திங்கள், 3 ஆகஸ்ட், 2009

நாட்டின் சொத்தா? அம்பானியின் குடும்பச் சொத்தா? எரிவாயு விநியோகத்தை அரசே ஏற்றிட வேண்டும் பிரதமருக்கு இடதுசாரி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

இயற்கை எரிவாயு விற்பனை மற்றும் விநியோகத்தை அரசாங்கமே முழுவதுமாக மேற்கொள்ள வேண்டு மென்றும், தேசிய சொத்தை தனியார் குடும்பத்தின் சொத்தாக மாற்றுவதை அனுமதிக்கக் கூடாது என்றும் இடது சாரி கட்சிகளைச் சேர்ந்த 30 எம்.பி.க் கள் பிரதமரிடம் மனு ஒன்றை அளித் துள்ளனர்.


கிருஷ்ணா, கோதாவரி படுகை பகுதியில் இயற்கை எரிவாயு எடுத்து விற்பனை மற்றும் விநியோகம் செய்யும் பணியை அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கம்பெனி மேற்கொண்டுள்ளது. அம்பானி சகோதரர்களான முகேஷ் அம்பானி மற்றும்அனில் அம்பானி ஆகியோரி டையே இந்த விற்பனையில் கிடைக் கும் பல லட்சம் கோடி ரூபாய் தொடர் பாக மோதல் நடந்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப எரிவாயு விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் நிர்ப்பந்தம் செலுத்தி வருகிறது. நாட் டுக்கு சொந்தமான கிருஷ்ணா, கோதா வரி நதிப் படுகை இயற்கை எரிவா யுவை தங்கள் குடும்பச் சொத்துப் போல கருதி, அம்பானி சகோதரர்கள் அடித்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிருந்தா காரத், பாசுதேவ் ஆச்சார்யா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர் து.ராஜா உள்ளிட்ட 30 இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டு பிரதமரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

கிருஷ்ணா, கோதாவரி நதிப் படுகை உள்பட நாட்டில் கிடைக்கும் இயற்கை எரிவாயு நாட்டின் சொத்து என்று இந்திய அரசு சரியாகவே கூறியுள்ளது. இந்த இயற்கை வளமும், இதனால் கிடைக்கும் லாபமும் நாட்டின் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்பட வேண்டும். சில தனியாரின் கொள்ளை லாபவெறிக்கு உட்படுத்தக்கூடாது.

அரசின் இந்த உறுதிப்பாடு, இயற்கை எரிவாயு விநியோகத்தை அரசே ஏற்று நடத்த வகைசெய்யும் என்றும் நாங்கள் நம்புகிறோம். தேசிய இயற்கை எரிவாயு முனையத்தின் மூலம் நாடு முழுவதும் சீரான எரிவாயு விநியோகத்திற்கு அரசே இந்த விநி யோகத்தை மேற்கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

எரிவாயுவுக்கு விலை நிர்ணயிப்பது நியாயமான முறையிலும், வெளிப் படையான முறையிலும் அமைந்திட வேண்டும்.

நமது சொந்த மண்ணிலிருந்து தான் இயற்கை எரிவாயு எடுக்கப் படுகிறது. சர்வதேச சந்தை நிலவரத் திற்கு ஏற்பவே எரிவாயுவின் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. கச்சா எண்ணெய் விலை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக உள்ளது. உதாரணமாக அமெரிக்கா வில் எரிவாயு சிலிண்டர் விலை 4.32 டாலராக உள்ளது. இதே போன்று ஐரோப்பிய யூனியனும் எரிவாயு விலையை உள்நாட்டு தேவைக்கு ஏற்ப சீரமைத்துள்ளது.

இந்தியாவில் இயற்கை வளத்தை ஒரு குடும்பச் சொத்தாக மாற்றி, சில தனியார்கள் அதை அபகரிக்க முயல்வது சரியல்ல என்று உச்சநீதிமன்றத் தில் அரசு தெரிவித்துள்ள கருத்து சரியானது. கிருஷ்ணா, கோதாவரி நதிப் படுகை எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனையை அரசு உடனடியாக கையகப்படுத்த வேண்டும். அதிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, தேசிய எரிவாயு முனையம் ஏற்படுத்தி அதன் மூலம் விநியோகிக்க வேண்டும்.

பொதுத்துறை நிறுவனமான இந்திய எரிவாயு ஆணையத்தை இதற்கான முன்னணி நிறுவனமாக கொள்ளலாம் என்று இடதுசாரி எம்.பி.க்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: