சனி, 4 ஜூலை, 2009

வயிறை எரிய வைக்கும் பெட்ரோலிய விலை உயர்வு

நாட்டு மக்கள், அவர்களது பிரதிநிதித்துவ சபையாகிய நாடாளுமன்றம் இரண்டையும் ஒரே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அவமதித்துள்ளது. இரவோடு இரவாக பெட்ரோல் - டீசல் விலையை ஏற்றியிருக்கிற நடவடிக்கையை இப்படித்தான் வர்ணிக்க முடியும்.

பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா மூன்று நடவடிக்கைகளை மேற் கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். ஒன்று - பெட்ரோலிய பொருள்களின் விலைகள் உயர்த்தப் படும்; இரண்டு - பெட்ரோலிய எண்ணெய் நிறு வனங்களின் இழப்பை ஈடு கட்டும் வகையில் அரசு கடன் பத்திரங்கள் மூலமாக நிதி வழங்கப் படும்; மூன்று - கச்சா எண்ணெய் இறக்குமதி வரி குறைக்கப்படும். ஆனால் மற்ற இரண்டு அறிவிப்புகளை, திறந்துவைத்த பெட்ரோல் போல் ஆவியா கும்படி விட்டுவிட்டு, விலை உயர்வு நடவடிக்கையை மட்டும் அவசர அவசர மாக எடுத்திருக்கிறார். வழக்கமான அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 2) நடைபெற விருந்த நிலையில், ஒரே ஒருநாள் கூட காத்தி ருக்கத் தயாராக இல்லாமல் புதன்கிழமை மாலையே இந்த முடிவை எடுக்கச் செய்திருக் கிறார் பிரதமர்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமலே, அதுவும் நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில் இந்த முடிவை எடுத்ததன் மூலம், இந்த நாடாளு மன்றத்தைத் தேர்ந்தெடுத்த மக்களை எள்ளி நகையாடியிருக்கிறது அமைச்சரவை. இந்த லட்சணத்தில், மண்ணெண்ணெய், சமையல் எரி வாயு ஆகியவற்றின் விலையையும் உயர்த்தலாம் என்று சில அமைச்சர்கள் ஆலோசனை கூறி னார்களாம். கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கி ரஸ் தலைவர் சோனியாகாந்தி அதை ஏற்க மறுத்துவிட்டாராம். இதன் அர்த்தம், பெட்ரோல் - டீசல் விலை உயர்வோடு சேர்க்காமல், பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் இவற்றின் விலையை யும் உயர்த்துவார்கள் என்பதுதான்.

உடனடியாக மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப் படாததால் மக்க ளுக்கு நன்மை எதுவும் இல்லை - ஏனென்றால், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு காரணமாக, போக்குவரத்தையும் டீசல் ஜெனரேட்டர்களை யும் சார்ந்திருக்கும் பொருள்களின் விலைகள் சங்கிலித் தொட ராய் எகிறிவிடும். இன்று போலவே உலகச்சந்தை நிலவரத்தைக் காரணம் காட்டி ஏற் கெனவேபெட்ரோல் - டீசல் விலைகள் உயர்த் தப்பட்டபோது மேலே ஏறிய விலைகள் அந்த உயரத்திலேயே நின்றுவிட்டன. இப்போது, கிட்டத்தட்ட அதே அளவுக்கு மறு படியும் பெட் ரோல் - டீசல் விலைகள் உயர்த் தப்பட்டுள்ளன. போக்குவரத்து நிறுவனங்களின் சங்கங்கள், சரக்குக்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவித் துள்ளது ஒரு அபாய மணிதான்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்குச் சிவப்புக்கொடி காட்டி தடுக்கக்கூடிய இடதுசாரி கட்சிகளின் ஆதரவைச் சார்ந்து இந்த அரசு இல்லை என்ற துணிச்சலும், தேர்தல் தீர்ப்பை இப்படிப்பட்ட அநீதியான நடவடிக்கைகளுக்கு மக்கள் காட்டியிருக்கிற பச்சைக் கொடி என்று எடுத்துக் கொள்ளும் ஆணவமுமே இதன் பின்ன ணியில் இருக்கிறது. இதை மக்கள் அனுமதித் துக் கொண்டிருக்கமாட்டார்கள். உடனடியாக வெடித்துள்ள போராட்டங்கள் அதன் வெளிப் பாடே.

கருத்துகள் இல்லை: