வெள்ளி, 4 செப்டம்பர், 2009

கொதிக்கும் உலைக்கு மூடிபோட முடியாது!

பத்திரிகையாளர் ஜெயப்பிரகாஷ் திசநாயகத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. “நார்த் ஈஸ்ட்டர்ன் ஹெரால்டு” பத் திரிகையில் ராஜபக்ஷே அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தவர். “சண்டே டைம்ஸ்” பத்திரிகையின் செய்தியாளராகவும் பணியாற்றி வந்தவர்.


விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கட் டுரை எழுதியதாக 2008 மார்ச் 7ம் தேதி, திச நாயகம் கைது செய்யப்பட்டார். மனித உரிமை களுக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட் டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பத்திரிகையாளர்கள் தண்டிக்கப் படுவது மனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந் திரம் ஆகிய அடிப்படை உரிமைகளுக்கு முற்றி லும் எதிரானதாகும். இலங்கையில் நடப்பில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அம் சங்களைப் பார்க்கும்போது, பாஜக ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பொடா சட்டத்தை இச்சட்டம் ஒத்திருக்கிறது.

இலங்கையில் அரசுத்தரப்புக்கும் விடு தலைப்புலிகளுக்கும் இடையில் மோதல் நடந்துவந்தபோது, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அரசு ஒரு ஆயுதமாக பயன் படுத்துகிறது என்று திசநாயகம் தனது கட்டு ரையில் குற்றம் சாட்டியிருந்தார்.

திசநாயகத்திற்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டிருப்பது, இலங்கையில் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டுவிட்டது என்பதை காட்டுகிறது என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கடுமையாக விமர்சித்துள்ளது.

ராஜபக்ஷே ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இலங்கை அரசை விமர் சித்து எழுதிவந்த லசந்த விக்ரமதுங்க, ஜனவரி மாதம் பத்திரிகை அலுவலகத்தின் வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலைமை குறித்து இலங்கை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியே கவலை தெரிவித்திருந்தார். ஆனால் இதுகுறித்து ராஜபக்ஷே அரசு கவலைப்படவில்லை. யுத்தத்தில் ஈடு படாதவர்கள் முகாம்களில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படவேண்டும் என்று இலங்கை உச்சநீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பை, ராஜ பக்ஷே அரசு அமல்படுத்துமா என்பதும் சந் தேகமே.

பயங்கரவாதம் என்ற பெயரில், தான் நினைக்கும் அனைத்தையும் சாதிக்க நினைப்பது அமெரிக்க பாணியாகும். ராஜபக்ஷே அரசும் இதே பாணியில் பயணம் செய்ய முயல்வது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

இலங்கையில் வாழும் இருதரப்பு மக்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், சகோதரத் துவத்தையும் ஏற்படுத்துவதற்கு ராஜபக்ஷே அரசு முன்வரவேண்டும். அதற்கு யுத்த மனோ பாவத்திலிருந்து வெளியே வருவது மிக முக்கியமாகும். விமர்சிப்பவர்களை ஒடுக்கி விட முயல்வது, கொதிக்கும் உலைக்கு மூடி போடும் முயற்சியே என்பது உலக அனுபவ மாகும்.

கருத்துகள் இல்லை: