சனி, 29 ஆகஸ்ட், 2009

திமுகவின் அரசியல் பகைமையும், விபரீதங்களும்

என். குணசேகரன்

தலித், அருந்ததியர், பிற்பட்டோர் என பல ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அதிக எண் ணிக்கையில் வாழ்ந்துவரும் மாவட்டம் தருமபுரி. எந்த அளவுக்கு ஆட்சியாளர்கள் இந்த மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை நிறை வேற்றிடத் தவறியிருக்கிறார்கள் என்பது அரசாங்க ஆவணத்திலேயே உள்ளது.

அகில இந்திய அளவில் வெளியிடப்பட் டுள்ள 61வது தேசிய மாதிரி சர்வே தருமபுரி மாவட்ட விவரங் களைக் கொண்டிருக்கிறது.அதில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்தவர்களின் தனிநபர் மாதாந்திர நுகர்வுச்செலவு ரூ.749 என கண்டறியப்பட்டுள்ளது. அதாவது தினச்செல வுக்கு ரூ.25 கூட இல்லாத நிலையில்தான் பெரும்பாலான மக்கள் தருமபுரி மாவட்டத் தில் வாழ்ந்து வருகின்றனர்.

அதே ஆவணத்தில், அந்த மாவட்டத்தில் வறுமையில் வாடுகிற மக்கள் எண்ணிக்கை சுமார் 40.3 சதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, வறுமையும், ஒடுக்குமுறைகளும் ஒரு சேர தாண்டவமாடும் மாவட்டம் தருமபுரி..

இந்நிலையில், அதிக அக்கறையோடு மக்களின் வாழ்வாதாரங்களை பெருக்கிடவும், உண்மையான முன்னேற்றத்தை சாதித்திடும் திட்டங்களைத் தீட்டி அமலாக்கவேண்டிய தும் ஆட்சியாளர் கடமை. ஆனால் அவர்கள் தற்போது செய்வது என்ன?

தருமபுரி நகராட்சி, ஆளுகிற திமுக உறுப் பினர்களை அதிகம் கொண்டது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நகராட்சித்தலைவர் தலைமையேற்று நடத்திய கூட்டத்தில் ஒருபுரட்சிகரமானதீர்மானத்தை நிறைவேற்றி யுள்ளார். நகரத்தில் வாழ்ந்துவரும் 54 துப் புரவுத்தொழிலாளர் குடும்பங்களை வெளி யேற்றுவது என்று கடும் எதிர்ப்புக்கிடையே பலபிரம்ம பிரயத்தனமுயற்சிகள் செய்து தீர் மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

நாடு விடுதலை பெற்ற காலம் முதல், நீண்ட நெடுங்காலமாக அந்தக் குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றன. 62 ஆண்டு களாக அங்கு வசித்துக் கொண்டு, நகரத்தின் அனைத்துத் தெருக்களையும் தூய்மைப்படுத்தி வருபவர்கள் அவர்கள். இவர்களை வெளி யேற்றுவோம் என்று கொக்கரிக்கும் சீமான் கள் உள்பட அனைவரும் வசிக்கின்ற நகரத் துத் தெருக்களை தூய்மைப்படுத்தி வந்தவர் கள். அதுமட்டுமல்ல, மனித கவுரவத்தையும் பாராமல், நகரத்தாரின் மனிதக்கழிவுகளை அப்புறப்படுத்தும் வேலையை 62 ஆண்டு காலமாக செய்து வந்தவர்கள். இவர்களது வீடு களை இடித்து, தரைமட்டமாக்கி, கொள்ளை லாபம் பெறத் துடிக்கும் கூட்டம்தான் மேற் கண்ட நகராட்சித் தீர்மானத்தின் பின்னணி யாக இருந்து செயல்படுகிறது.

இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, நடைபெற்றவிவாதங்களைகண் ணுற்ற பார்வையாளர்கள், பத்திரிகையாளர் கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் தோழர் மாதேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் மோகன் ஆகிய இருவரும் எதிர்ப்புக்குரலை ஓங்கி ஒலித்தனர்.

எங்களுக்கு இந்த எண்ணமெல்லாம் இல்லை என அவர்கள் மறுக்கக்கூடும். அப் படியெனில், செங்கொடிபுரம் என்று அழைக் கப்படுகின்ற 4 ஏக்கர் 78 சென்ட் நிலப்பரப்பு கொண்ட இந்தப்பகுதியில் 4 ஏக்கர் 25 சென்ட் நிலத்திற்கு மட்டும் ஏன் பட்டா வழங்கப்பட் டது? வணிக நோக்கோடு செயல்படும் பல நிறுவனங்களுக்கு இதே பகுதியில் ஏன் பட்டா கொடுக்கப்பட்டது? பணக்காரர்களின் கேளிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட காஸ்மோபாலிடன் கிளப், ரோட்டரி ஹால், ஐஎம்ஏ ஹால் போன்றவற்றுக்கெல்லாம் பட்டா கொடுத்தது எப்படி? இப்பகுதியில் வீடு கட்டிக் குடியிருக்கும் இதர சாதிப்பிரிவி னர்களுக்கு பட்டா கொடுத்துவிட்டு, நகர சுத்தி தொழிலாளர்களுக்கென்று ஸ்கேவன்ஜர் சைட் என்றே அமைக்கப் பட்ட வெறும் 56 சென்ட் பகுதிக்கு மட்டும் பட்டா கொடுக்க மறுக்கிறார்கள்? சாதி வெறி தலைக்கேறியுள்ளதால்தான் இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் கலைஞர், தந்தை பெரியார் பெயரில் சமத்துவபுரங்கள் அமைத்துள் ளார். தமிழகமே ஒரு சமத்துவபுரமாக விளங்க வேண்டுமென்று அவ்வப்போது கருத்து தெரி வித்துள்ளார். தருமபுரியில் உள்ள செங்கொடி புரம் பகுதி, உண்மையில் அரை நூற்றாண் டாக உள்ள சமத்துவபுரம்தான்; ஆதிதிராவிடர், அருந்ததியரிலிருந்து உயர் சாதியினர் வரை ஒற்றுமையோடு வாழ்ந்துவரும் உண்மை யான சமத்துவபுரம்தான், செங்கொடிபுரம். இந்த சமத்துவபுரத்தை ஒழிக்கவே தருமபுரி நகராட்சி நிர்வாகம் ஆலாய்ப் பறக்கிறது.

இருக்கிற சமத்துவபுரங்களையெல்லாம் அழித்துவிட்டு, புதிதாக உருவாக்குவதில் என்ன பயன்? இது கலைஞரிடம் நாம் முன் வைக்கும் கேள்வி. பெரியாரின் இலட்சியக் கனவுகளுக்கு விரோதமாக இயங்கும் தரும புரி நகராட்சி நிர்வாகத்தையும், அதற்கு துணை போகும் திமுக உறுப்பினர்களையும் ஏன் கலைஞர் கண்டிக்கவில்லை? 5 ஆண்டு குடியிருந்தால் பட்டா தரலாம் என்ற அரசாணைக்கு(எண்:854) நகராட்சியே விரோதமாகச் செயல்படுவதை ஏன் கலை ஞர் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக் கிறது? திமுக அரசு போட்ட உத்தரவுக்கு திமுக கவுன்சிலர்களே ஏன் துரோகம் செய்கிறார்கள்?

ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு சொந்த இருப்பிடமோ, சொத்துக்களோ இருக்கக் கூடாது என்பது நால் வருணமுறை துவங் கிய காலத்திலிருந்தே இருந்து வரும் ஆதிக்க உணர்வு.

டாக்டர் அம்பேத்கார் எழுதியசூத்திரர் வர லாறுஎனும் நூலில் இந்த மேலாதிக்க சாதி வெறி உணர்வின் வரலாற்றை அம்பலப் படுத்துகிறார்.

மனுஸ்மிருதி கூறுவதைப் பாருங்கள்... ஒரு பிராமணன், சூத்திரனின் சொத்துக்களை சுலபமாக அபகரித்துக் கொள்ளலாம். ஏனென் றால் சூத்திரனுக்கு சொந்தமாக எதுவுமே வைத்துக் கொள்ளக்கூடாது.... பொருளை சேர்த்துக் கொள்ளக்கூடிய திறமை உள்ள வனாக இருந்தாலும், சூத்திரன் சொத்து சேர்த் துக் கொள்ளக்கூடாது. காரணம், இவன் சொத்து வைத்துக் கொண்டிருப்பதைப் பார்ப் பதே பிராமணனுக்கு பாபமாகும்”.

சொங்கொடிபுரத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்- குறைந்தபட்ச சொத்தான வீடு என்பதைக்கூட வைத்துக் கொள்ளக்கூடாது என்று நவீன மனுஸ்மிருதி யாளர்கள் கங்கணம் கட்டிச் செயல்படுகின் றார்கள். இதை வேடிக்கை பார்த்துக் கொண் டிருக்கும் கலைஞர் அரசு, நவீன பிரா மணீயத்தை தூக்கிப் பிடிக்கும் அரசா? என மக்களிடமிருந்து கேள்விக்கணைகள் அம்பு களாகப் புறப்பட்டு வருகின்றன.

நகராட்சி நிர்வாகம் இழைத்த அநீதியை அரசாங்கத்திடம் முறையிட, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சென்னை சென்று துணை முதல்வரை சந்தித்தனர். அவர்களுக்கு அனு தாபமாக எந்தச் சொல்லும் துணை முதல் வரிடமிருந்து வராதது கண்டு அவர்கள் அதிர்ச்சியுற்றனர்.

அதுமட்டுமல்லாது, இந்தக் குடும்பங்க ளுக்கு நியாயம் வேண்டி அவர்களோடு சென்றிருந்த மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபுவைக் காட்டி, ‘உங் களுக்கு இவரைத்தவிர வேறு யாரும் தெரிய வில்லையா? ஏன் திமுக மாவட்டச் செய லாளர், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து வரவில்லை, என்று துணை முதல்வர் சாடியிருக்கின்றார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமை என்று பார்ப்பதற்கு பதிலாக, அரசியல் காழ்ப் புணர்ச்சியோடு நடந்து கொள்வது, அரசியல் வீழ்ச்சிக்குத்தான் வழிவகுக்கும் என்பது வரலாறு.

1962ம் ஆண்டிலேயேஜனசக்தியில் எழுதிய ஒரு தலையங்கக் கட்டுரையை, கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடி தோழர் ஜீவானந்தம் இவ்வாறு துவக்குகிறார்:

பகைத்தவன் சொல்லாததில்லை;

பசித்தவன் தின்னாததில்லை என்ற பழமொழி

-பகைமைக் காழ்ப்பின் குருட்டு, முரட்டுப் பாய்ச்சலைக் குறிப்பிடுகிறது.

அரசியல் பகைமை வைரம் பாய்ந்து விடு மானால், அந்தக் காழ்ப்பு கீழ்த்தரத்தை எட்டிப் பிடித்து குருட்டு ஆவேசம் கொள்ளுமானால், அதற்கு சூழ்நிலை இணக்கம் தெரிவிக்கு மானால் எந்தப் படுகேடும், விபரீத அனர்த்த மும் விளைவதைக் காணலாம்

தோழர் ஜீவா குறிப்பிட்டுள்ளகுருட்டு முரட்டுப் பாய்ச்சலும்”, பகைமையும் தலைக் கேறிட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு படுகேட் டினை ஆட்சியாளர்கள் செங்கொடிபுரத்தில் நிகழ்த்தியுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல லட்சம் ஒடுக்கப்பட்ட மக்கள், இந்த அநீதி கண்டு பொங்கி எழுந்துள்ளனர். இது வெறும் 54 குடும்பங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கே இழைக்கப்பட்ட துரோகம் என கோப ஆவேசம் கொண்டுள்ளனர். செப்டம்பர் 8 முதல், ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்த அறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15 வரை தருமபுரி நகராட்சி முன்பு தொடர் ஆர்ப்பாட்டம் நிகழ்த்திட மாவட்டம் முழுவதுமிருந்து அணிதிரண்டு வருகின் றனர்.

செங்கொடிபுரம் என்ற பகுதி, தோழர் ஜீவானந்தம் தருமபுரிக்கு 1948ம் ஆண்டு வருகை புரிந்தபோது துவக்கப்பட்டது. பொது வுடைமைச் சிங்கம் ஜீவாதான் செங்கொடி புரம் என்ற பெயரையும் வைத்து, துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கம் காண வழிகாட்டிய மேதை.

தருமபுரி நகராட்சியும், தமிழக ஆட்சியா ளர்களும் இணைந்து ஒடுக்கப்பட்ட சமூகத் தவரை வெளியேறச் செய்யும் முயற்சி, தோழர் ஜீவாவிற்கு இழைக்கப்படும் துரோகம்; தந்தைப் பெரியாரின், டாக்டர் அம்பேத்காரின் இலட்சியங்களுக்கு எதிரான செயல். இந்த மேதைகளின் இலட்சியப் பதாகைகளைத் தாங்கி, தருமபுரி ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைந்த போராட்டம், தமிழக ஒடுக்கப் பட்ட மக்களின் போராட்ட வரலாற்றில் மேலும் ஒரு மைல்கல்லாக அமையும்.

கட்டுரையாளர் , சிபிஎம்

மாநிலக்குழு உறுப்பினர்

கருத்துகள் இல்லை: