சட்டமன்றத்திற்கே முறையாக செல்லாத இவரது தலைமையிலான கட்சிக்கு வாக்களிப்பது வேஸ்ட்.
மத்திய-மாநில அரசுகளின் அறி விப்புகள் பெரும்பாலும் அறிவிப்புகளா கவே முடிந்து விடுகிறது. இடைத்தேர் தல் வரும்போது மட்டும் சம்பந்தப்பட்ட தொகுதி மக்க ளுக்கு சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. வாக்குப்பதிவு முடிந்தவுடன் சலுகை மழையும் நின்று விடுகிறது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை.
இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசு, சுயேட்சையான அயல்துறை கொள்கையை கைகழுவி, அமெரிக்கா வின் அடிமையாக நமது தாய்த்திரு நாட்டை மாற்ற முயற்சி செய்கிறது.
மத்தியில் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீண்டும் அமைந்த பிறகு, தேசத் தின் அஸ்திவாரமாக விளங்குகிற பொதுத் துறை நிறுவனங்களை சீரழிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கிவிட்டன. காப் பீட்டுத்துறையை அந்நியருக்கு காவு கொடுக்க மன்மோகன் சிங் அரசு துடிக்கிறது.
நெய்வேலி என்எல்சி உட்பட பல் வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மன்மோகன் சிங் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இடது சாரி கட்சிகள் ஆதரவுடன் இதே அரசு பொறுப்பிலிருந்தபோது, என்எல்சி பங்கு கள் விற்கப்படும் என்ற அறிவிப்பு வெளி யிடப்பட்டபோது, ஆட்சியைவிட்டு வெளி யேறுவோம் என்று கூறும் அளவுக்கு திமுக சென்றது. ஆனால் இப்போது மவுனமாக மன்மோகன் சிங் அரசின் செயலை அங்கீகரிக்கிறது.
இடதுசாரி கட்சிகளின் கடுமையான நிர்பந்தம் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் வணிகத்தில் மோசடியான ஆன்-லைன் வர்த்தகம் தடை செய்யப் பட்டது. ஆனால் இப்போது அந்த தடை நீக்கப்படுகிறது. இதனால்தான் துவரம் பருப்பு உயரம்பருப்பாகி மக்களை எட்டிப் பார்க்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல முக்கியப் பொருட்களுக்கு இந்த கதி ஏற்படும்.
தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங் களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப் பந்தம் செய்துகொள்கிறது. ஆனால் இந்த ஒப்பந்தங்களில் என்ன நிபந்தனை உள் ளது என்று சட்டமன்றத்திற்கு கூட தெரி விப்பது இல்லை.ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க வகைதொகையற்ற முறையில் நில ஒதுக் கீடு, தடையற்ற மின்சாரம், வரிச்சலுகை, தொழிற்சங்க உரிமைகளை மறுக்க அரசு ஒப்புதல் என்று பல்வேறு பாதகமான அம்சங்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் இடம்பெற்றுள்ளது என்றுதான் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கும் சீராக இல்லை. தொழிலாளர்கள், விவ சாயிகள், மாணவர்களின் போராட்டங் களின் போது காவல்துறை கொடூரமான முறையில் ஏவிவிடப்படுகிறது. மறுபுறத் தில் கொலை, கொள்ளை அதிகரித்து விட்டது. பாதுகாப்புமிக்க புழல் சிறையி லேயே கைதி ஒருவர் படுகொலை செய் யப்பட்டுள்ளார். திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை, சென்னை வர்த்தகர் கொலை என பட்டப்பகலில் பகிரங்கமாக கொலைச்சம்பவங்கள் நடக்கின்றன. பணத்துக்காக சிறுவர் - சிறுமிகள் கடத்திக்கொல்லப்படுவதும் அதிகரித் துள்ளது.
அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டதாக திமுக அரசு ஜம்பம் அடிக்கிறது. ஆனால் ஏழை எளிய மக்களுக்கு 2 ஏக்கர் இலவச நிலம், குடி மனை, பட்டா போன்ற கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பல லட்சம் பேர் பட்டா கேட்டு காத்திருக்கின்றனர். ஆனால் பட்டா வழங்கும் திட்டமே நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 1.25 கோடிப்பேர் குடிமனை கேட்டு காத்திருக்கின்றனர். இவர்களில் 2 ஆயிரத்து 300 பேருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 40 சதவீதம் பேர் வீடற்றவர்களாக உள்ளனர்.
நில உச்சவரம்பில் மிச்சமுள்ள நிலத்தை கல்லூரிகள் அறக்கட்டளை களுக்கு வழங்க விதிகளை திருத்தி, சட்டமன்றத்தில் பகிரங்கமாக சட்டம் கொண்டுவருகிறது திமுக அரசு. இதில் உள்ள அக்கறை ஏழை, எளிய மக்க ளுக்கு நிலம் வழங்குவதில் திமுக அர சுக்கு இல்லை. ஆக்கிரமிப்பை அங்கீ கரிக்கும் செயலே இது.
சமச்சீர் கல்வி கேட்டு போராடினால் மாணவர்களை தாக்குகிறது திமுக அரசின் காவல்துறை. மறுபுறத்தில் சமச் சீர் கல்வி என்பது வெறும் அறிவிப்பா கவே உள்ளது. சுயநிதி மருத்துவக்கல் லூரிகளில் ஒரு சீட் 40 லட்சம் ரூபாய் என்றும் பகிரங்கமாக ஏலம் விடப்படு கிறது. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பகற்கொள்ளை நடக்கிறது. ஆனால் இவர்களைக் நோக்கி அரசும் சட்டமும் பாயாமல் பதுங்கி நிற்கிறது.
காசிருந்தால் மட்டுமே இனி மருத் துவம் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள் ளது. தனியார் மருத்துவமனைகளை ஏழை மக்கள் எட்டிக்கூட பார்க்க முடி யாது. மறுபுறத்தில் மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் கூட உரிய மருந்துகள், நவீன வசதிகள் இருப்ப தில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரம்ப நிலையிலேயே உள்ளன.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற் கொள்ளப்படும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள், கிராமப்புற வேலை வாய்ப்புத்திட்டம் போன்றவை கமிஷன் ஏஜெண்டுகள் கையில் சிக்கித் தவிக்கிறது.
தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை இன்னமும் கொடூரமான முறையில் நீடிக்கிறது. குடியிருப்புகளில் மட்டு மல்ல; சுடுகாடுகளில் கூட சமத்துவம் நிலவவில்லை.
விவசாயத்துறை தொடர்ந்து புறக் கணிக்கப்படுகிறது. எம்.எஸ்.சுவாமி நாதன் தலைமையில் அரசினால் அமைக் கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற மத்திய அரசு மறுக்கிறது.
கந்துவட்டி ஒழிக்கப்படும் என்று முதல்வர் சட்டமன்றத்தில் அறிவிக்கிறார். ஆனால் விவசாயக்கடன் போதுமான அளவு கிடைக்காததால் இன்னமும் கந்துவட்டிக்காரர்களின் பிடியிலேயே விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரின் போராட்டப்பேரலை வீசியடிக்கிறது. அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், மாணவர்கள், வாலிபர்கள், எல்ஐசி மற்றும் வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் போராடுகின்றனர்.
இந்த பின்னணியில், மத்திய -மாநில அரசுகளின் மக்கள் விரோத பொருளா தாரக் கொள்கைகளுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு நடை பெறும் சட்டமன்ற இடைத்தேர்தலை இடதுசாரி கட்சிகள் சந்திக்கின்றன.
ஆளுங்கட்சியான திமுக மற்றும் காங்கிரஸ் “திருமங்கலம் பார்முலா” அடிப்படையிலேயே இந்த இடைத் தேர்தலையும் சந்திக்கிறார்கள். அதிகார துஷ்பிரயோகம், பண விநியோகம் என வழக்கமான முறையிலேயே செயல் படுகிறார்கள். இது ஜனநாயக வாழ் வையே நாசப்படுத்திவிடும்.
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக போராடும் இடதுசாரி கட்சி வேட்பா ளர்களுக்கு அதிமுக, மதிமுக, பாமக, உள்ளிட்ட அனைத்து ஜனநாயக, மதச் சார்பற்ற கட்சிகளைச் சேர்ந்த தொண்டர் களும், ஆதரவாளர்களும் உறுதுணையாக நிற்க வேண்டுகிறோம். மத்திய-மாநில அரசுகளுக்கு பாடம் கற்பிக்கும் ஒரு நல்வாய்ப்பாக இந்த இடைத்தேர்தலை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள் வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக