புதன், 5 ஆகஸ்ட், 2009

பெட்ரோல் விலையும் மளிகை பட்ஜெட்டும்

கே.பி.பெருமாள்

ஜூலை 2ந் தேதி பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு உயர்த் தியது. அதற்கு பின்பு நாடு முழுவதும் விலைவாசி உயர்வு, விண்ணை முட்டக் கூடிய வகையில் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. உழைப்பாளி மக்கள், நடுத்தர மக்கள் மளிகைச் சாமான் பட்ஜெட்டிற்கு மிகக் கூடுதலாக செலவு செய்ய வேண்டியுள்ளது.

தமிழகம் மளிகைப்பொருட்களுக்காக வெளி மாநிலங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. அரிசி, சர்க்கரை, மிள காய் உள்ளிட்ட ஒரு சில பொருட்கள் மட் டுமே தமிழகத்தில் விளைவிக்கப்படு கிறது. பருப்பு வகைகள் டில்லி, அரியானா, குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து வருகின்றன. தமிழகத்தின் தென் மாவட் டங்களில் விருதுநகர், தூத்துக்குடி, இராம நாதபுரம் பகுதிகளில் மல்லி விளைந்தா லும் ராஜஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஏலக்காய், தேங்காய் எண்ணெய் கேரளாவிலிருந்தும், நீண்ட மிளகாய் ஆந்திராவிலிருந்தும் கொண்டு வரப்படுகிறது. லவங்கம் இலங்கையிலி ருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தமிழகத்திற்கு அரிசி, மளிகைப்பொருட்கள் கொண்டுவரும் லாரிகளின் வாடகை கடுமையாக உயர்ந் துள்ளது. டில்லியிலிருந்து சென்னைக்கு லாரிகள் மூலம் சரக்குகள் ஏற்றிவர பழைய வாடகை ரூ.52,500/- பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பின்பு ரூ.58,500 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா சரக்கு போக்குவரத்திற்கு 70 சதவீதம் லாரியை நம்பியுள்ள நாடு. எனவே, பெட்ரோல், டீசல்விலை உயர்வால் அத் தியாவசியப் பொருட்களின் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. பருப்பு விலையும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக துவரம் பருப்பு விலை தங்கத்தின் விலையை போன்று உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மளிகைப்பொருட்களின் விலை விபரம் அட்டவணையில் உள்ளது.

விலைவாசி உயர்வு நாட்டு மக்களை கடுமையாக பாதிக்கக்கூடிய நேரத்தில் விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட் ரோல், டீசல்விலை உயர்வை குறைப்பது குறித்து சிந்திக்காமல், எண்ணெய் நிறு வனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை மட் டுமே சிந்தித்து செயல்படுகிறது மன்மோகன் சிங் அரசு. ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச் சுவது போல’ விமானத்திற்கான எரி பொருள் விலையை எண்ணெய் நிறுவ னங்கள் 5.7 சதவீதம் குறைத்துள்ளன. விமானத்திற்கான எரிபொருள் விலை குறைப்பால் லாபமடைபவர்கள் வசதி படைத்தவர்களும், பெரும் முதலாளி களும் மட்டுமே. ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை.

2 கருத்துகள்:

Varadaradjalou .P சொன்னது…

நிஜம். அத்தியாவசிய பண்டங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனாலும் பணவீக்கம் என்னவோ “நெகடிவில்“(negative-ல்) காண்பிக்கிறது மத்திய அரசு.
//தமிழகத்தில் மளிகைப்பொருட்களின் விலை விபரம் அட்டவணையில் உள்ளது.//

அட்டவணையை காணோமே

விடுதலை சொன்னது…

வரதராஜலு அவர்களுக்கு தங்கள் கருத்துக்கு நன்றி அட்டவணை விரைவில் இணைக்கப்டும்