செவ்வாய், 7 ஜூலை, 2009

தீவிர பிரச்சனைகளுக்கு தீர்வு கூறாத பட்ஜெட்

ஏழை எளிய மக்களை கருத்தில் கொண்டு 2009 - 10ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தயா ரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் பிர ணாப் முகர்ஜி கூறியுள்ளார். ஆனால், நடை முறையில் மன்மோகன்சிங் அரசு பின்பற்றி வரும் தாராளமயமாக்கல் கொள்கையை மேலும் தாராளமயமாக்குவதாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

உலகப் பொருளாதார நெருக்கடியால் விவசா யம், தொழில்துறை உள்ளிட்ட அனைத்து துறை களும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, லட்சக் கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். நலிவ டைந்த சிறுதொழில்துறையை மேம்படுத்த உருப் படியான திட்டங்கள் எதுவும் இந்தப் பட்ஜெட் டில் அறிவிக்கப்படவில்லை. மாறாக, ஒரு கோடியே 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில பட்ஜெட்டுகளில் தொடர்ச்சி யாக இடம் பெற்றுவரும் வாசகமாகவே உள்ளது.

முந்தைய அறிவிப்புகளின்படி வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் இந்தியாவில் இந்நேரம் அனைவருக்கும் வேலை கிடைத்தி ருக்கும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆன் லைன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய் யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ் வாறு பதிவு செய்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான வழிதான் கூறப்படவில்லை.

ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் பிரணாப் முகர்ஜி பட் ஜெட் உரையில் கூறியுள்ளார். வளர்ச்சி விகிதம் என்பது பங்குச் சந்தையில் மட்டும் பிரதிபலிக் கக் கூடாது. ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை பட்ஜெட்டில் பிரதிபலிக்க வேண்டும். விலைவாசியை குறைப்பது குறித்து திட்டவட் டமாக நிதியமைச்சரால் எதுவும் கூறமுடிய வில்லை. காரணம், ஆன் லைன் வர்த்தகம் என்ற பெயரில் உணவு தானியம் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களின் சந்தை வர்த்தக சூதாடி களின் கையில் விடப்பட்டுள்ளது. இதனால், விலைவாசியை கட்டுப்படுத்தும் லகான் அரசிடம் இல்லை என்பதுதான் உண்மை.

வருமான வரி உச்சவரம்பிற்கான விலக்கு ரூ.10 ஆயிரம் உயர்த்தப்பட்டிருந்தாலும், இப்போது உள்ள விலைவாசி நிலவரம் மற்றும் தொடர்ச்சி யான பணவீக்க நிலையில் இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் பயன் எதுவும் இருக்கப் போவதில்லை.

ஒட்டுமொத்த பட்ஜெட் செலவினம் 2009 - 10ம் ஆண்டில் ரூ.10 லட்சத்து 28 ஆயிரத்து 32 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. சுதந்திரத்திற்கு பிறகு 10 லட்சம் கோடியை தாண்டிவிட்டது என்று பெருமையாக அறிவிக் கப்பட்டுள்ளது. ஆனால், மறுபுறத்தில் சுதந்திரத் திற்கு பிறகு ஏழை எளிய சாதாரண மக்களின் வாழ்க்கை அதல பாதாளத்திற்கு சென்றுள்ள தோடு, பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கு மிடையிலான இடைவெளியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத் தின் கீழ் வழங்கப்படும் தினக் கூலி ரூ.100 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசினால் ஏற்கெனவே அறி விக்கப்பட்ட கூலியான ரூ.80 கூட தமிழகம் உள்பட பல மாநிலங்களில் முறையாக வழங்கப் படுவதில்லை என்பதுதான் உண்மை. எனினும், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் தேர்தலில் காங்கிரசுக்கு பெரும் ஆதாயத்தை கொடுத்தது என்பதால் இத்திட்டம் குறித்து அரசு கரிசனம் காட்டுகிறது.

மொத்தத்தில் தீவிரமான பிரச்சனைகளுக்கு தீர்வு கூறாத பட்ஜெட்டாக இது உள்ளது.

கருத்துகள் இல்லை: