நாட்டின் தென்மாநிலங்களில் ஓரளவிற்கும், வட மாநிலங்களில் மிகவும் கோலாகல மாகவும், மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை என்றும் நவராத்திரி மிகவும் முக்கிய பண் டிகையாக கொண்டாடப்படுகிறது. ‘துர்கா’ என்கிற காளி, மஹிஷாசுரனைக் கொன்ற தைக் கொண்டாடும் விதமாகவே துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது.
ஆனால் வடக்கு வங்கத்தின் ஒரு பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும், துர்கா பூஜையைத் துக்ககாலமாக அனுசரித்து வருகிறார்கள். இவ்வாறு துக்க காலமாகக் கொண்டாடும் இம்மக்கள் ‘அசுரர்’ இனத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். இது குறித்து ‘டைம்ஸ் நேஷன்’ இதழ் வெளியிட்டுள்ள விவரங்கள் மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றன.
அசுரர்கள் யார்?
இந்தியாவிற்குள் வந்த ஆரியர்கள், நாட் டின் கிழக்குப் பகுதிக்கு வடக்கு வங்கம் மற் றும் சோட்டா நாக்பூர் சர்குஜா காடுகளுக்கு இந்த ‘அசுரர்’ பூர்வகுடியினரை விரட்டியடித் திருக்கின்றனர். அப்போதிருந்து அவர்கள் இங்கு வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது.
துர்கா பூஜையின் போது பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் மக்களால் பக்தியுடன் கும்பிடப்படும் படத்தில் பத்து கைகளை உடைய துர்கா தேவி, சிங்கத்தின் மீது அமர்ந்து, ஈட்டியால் மஹிஷாசுரனைக் கொல்வது போல் இருக்கும். இதே படத்தை இங்குள்ள அசுரர்கள், தங்களுக்கு ஏற்பட்ட இருண்ட காலம் என்றும், தங்களை அழிப்ப தற்காகவே ஆண், பெண் கடவுள்கள் இவ் வாறு படையெடுத்து வந்தார்கள் என்றும் கூறுகிறார்கள்.
மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரி நகரத்தி லிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலிபுர்துவார் என்னும் பகுதியில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ஏழு வயதேயுடைய ஆனந்த் என்னும் சிறு வன் பல்வேறுவிதமான பிளாஸ்டிக் மிருகங் களை வைத்து விளையாடிக் கொண்டிருந் தான். ஒட்டகம், குதிரை, பசு... இவற்றுடன் தலையில்லாது முண்டமாக ஒரு சிங்கமும் இருக்கிறது. இது குறித்து இவனிடம் கேட்ட போது, “இது ஒரு அசிங்கமான மிருகம், இதனை வாங்கியவுடனேயே இதன் கழுத் தைத் திருகி, தலையை எடுத்துவிட்டேன்” என்று மிகவும் கோபத்துடன் கூறினான். அவன் மேலும், “நான் ஒரு அசுரன். என் னால் சிங்கங்களை சகித்துக்கொள்ளமுடி யாது. இந்த மிருகம்தான் மஹிஷாசுரனுக்கும் துர்காவுக்கும் இடையே சண்டை நடைபெற்ற சமயத்தில் எங்கள் எருமை மாட்டைக் கொன் றது. எனவேதான் இம்மிருகத்தை நாங்கள் வெறுக்கிறோம். அதன் முகத்தையே பார்க்க நாங்கள் விரும்பவில்லை.”
ஆனந்த் அசுர் போலவேதான் அங்கிருந்த அசுரர்கள் அனைவரும் சிந்தனையோட் டத்தைப் பெற்றிருந்தார்கள். இவ்வாறு அசுரர் இனத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் எட்டாயிரம்பேர் இப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் மஹிஷாசுரனைத் தங்கள் மன்னராக வும், துர்கா தேவி இவருடன் சண்டையிட்டு கொல்லும்வரை, மஹிஷாசுரன் இவ்வுலகையும், விண்ணுலகையும் வென்று சொர்க்க லோகத்திலிருந்து தேவர்களை விரட்டியடித்துக் கொண்டிருந்தார் என்றும் கருதுகிறார்கள்.
எனவேதான், வடக்கு வங்கத்திலும் சோட்டா நாக்பூர் பகுதியிலும் வாழும் இவர்கள் துர்கா பூஜை நாட்களை தங்கள் துக்க காலமாகக் கருதுகிறார்கள். இவர்கள் அனைவரும் தங்கள் பெயருடன் அசுர் என்னும் விகுதியை இணைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் எவ்விதமான கடவுளையும் வணங்குவதில்லை. அனைத்துக் கடவுள்களும், கடவுளச்சிகளும் மஹிஷாசுரரைக் கொல்வதற்காக “நியாயத்துக்கு விரோதமாக கைகோர்த்துக் கொண்டவையே” என்று இவர்கள் நம்புகிறார்கள்.
அலிபுர்துவார் கிராமத்தில் அசுர் இனத் தைச் சேர்ந்த 26 குடும்பத்தினர் (சுமார் 150 பேர்) வசிக்கின்றனர். இவர்கள், துர்கா பூஜை நடைபெறும் ஐந்து நாட்களிலும் காலை சூரி யன் உதயமாவதிலிருந்து மாலை அஸ்தமன மாகும் வரை வீட்டைப் பூட்டிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர், வெளியே வருவதில்லை. பகலில் மேற்கொள்ளப் படும் அனைத்து வேலைகளையும் இரவில் செய்து கொள்கின்றனர்.
“மஹிஷாசுரன் சொர்க்கம் மற்றும் பிருத்வி என்ற ஈருலகத்திலும் ஒரு வலிமைவாய்ந்த நபராவார். தேவர்களுக்கு இது நன்கு தெரியும். இவர் தொடர்ந்து உயிருடன் இருந்தால், தங்களை மக்கள் வணங்க மாட்டார்கள் என்று நினைத்தார்கள். எனவே, கடவுள்களுடன் சேர்ந்து சதி செய்து அவரைக் கொன்று விட் டார்கள். இவ்வாறு கடவுள்கள் செயல்பட் டுள்ளபோது, நாங்கள் அவற்றை எவ்வாறு கும்பிட முடியும்?” என்று தாஹாரு அசுர் என் பவர் வினா தொடுக்கிறார். தாஹாரு தன் னுடைய பழங்குடியினர் மொழியில் மிகவும் ஆவேசமாக இவ்வாறு வினா தொடுக்கிறார். அவர் கூறியவற்றை, செய்தியாளர்கள் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொன்ன பிறகு, அவர், அவருக்குத் தெரிந்த அளவிற்கு இந்தியில் பேசத் தொடங்குகிறார். “நாங்கள் கடவுள்களையும், கடவுளச்சிகளையும் வெறுக்கிறோம். எங்கள் மூதாதையர்கள் அவர் களைக் கும்பிடுவதைக் கைவிட்டுவிட்டனர். அவர்கள் சென்ற பாதையில் நாங்களும் வழி தவறாமல் சென்று கொண்டிருக்கிறோம். கடவுள்களால் நல்லது எதுவும் செய்ய முடியாது என்பதை எங்கள் மூதாதையர்கள் மூலமாக நாங்கள் தெரிந்து கொண்டோம்.
அசுரர்கள், தங்கள் மூதாதையர்களை அல்லது இயற்கையை மட்டுமே வணங்குகிறார்கள்.
அசுர் பூர்வகுடியினர் எவரும் முறையாகப் பள்ளிகளுக்குச் சென்று கல்வி கற்கவில்லை. இங்குள்ள குழந்தைகளுக்கு உள்ள ஞானம் எல்லாம், தங்கள் மூதாதையர் மூலம் அவை பெற்றவைகளேயாகும். ஆயினும் அவர்களின் இல்லங்கள் மிகவும் சுத்தமாகப் பேணப்பட்டு வருகின்றன. சுவர்களும் தரைகளும் சாணத் தால் மெழுகப்பட்டு மிகவும் சுத்தமாக இருக் கின்றன. ஆயினும், நாட்டின் மற்ற கிராமப் பகுதிகள் போல் அல்லாமல், அவர்கள் உண வுப் பழக்கங்கள் வித்தியாசமாக உள்ளன.
அவர்கள் அனைத்துவிதமான இறைச்சி களையும் உண்கிறார்கள். பாம்பு, நாய், பூனை, காகம், கழுகு ஆகியவற்றின் கறிகளை உண் கிறார்கள். ஆனால் வேலை செய்யும்போது மிகவும் அமைதியுடனும் அனைவருடனும் நேசபூர்வமாகவும் செயல்படுகிறார்கள். எவ் விதமான சச்சரவிலும் அவர்கள் ஈடுபட்டதை நாங்கள் பார்க்கவில்லை என்று அங்குள்ள டீ எஸ்டேட் உதவி மேலாளர் சின்மாய் கோஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.
பூர்வகுடியினர் பலப்பல குழுக்களாக வாழ்ந்தனர். குழுத் தலைவர்கள் ஒரு கட் டத்தில் கடவுள்களாக மாறினார்கள் என்பதே உண்மை. கடவுள் உண்டு என்பதும் இல்லை என்பதும், கவைக்குதவாத வீண்பேச்சு என் றார் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார். மற்ற பல படைப்புகளைப் போலவே, கட வுளைப் படைத்தவனும் மனிதனே என்ப தற்கு இது சிறந்த ஆதாரம் என்று படுகிறது.
கே. வரதராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக