வியாழன், 23 ஜூலை, 2009

சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வருமா?

என். ரெஜீஸ்குமார்

தமிழகத்தில் இன்று மிகப்பெரிய சந்தையாக மாற்றப்பட்டு கல்வி முதலாளிகளால் மாணவர்கள், பெற்றோர்கள் சுரண்டப்படும் அவலம் தொடர்கதையாகவுள்ளது. படிப்பதற்கே ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் நர்சரி, மெட்ரிக்குலே சன் பள்ளிகள் வீதிக்கு வீதி முளைத்துள் ளன. புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப் பட்ட 1980 களுக்கு பிறகு ஆயிரக்கணக்கான நர்சரி, மெட்ரிக்குலேசன் பள்ளிகளை தனி யார் கல்வி முதலாளிகள் துவங்கி நடத்தி வரு கிறார்கள்.

கட்டிடங்கள், திறமையான ஆசிரியர்கள், ஆய்வுக்கூடம், விளையாட்டு மைதானம், கழிப்பிட வசதி என எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி பெரும்பாலான மெட்ரிக் குலேசன் பள்ளிகள் செயல்பட்டு வருவதை முறைப்படுத்த தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப் படவில்லை. இத்தகைய அலட்சிய போக் கின் விளைவுதான் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் நடைபெற்ற தீ விபத்தும், அதில் 94 பச்சிளம் குழந்தைகள் கருகிப் போன கொடூரமும் நடைபெற்றது. இத்தகைய கொடுமையான நிகழ்வும், அதற்கு முன்ன ரும் அதற்கு பின்னரும் இந்திய மாணவர் சங்கமும் பல்வேறு அமைப்புகளும் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவுதான் 2006 சட்டமன்றத் தேர்தலில் சமச்சீர் பள்ளிக் கல்வி கொண்டுவருவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வைத்தது.

தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக் கட்டி லில் அமர்ந்த திமுக அரசு, தேர்தல் வாக்குறுதி குறித்து சமச்சீர் பள்ளிக்கல்வி குறித்து வாய் திறக்காதபோது சமச்சீர் பள்ளிக்கல்வியை அமல்படுத்திட தேவையான நடவடிக்கை களை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியது இந்திய மாணவர் சங்கம். அதன் விளைவாக பாரதிதாசன் பல் கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர். முத்துக்குமரன் தலைமையில் ஒன்பது கல்வியாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு சமச்சீர் பள்ளிக்கல்வியை அமல்படுத்துவது குறித்து பரிந்துரைகள் கேட்டது தமிழக அரசு.

முனைவர். முத்துக்குமரன் குழுவும் தமிழ கம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாண வர்கள், பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கருத்துக்களைக் கேட்டு சமச்சீர் பள்ளி கல்வி குறித்த அறிக்கையை தமிழக அரசிடம் வழங்கியது. தமிழக அரசும் அந்த அறிக்கையை 2007 அக்டோபரில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.

துரதிருஷ்டம் என்னவென்றால் முனை வர். முத்துக்குமரன் குழு சமச்சீர் பள்ளிக் கல்வி குறித்து அறிக்கை கொடுத்து அது தமி ழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் இவ்வறிக்கை குறித்து இன்றுவரையிலும் தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட வில்லை. மாறாக முனைவர். முத்துக்குமரன் பரிந்துரைகளை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து தமிழக அரசிற்கு ஆலோ சனைகள் வழங்க ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜய குமாரை ஒருநபர் குழுவாக நியமித்தது தமிழக அரசு. தற்போது அந்த ஒருநபரால் மட்டுமே ஆலோசனைகள் வழங்கமுடியவில்லை என்று கூறி ஐந்துநபர் குழுவாக விரிவுபடுத்தி யுள்ளது. இந்த குழுவிற்கு எந்தவிதமான கால வரையறையும் நிர்ணயிக்கப்படவில்லை என் பது மட்டுமல்ல; சமச்சீர் பள்ளிக்கல்வியை அமல்படுத்திட எந்தவிதமான உறுதியான நட வடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வில்லை என்பது தான் வருந்தத்தக்கது.

இந்நிலையில்தான் சமச்சீர் பள்ளிக்கல் வியை அமல்படுத்த தேவையான நடவடிக் கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண் டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தொடர்ச்சியாகப் போராடி வருகிறது. இந்தக் கல்வியாண்டிலும் ஜூன் 5 ஆம் தேதி தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி தமிழக அரசிடம் முறையிடப்பட்டது. ஜூன் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வலி யுறுத்தப்பட்டது. ஆனாலும் இதுகுறித்து எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாத தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகத் தான் ஜூலை 14 அன்று அரசின் தலைமைச் செயலகம் அருகில் இந்திய மாணவர் சங்கத் தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அமைதியான முறையில் போராட்டம் நடத் திய மாணவர்களை ஏதோ பயங்கரவாதி களைத் தாக்குவது போல் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியது தமிழக காவல்துறை.

இத்தகைய கொடூரமானத் தாக்குதல் குறித்தும், சமச்சீர் பள்ளிக்கல்வி குறித்தும் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் கொடுத் துள்ள விளக்கம் தமிழக மாணவர்களின் நீண்டநாள் போராட்டத்தை கொச்சைப்படுத் துவதாகவும், அவர்களது நியாயமான கோரிக் கைகளை திசைதிருப்புவதாகவும் உள்ளது.

முதலாவதாக போராட்டம் குறித்து பேசிய முதல்வர், போராட்டம் நடத்திய 72 பேரில் 49 பேர் மட்டுமே மாணவர்கள், மற்றவர்கள் மாண வர்கள் இல்லையென்றும், போராட்டத்தை தூண்டிவிடுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். மாணவர் சங்கத் தலைவர்களாக இருப்பவர் கள் மாணவர்களாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பது கலைஞருக்குத் தெரியாததல்ல. திமுக மாணவரணி செயலாள ராக இருக்கும் புகழேந்தி எந்த கல்லூரியில் படிக்கிறார் என்று கலைஞர் சொல்வாரா அல் லது இதுவரை திமுக மாணவரணி செயலாளர் களாக இருந்தவர்களெல்லாம் எந்த கல்லூரி யில் படிக்கும்போது மாணவரணி செயலாளர் களாக இருந்தார்கள் என்பதை கலைஞர் விளக்குவாரா? இது அவர்களது உட்கட்சி விவகாரம் நமக்குத் தேவையில்லாதது. ஆனால், நமது கேள்வியெல்லாம் நியாயமான கோரிக்கையை முன்வைத்து போராடிய மாணவர் சங்கத் தலைவர்களை ஏதோ பயங் கரவாதிகளைப் போல் சித்தரிப்பதன் நோக் கம் என்ன என்பதுதான்.

அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தி னால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்கிற தமிழக முதல்வரே, நீங்கள் அண்ணா நினைவிடத்தில் விசித்திரமாக இரண்டு மணி நேரம்மட்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது எந்த காவல்நிலை யத்தில் அனுமதி வாங்கினீர்கள் என்று சொல்ல முடியுமா?

குறைந்தபட்ச பலத்தை மட்டுமே காவல் துறை பிரயோகித்தது என்று சொல்லும் தமி ழக முதல்வரே, மாணவர்கள் என்றும் பாராமல் மண்டையை உடைப்பது தான் குறைந்தபட்ச பலப்பிரயோகமா?

அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தி னால் நடவடிக்கை என்று மிரட்டும் தமிழக முதல்வரே, கோட்டைக்கு அருகில் அனுமதி பெற்று போராட்டம் நடத்த நாங்கள் தயார்; அனுமதி கொடுக்க நீங்கள் பொறுப்பு வகிக்கும் காவல்துறை தயாரா?

எதற்கெடுத்தாலும் மேற்குவங்கம், கேர ளம் குறித்து பேசும் தமிழக முதல்வரே, அங் கெல்லாம் சட்டமன்றத்திற்கு அருகில் கூட ஜனநாயகரீதியாக போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறதே அதுகுறித்து பேச மறுப்பதேன்?

தேசத்தை பிளவுபடுத்தும் பயங்கரவாதி களுடனும், நக்சலைட்டுகளுடனும் கூட பேச்சுவார்த்தை நடத்த அரசுகள் தயாராக இருக்கிறபோது, தமிழக அரசு, தானே கொள் கை அளவில் ஏற்றுக்கொண்டதாய் கூறிக் கொள்ளும் சமச்சீர் பள்ளிக்கல்வியை அமல் படுத்துங்கள் என்று போராடிய மாணவர்க ளோடு பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதேன்?

மேற்குவங்கம், கேரளா உள்ளிட்டு இந்தி யாவில் எந்த மாநிலத்திலும் சமச்சீர் பள்ளிக் கல்விமுறை இல்லையென்று தமிழக முதல் வர் தெரிவித்துள்ளார். உண்மை என்னவென் றால் மேற்குவங்கம், கேரளா மட்டுமல்ல; இந் தியாவில் எந்த மாநிலத்திலும் தமிழகத்தைப் போல் நான்கு விதமான பாடமுறை கிடை யாது. மாநில அளவில் ஒரே விதமான பாட முறையே பள்ளிக்கல்வியில் பின்பற்றப்பட்டு வருகிறது.

சமச்சீர் பள்ளிக்கல்வியை கொள்கை அளவில் தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்று தமிழக முதல்வர் கூறுகிறார். கேள்வி என்னவென்றால் சமச்சீர் பள்ளிக்கல்வியை எப்போது அமல்படுத்தப் போகிறீர்கள் என்பது தான். காரணம் முனைவர். முத்துக்குமரன் குழுவின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகப் போகும் நிலையிலும் இதுவரை சட்டமன்றத் தில் விவாதிக்காமல் காலவரையறையின்றி குழு மேல் குழு அமைத்து காலம் கடத்துவது யாரைக் காப்பாற்றுவதற்காக.

தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும் மாண வர்-ஆசிரியர் அமைப்புகளும், கல்வியாளர் களும் சமச்சீர் பள்ளிக்கல்விக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தனியார் நர்சரி, மெட்ரிக்குலேசன் பள்ளி முதலாளிகள் மட்டுமே இத்திட்டத்தை எதிர்க்கின்றனர். சமச்சீர் பள்ளிக்கல்வியை அமல்படுத்தும் போது இவர்களின் கல்விக் கொள்ளை மட் டுப்படும் என்கிற ஒரே காரணத்திற்காகத் தான் இத்தகைய கல்வி வியாபாரிகள் இத் திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

தமிழக அரசு இப்போது என்ன செய்யப் போகிறது? தமிழகத்திலுள்ள இலட்சக்கணக் கான மாணவர்களின், அவர்களின் பெற் றோர்களின் நலன் காக்கும் வகையில், கல்வி யில் சமூகரீதியான சமச்சீர் பள்ளிக் கல்வியை அமல்படுத்த தேவையான நடவடிக்கை களை உடனடியாக மேற்கொள்ளுமா? இல் லை, தனியார் பள்ளி முதலாளிகளின் கல்விக் கொள்ளைக்கு துணையாய் சமச்சீர் பள்ளிக் கல்வியை அமல்படுத்தாமல் காலம் கடத்துமா?

கட்டுரையாளர், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத்தலைவர்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Regis Kumar's article on Common School System is a well reasoned one.
Attack on students who were peacefully demonstating for their just demand was unwarranted.
The Education Commisssion (1964-66)had recommended a Common School System of Public Education as the basis of building up the National System of Education with a view "to bring the different the social classes and groups together and thus promote the emergence of an egalitarian and integrated society".
The Commission warned that "instead of doing so, education itself is tending to increase social segregation and to perpetuate and widen class distinction"

It further noted that "this is bad not only fot the children of the poor but also for the children of the rich and the privileged groups" since "by segregating their children, such privileged parents prevent them from sharing the life and experiences of the children of the poor and coming into contact with the realities of life ....... also render the education of their own children anaemic and incomplete".
The Commission contended that "if these evils are to be eliminated and the education system is to become a power instrument of national development in general and social and national integration in particular, with we must move towards the goal of a common school system".

As a frontline state of India, Tamilnadu should take the initiative in building a common school system at the earliest.Having accepted in principle the recommendations of Dr.Muthukumaran Committee Report, the Tamilnadu Government should not delay the implementation of the Common School System.

S.vivekanandan
General Secretary
Madurai Kamaraj,Manonmaniam Sundaranar,Mother Theresa and Alagappa University Teachers' Association(MUTA)

விடுதலை சொன்னது…

எஸ்.விவேகாநந்தன் அவர்களுக்கு தங்கள் கருத்துகளுக்கம் வருகைக்கும் நன்றி