மாதத்திலிருந்து, காட்டுப் பகுதிக்குள் நுழைந்து நாங்கள் வழக்கமாக செய்யும் வேலைகளை செய்யவிடாமல், மாவோ யிஸ்ட்டுகள் தடுத்து விட்டார்கள். தினந்தோறும் காடுகளில் இலைகளை சேகரித்து சிறிய சிறிய இலை தட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நாங் கள் உற்பத்தி செய்வது வழக்கம். ஒவ் வொரு நாளும் இதற்காக வனத்துறை ஒரு தொழிலாளிக்கு ரூ.70 கூலியாக கொடுத்து வந்தது. தற்போது இது அனைத்தும் கெட் டுப் போய்விட்டது” என்று வேதனை யுடன் தெரிவிக்கிறார்.

கொள்ளையும் தாக்குதலும்

மாவோயிஸ்ட்டுகள் வழிப்பறியிலும், கொள்ளையிலும் ஈடுபட்டதால் அதை தாங்க முடியாமல் லால்கார் பகுதியிலி ருந்து அரசு ஊழியர்களும் வெளியேறியுள் ளனர். இப்பகுதியில் உள்ள கிராமப்புற சத்துணவு மையங்களில் வேலை செய்யும் அப்பாவி அங்கன்வாடி ஊழியர்களிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி ஒவ்வொரு மாதமும் ரூ.1000 கொடுக்க வேண்டு மென்று மாவோயிஸ்ட்டுகள் மிரட்டியுள் ளனர்; பள்ளி ஆசிரியர்களும், ஊழியர்க ளும் இதே போல இரண்டு மடங்கு பணம் கொடுக்க வேண்டுமென்று உள்ளூர் மாவோயிஸ்ட்டுகள் மிரட்டியுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் அரசு மருத் துவர் ஹோனிரன் முர்மு மற்றும் அவரது மருத்துவமனையில் பணியாற்றும் செவி லிப் பெண் பாரதி மஜ்கி ஆகியோர் மிகக் கொடூரமான முறையில் காரில் குண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டதற்கு பின்னர், இப்பகுதியில் சுகாதாரப் பணி களும் முற்றிலும் சீர்குலைந்துள்ளன.

மக்கள் ஆதரவு யாருக்கு?

இது மட்டுமின்றி, லால்கார் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதி ராக மக்கள் பெருமளவில் திரண்டு மாபெ ரும் கிளர்ச்சியில் ஈடுபடுவதாக ஊதப் படும் செய்திகளை, அப்பகுதியின் தேர்தல் புள்ளி விபரங்கள் முற்றிலும் நிராகரிக் கின்றன.

கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், லால்கார் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய ஜார்க்ரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளில் 6 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்ரம் மக்கள வைத் தொகுதியில் கிழக்கு கார்பேடா, மேற்கு கார்பேடா (எஸ்.சி.), சல்போனி, நயாக்ரம் (எஸ்.டி.), கோபிபல்லவபூர் மற்றும் ஜார்க்ரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது மட்டுமின்றி ஜார்க்ரம் மக்களவைத் தொகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே வெற்றி பெற்றுள் ளது. இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் 1977-ம் ஆண்டு முதல் ஜார்க்ரம் மக்களவைத் தொகுதி இன்றைக்கு வரைக் கும் 32 ஆண்டுகளாக தொடர்ந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசமே உள்ளது.

காவல்துறை சோதனைகள்

கடந்த ஆண்டு நவம்பர் 2-ம்தேதி சல்போனியில் நடைபெற்ற இரும்பு எஃகு தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார் யாவை படுகொலை செய்ய குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்து, லால்கார் பகுதி முழுவதும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனைகளின் போது, காவல்துறையினருக்கும் மாவோ யிஸ்ட் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது; இதில் பலர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, நவம்பர் 2-ம்தேதி நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் முதன்மை குற்றவாளி என்று அடையாளம் காணப்பட்டவரின் உடன் பிறந்த சகோதரரும், மாவோயிஸ்ட்டுகளின் தீவிர ஆதரவாளருமான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாத்ரதார் மகதோ, “காவல்துறை அராஜகங்களுக்கு எதிரான மக்கள் குழு” என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அப்பகுதி முழுவதும் சாலைகளை மறித்தனர். காவல்துறையினரை தாக்கினர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை குறிவைத்து தாக்குதலை கட்டவிழ்த்து விட்டனர்.

கடந்த மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு சற்று முன்பு, தேர்தல் பணிகளுக்கு கூட காவல்துறையை நுழையவிடக்கூடாது என்று போரோ பெலியா, சோட்டோபெலியா, தலீல்பூர் சவுக் மற்றும் காஸ் ஜங்கிள் ஆகிய கிரா மங்களில் மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கி முனையில் “போராட்டம்” நடத்தினர்.

மாவோயிஸ்ட்டுகள் மற்றும் அவர்களது ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்ட “காவல்துறை அராஜகங்களுக்கு எதிரான மக்கள் குழு” ஆகியவற்றுக்கு ஆதரவாக அப்பகுதி பழங்குடி மக்கள் அனைவரும் அணி திரண்டு விட்டார்கள் என்று கூறப்படுவது உண்மையானால், அதற்கு அடுத்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த மாநிலத் திலேயே பெரும் வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெற்றிருக்க முடியாது.

(பழங்குடி மக்கள் தொகுதியான) ஜார்க்ரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு எதிரான அலை ஏதும் இல்லை. தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட புலின் பிகாரி பாஸ்கி, 5 லட்சத்து 45 ஆயிரத்து 231 வாக்குகள் பெற்றார். இது, அவரை எதிர்த்து போட்டியிட்ட அம்ரித் ஹன்ஸ்தா பெற்ற 2 லட்சத்து 52 ஆயிரத்து 886 வாக்குகளை விட மிகப்பெரும் வித்தியாசம் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த வெற்றியின் போது, சிபிஎம் வேட்பாளர் பாஸ்கி, லால்கார் கிராமம் உள்ளடங்கிய பின்பூர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

அச்சத்தின் பிடியில்...

அப்படியானால், மாவோயிஸ்ட்டுகள் எப்படி இவ்வளவு “செல்வாக்கை” பெற் றார்கள்?

இந்த கேள்விக்கு மக்களவைத் தேர்த லின் போதே இத்தொகுதியில் போட்டி யிட்ட ஜார்க்கண்ட் கட்சி வேட்பாளர் சுனிபால ஹன்ஸ்தா ஒரு பேட்டியில் எளிமையான பதில் ஒன்றை அளித்தார். அது: “மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள்.”

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இது.

கடந்த ஆண்டு மேற்கு வங்க அரசுக்கு எதிராக மேற்படி “காவல்துறை அராஜகங் களுக்கு எதிரான மக்கள் குழு” மக்களை திரட்ட முயன்றபோது, மாவோயிஸ்ட்டு களின் ஆதரவோடு இவ்வமைப்பினர் மேற்கொண்டு வரும் வன்முறையை எதிர்த்து பாரத் ஜகத் மஜ்ஹி மார்வா என்ற பாரம்பரிய பழங்குடி அமைப்பு கடந்த டிசம்பர் 9-ம்தேதி பேல்பகாரியில் ஒரு பேரணி நடத்தியது. இந்தப் பேரணியை நடத்திய அமைப்பின் தலைவர்கள் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான வர்கள்தான்.

எனினும், தங்களை எதிர்த்து பேரணி நடத்தினார்கள் என்ற ஒரே காரணத் திற்காக, அதற்கு தலைமை தாங்கிய பழங் குடி தலைவர் சுதிர் மந்தல், அடுத்த 48 மணி நேரத்தில் மாவோயிஸ்ட்டுகளின் மிகக் கொடூரமாக துப்பாக்கிக் குண்டுக ளுக்கு இரையானார்.

(ஜூன் 26, இந்து நாளேட்டிலிருந்து)

தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை: