வியாழன், 3 செப்டம்பர், 2009

அனைத்து முனைகளிலும் போராட வேண்டிய காலமிது

தபன்சென்

அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட இன்னும் என்னவெல்லாம் மிச்சம் உள்ளதோ அத்துனைத்துறையிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் சரணடையத் துடிக்கும் இந்தியாவின் ஆளும் வர்க்கமும் அதன் பிரதிநிதியாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசையும் எதிர்த்துப் போராட மக்களை அணிதிரட்ட வேண்டிய காலம் இது. மக்களை அணிதிரட்ட தேவையான இயக்கங்களை உழைக்கும் வர்க்கம் முன்னின்று நடத்த வேண்டும்.

2009ம் ஆண்டில் ஆகஸ்ட் 18 - 21 திருப்பதியில் நடந்த இந்திய தொழிற்சங்க மையத்தின் பொதுக்குழு, இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்துக்கு விடுத்த அறை கூவல் இது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மக்களின் முது கெலும்பை முறிக்கிறது. நாடெங்கும் நிலவும் வறட்சி நிலையால் மக்களின் தோள் களில் சுமை அதிகரிக்கிறது. உலக நிதி நெருக்கடியால் மிரண்டும் நிற்கும் ஏகாதி பத்தியத்தின் கட்டாயங்களுக்கு பணியும் அரசு இந்திய நிதித்துறையை திறந்து விடுகிறது. பின்னடைவைக் காரண மாக்கி வேலை இழப்புகளும் ஆட்குறைப் பும் அதிகரித்துள்ளன. இந்திய விவசாயம் மற்றும் தொழிற்சந்தைகள், அந்நியப் பொருட்களுக்கு தாரைவார்க்கப்படு கிறது. சுற்றுச்சூழலில் ஏகாதிபத்தி யங்களின் ஆணைகளுக்காக இந்தியா காத்துநிற்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய இறையாண்மை புதைக்கப்படுகிறது. இந் திய பாதுகாப்பு நிறுவனங்கள் அமெரிக் காவின் கண்காணிப்புக்கு ஆளாகின்றன. அமெரிக்காவின் விசுவாசியாக மாறும் அவசரத்தில் இந்திய மக்களின் வாழ் நிலைகளையும் ஜனநாயக உரிமைகளை யும் இந்தியப் பொருளாதாரத்தின் சுய சார்புத் தன்மையையும் இந்திய அரசு பலி கொடுக்கத் தயாராகிவிட்டது. இத்தகைய நாசகர மற்றும் தேசவிரோதச் சதிகளை முறியடிக்க ஒன்றுபட்ட தீவிரமான இயக் கத்தைக் கட்டவும் அதற்கு தேவையான பரந்துபட்ட பிரச்சாரத்தையும் எடுத்துச் செல்ல சிஐடியு தீர்மானித்துள்ளது.

மாநாடு, எம்.கே.பாந்தேயின் தலை மை உரையுடன் தொடங்கியது. உலகப் பொருளாதார நெருக்கடி பற்றி அவர் விரிவாகப் பேசினார். வளர்ந்த நாடுகள், நெருக்கடி காரணமாக மூழ்கும் நிலை வரை சென்றது. சற்றும் எதிர்பாராத வட் டாரங்களில் இருந்து வந்த கடுமையான சாடல்களால் ஏகாதிபத்தியத்தின் நாசகர கொள்கைகள் தற்காப்பு நிலைக்கு தள்ளப் பட்டன. ஏகாதிபத்திய சக்திகளாலும், சர்வதேச அமைப்புகளும் தலைமை யேற்று திணித்த கட்டுப்பாடற்ற நிதிக் கொள்கை களே நெருக்கடிக்கு காரணம் என்று ஐஎல்ஓ மட்டுமல்லாது, வளர்ந்த நாடுகளின் தலைவர்களும் கூறினர். உலக முதலாளித்துவத்தின் பலவீனத்தை இந்நிகழ்வுகள் வெளிப்படுத்தின.

மறுபுறத்தில் செல்வந்தர்களும் நிறு வனங்களும் நெருக்கடியிலிருந்து மீள மக் கள் பணம் கொட்டப்பட்டது. இதை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் இயக்கங் களையும் வேலைநிறுத்தங்களையும் உல கெங்கும் நடத்தியது. பெரும் வேலை யிழப்புகள் மற்றும் ஊதிய வெட்டு ஆகிய வற்றுக்கு எதிராகவும், வேலை மற்றும் வருவாய் உற்பத்தியை அதிகரிக்கவும் திடமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும் தொழிலாளர்களின் போராட்டங்கள் வலியுறுத்தின என்று அவர் தம் உரையில் குறிப்பிட்டார்.

உள்நாட்டில் புதிதாக அமைந்த ஐ.மு.கூ. அரசு, இந்திய இறையாண் மையை அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடகு வைக்க முயன்று வருகிறது. அர சின் இச்சரணாகதிக் கொள்கை தேசிய பொருளாதாரத்தையும் அதன் தொடர் பான கொள்கைகளையும் பாதித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

நடந்து முடிந்த தேர்தலில் இடது சாரிக் கட்சிகள் பின்னடைவைச் சந்தித் தன. இதனால் தொழிலாளி வர்க்கத்தை கடும் சவால்கள் எதிர்நோக்கி உள்ளன. இவற்றை எதிர்க்க, வர்க்கப்போராட் டத்தினை கூர்மையாக்க, திடமான தத்துவார்த்தப் பின்னணியில் சிஐடியு அமைப்புரீதியாகத் தயாராக வேண்டும். மக்களிடையே முதலாளித்துவ மாயை யை உருவாக்கும் தத்துவங்களையும், நடைமுறைகளையும் எதிர்த்த கருத் துப்போராட்டத்தை நடத்த வேண்டும். “இதைவிட்டால் வேறு வழியில்லை” என்ற தீய அணுகுமுறையை மக்கள் மன தில் விதைக்கும் முதலாளித்துவத்தின் சதித் திட்டங்களை முறியடிப்பதே உழைக்கும் வர்க்கத்தின் முன்நிற்கும் தலையாய கடமையாக இருக்கிறது என்று எம்.கே.பாந்தே தம் உரையில் கூறினார்.

பொதுக் குழுவில் பிரதிநிதிகள் விவா தத்திற்காக பொதுச் செயலாளர் முகமது அமீன் அறிக்கையை முன்வைத்தார். தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் தொழி லாளி வர்க்கத்தின் முன் பெரும் சவால் நிறுத்தப்பட்டுள்ளது. நாசகர பொருளா தார கொள்கைகளை தீவிரமாக அம லாக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உழைக்கும் வர்க்கத்தின் வாழ்நிலையும் ஜனநாயக உரிமைகளும் தாக்கப்படுகின்றன.

இந்திய அரசின் அரசியல், பொரு ளாதார கொள்கைகளில் அப்பட்டமான அமெரிக்க ஆதரவு வெளிப்படுகிறது. தாராளமயம், கட்டுப்பாடுகள் அகற்றல் மற்றும் தாராளமயம் குறித்த அரசின் செயல்திட்டங்களை, 2008 பொருளாதார ஆய்வு, ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் வெளிப்படையாகத் தெரிவிக் கின்றன. தொழிற்சட்டங்களும் திருத்தப் படவுள்ளன. அத்தியாவசியப் பொருட் களின் ஊக வணிகத்தை தடை செய்ய மறுக்கிறது. அத்துடன் பொருள் பரிமாற்ற வரியையும் ரத்து செய்துவிட்டது.

இத்தாலியில் நடைபெற்ற ஜி - 8 உச்சி மாநாட்டில் வாய் மூடி கைகட்டிய பார்வை யாளராகவே இருந்தது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத் திடாத நாடுகளுக்கு செறிவூட்டல் மற்றும் மறு சுழற்சி தொழில்நுட்பங்களை அளிக் கக் கூடாது என்ற நிபந்தனைக்கு மற்ற ஜி- 8 நாடுகளை இணங்கவைத்துவிட் டது. நிபந்தனைகள் இல்லாத அணுசக்தி ஒப்பந்தம் என்ற அரசின் பகட்டுப் பேச்சு கள் அம்பலமாகிவிட்டன. இறுதிப் பயன் பாடு கண்காணிப்பு ஒப்பந்தம், இந்திய சர ணாகதியின் அவமான அத்தியாயம். தோகா பேச்சுவார்த்தைகளில் விவசாயம் குறித்த விஷயங்களிலும், தட்பவெப்ப மாற்றங்களில் பசுங்கூட வாய்ப்பு உள் ளிட்ட பிரச்சனையிலும் அமெரிக்காவின் கட்டளைகளுக்கு இந்தியா மண்டியிட் டுள்ளது.

இந்தியாவின் அயலுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டை புதுவகை காலனி ஆதிக்கத்துக்குள் தள் ளுகிறது. இவற்றை எதிர்க்க மக்களைத் திரட்டும் பணியில் சிஐடியு முன்னணிப் பாத்திரம் வகிக்க வேண்டும் என்றும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் தலைமையில் நடைபெறும் வன்முறைகளையும் 100க்கு மேற்பட்ட கொலைகளையும் பற்றி அறிக்கை விவரிக்கிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி யும், நாசகரப் பொருளாதார கொள்கையின் எதிர்மறை விளைவுகளும் மக்களை விரைவில் அதிருப்தியடைய வைக்கும். இதைத் தீவிரமாகவும் துரிதப்படுத்தவும் சிஐடியு பிரச்சாரங்களை வலுவுடன் நடத்த வேண்டும். கடுமையான போராட் டங்களை மேற்கொள்ள சிஐடியு நாடு முழுவதும் தயாராக இருக்க வேண்டும். ஒன்றுபட்ட போராட்டத் தளங்களை விரி வுபடுத்த வேண்டும். சிஐடியுவும் அதன் அமைப்புகளும் தத்துவரீதியாகவும் அமைப்புரீதியாகவும் தம்மை வளப் படுத்தி, வலுப்படுத்திக் கொள்ள வேண் டும் என்று அமீன் தம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவாதங்களில் 37 தோழர்கள் பங் கேற்றனர். நிலக்கரி, எஃகு, மின்சாரம் உள்ளிட்ட பல கூட்டமைப்பு துறைகளின் தலைவர்கள் விவாதங்களில் கலந்து கொண்டனர். பெபி, ஏஐஐஇஏ, ஏஐஎஸ் ஜிஇஎப் மற்றும் ஏஐடிஇஎப் உள்ளிட்ட சகோதரத் தொழிற்சங்கத் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். பொதுச் செய லாளரின் தொகுப்புரைக்குப்பின் அறிக் கை ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட் டது. வறட்சி, பிஎஸ்என்எல் ஊழியர் போராட்டம், மேற்குவங்கத்தில் இடது சாரிக் கட்சிகள் மீது நடத்தப்படும் தாக்குதல், ஆசியான் வர்த்தக ஒப்பந்தம் உள் ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

விலைவாசி உயர்வு, பங்கு விற்பனை, தொழிலாளர்கள் உரிமை மீது தாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டு கருத்தரங்கத்தை செப்டம்பர் 14 அன்று புதுடில்லியில் நடத்துவதென்று பொதுக் குழு தீர்மானித்தது. செப்டம்பர் 10 அன்று மேற்குவங்காள தினம் கடைப்பிடிப்ப தென்றும் பொதுக்குழு தீர்மானித்துள்ளது.

தமிழில் சுருக்கம் : தாஸ்

கருத்துகள் இல்லை: