வியாழன், 1 ஜூலை, 2010

‘பாப்புலிசம் அல்ல’.. ‘எமது பங்கு’..

குதிரை கீழே தள்ளியதுமல்லாமல் குழியும் தோண்டியதாம் என்றொரு சொல் வழக்கு தமி ழில் உண்டு. மன்மோகன் அதை உண்மை ஆக் குகிறார். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலையை மிகக் கடுமையாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. இதன் மூலம் சாதாரண உழைப்பாளி மக்க ளின் அடிவயிற்றில் மிதித்துள்ளது மன்மோகன் அரசு.

ஆனால், தான் செய்தது மிகச் சரி என அளவு கடந்த மமதையோடு மன்மோகன் சிங் வாதாடு கிறார். அமெரிக்க அதிபர்கள் இவரை புகழ்வ தால் தன்னிலை மறந்துவிட்டாரோ என்னமோ, அவர் கூறுகிறார் “ நமது நாடு கண்டு வரும் முன் னேற்றத்தை அதீதமான பாப்புலிசத்தால் (இல வசம் மற்றும் மானியத் திட்டங்கள்) சீர்குலைக்க அனுமதிக்கக் கூடாது என்பதை புத்திசாலிக ளான மக்கள் போதிய அளவு உணர்ந்தே இருக் கிறார்கள்” இப்படி ‘மானியத்திற்கு எதிரான உலக வங்கி ஆணைகளை’ மக்கள் விரும்பி ஏற்பார் கள் என சாமர்த்தியமாக பேசுகிறார் மன்மோகன்.

இங்கேயும் பல முதலாளித்துவ அறிவு ஜீவி கள் மானியம் எவ்வளவு நாள் வழங்க முடியும் என்று கேட்கிறார்கள். சில ஏடுகள் ‘இலவசம்’ ‘மானியம்’ இவற்றையெல்லாம் சதா நையாண்டி செய்து கொண்டிருக்கும். அதே சமயம் மக்க ளுக்கு மூச்சுவிடுவதற்கு உதவுகிற உணவு மானி யம், உரமானியம் மற்றும் இதர மானியங்கள் குறித்து இப்படி குறை சொல்பவர்கள் அதைவிட நான்கு மடங்கு, ஐந்து மடங்கு அதிகமாக முதலாளி களுக்கும் அந்நியப் பகாசுரக் கம்பெனிகளுக் கும் சலுகைகளை அள்ளி வீசியுள்ளதை இவர் கள் மறந்தும் கேள்வி கேட்கமாட்டார்கள்.

டீசலுக்கு வழங்கப்படும் மானியத்தை முற் றாக கைவிட்டு, சந்தை விலைக்கு ஒப்ப அதன் விலை ஏறிக்கொண்டே போக விரைவில் வழி செய்யப்போவதாய் மன்மோகன் சிங் கொஞ்ச மும் மக்கள் மீது அக்கறையின்றி சொல்கிறார். ஆனால், பெரு முதலாளிகளும் பன்னாட்டு நிறு வனங்களும் அரசிடம் சலுகை எதிர்பார்க்கா மல் மின்சாரத்தை, தண்ணீரை மற்றும் இதர தேவைகளை சந்தை விலையிலே ஈடுகட்டிக் கொள்ள வேண்டும் என மன்மோகன் சொல் வாரா? அப்படிச் சொன்னால் ரிலையன்ஸ் அம் பானியும் பன்னாட்டு முதலாளிகளும் இவரை விட்டுவிடுவார்களா? விலையேற்றத்தை நியா யப்படுத்தும் மன்மோகனுக்கு, பெரு முதலாளி களும் பன்னாட்டு நிறுவனங்களும் வரிச் சலுகை கோரக் கூடாது என்று கூறுகிற தைரியம் உண்டா?

உண்மையில் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கிற அனைத்து வளர்ச்சியும் இந்த நாட்டினுடைய கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின் ரத் தத்தாலும், வியர்வையாலும் உருவாக்கப்பட்டது தான். எனவே, அவர்களுக்கு அவர்கள் தாங்கும் விலையில் பொருட்களை வழங்கும் கடமை அர சுக்கு உண்டு. இன்னும் சொல்லப் போனால் இது மானியமோ, இலவசமோ, சலுகையோ அல்ல. அது அவர்களுக்கு உரிய நியாயமான பங்கு. இதை முதலாளித்துவ பொருளாதார வாதிகள் சொல்லமாட்டார்கள். ஆனால், மக்கள் மீது அக்கறை கொண்ட ஊடகங்களாவது சொல்ல வேண்டாமா?

ஒரு லட்சம் கோடிக்கு மேல் வங்கிகளில் வாங்கிய கடனை முதலாளிகள் ஏப்பம் விட்டு விட்டார்கள். ஆனால், அதனை ‘செயல்படாத மூலதனம்’ என பொருளாதார அறிஞர்கள் செல் லப் பெயரிட்டு கடனை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். ஆனால், சாதாரண மக்கள் சின்னஞ்சிறிய தேவைகளுக்கு வாங்கிய கடனுக்கு ஆயிரம் கெடுபிடி, புத்திமதி இதுதான் அனுபவம். அதுபோலத்தான் முதலாளிகளுக்கு அழுவதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு, ஏழைகளுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரி விக்கிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கண்டித்து எழ வேண்டும்.

கருத்துகள் இல்லை: