பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகிய எரிபொருட்க ளின் விலையை உயர்த்தியதில் எந்தத்தவறும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பெட்ரோல் விலையை நிர்ணயிப்பதில் அரசுக்கு இருந்த கட்டுப்பாடு முழுமையாக தளர்த்தப்பட்டு சுதந்திரமாக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட பிரதமர், டீசல் விலை நிர்ணயித்திலும் இதேபோன்று செய்யவேண்டியுள்ளது என்றும், இது போன்ற “சீர்திருத்தங்களை” மேலும் துரிதமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் கூறினார்.
கனடா தலைநகர் டொராண்டோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில் பங் கேற்ற பின்னர் புதுதில்லி திரும்பும்போது விமானத்தில் செய்தியாளர்களுக்கு மன்மோ கன் சிங் பேட்டியளித்தார். அப்போது எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்த அவர், விலை உயர்வை நியாயப்படுத்தினார்.
மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு அரசு மிகப்பெ ரும் அளவிற்கு மானியம் அளித்தது என்றும் இனியும் அதை தொடர முடியாத கார ணத்தால், அவற்றின் விலைக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என்றும், எனவேதான் “சிறிதளவு” விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும், பெட்ரோல் விலைக் கட்டுப்பாட்டை கை விட்டது போல டீசல் விலை கட்டுப் பாட்டையும் விரைவில் அரசு கைவிடு மென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
டீசல் விலை நிர்ணயம் மீதான கட்டுப் பாட்டை அரசு கைவிட்டால் டீசல் விலையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.50 உட னடியாக அதிகரிக்கும்.
ஏழை, எளிய மக்கள் மீது தமது அர சுக்கு அக்கறை இருப்பதாக கூறிக்கொண்ட பிரதமர், அப்படி அக்கறை இருப்பதால் தான் மண்ணெண்ணெய் மற்றும் சமை யல் எரிவாயு விலை நிர்ணயம் செய்வதில் அரசுக்கு இருக்கும் கட்டுப்பாட்டை இன் னும் கைவிடவில்லை என்றும் கூறினார்.
விலையை உயர்த்தவில்லை என்றால் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்க ளுக்கு 2010-11ம் நிதியாண்டில் ரூ.74 ஆயி ரத்து 300 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறிய அவர், தமது அரசின் நிலையை மக்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.
பெட்ரோலிய பொருட்களுக்கு இனியும் மானியம் கொடுத்துக்கொண்டிருக்க முடியாது எனக்குறிப்பிட்ட அவர், இந்த விலை உயர்வு சாதாரண மக்கள் மீது சிறு சுமையை ஏற்றியதுபோல் தெரிந்தாலும், அதை மக்கள் சமாளித்துக்கொள்வார்கள் என்றும் கூறினார். (பிடிஐ)
புதன், 30 ஜூன், 2010
பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் : மன்மோகன்சிங்
லேபிள்கள்:
காங்கிரஸ்,
சிபிஎம்,
பெட்ரோல்,
போபால் விஷவாயுக் கசிவு,
விலை உயர்வு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக