இந்தியாவுடனான அணுசக்தி உடன்பாட்டிற்காக அமெரிக்க நிர்வாகம் என்னவெல்லாம் செய்தது என்பது உட்பட உலகம் முழுவதும் அமெரிக்கா எத் தகைய அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளது என்பது தொடர்பான ரகசிய ஆவ ணங்களை ‘விக்கி லீக்ஸ்’ எனும் நிறுவனம் ஞாயி றன்று வெளியிடப்போவ தாக அறிவித்தது.
அமெரிக்க அரசின் இந்த ரகசிய ஆவணங் களை வெளியிடுவது, உலக ளாவிய முறையில் அமெ ரிக்கா நடத்தி வரும் பயங் கரவாதத்திற்கு எதிரான போரில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், தனது கூட்டாளிகளுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என் றும் ஒபாமா நிர்வாகம் கருதுகிறது. எனவே, இத்த கைய ஆவணங்களை வெளியிட வேண்டாம் என்று ஒபாமா நிர்வாகம், விக்கி லீக்ஸ் நிறுவனத்துக்கு அவசர அவசரமாக வேண்டு கோள் விடுத்துள்ளது.
ஒரு இணையதள நிறு வனத்திடம் அமெரிக்க அரசே கோரிக்கை விடுக்கும் அளவிற்கு சென்றிருப் பது இதுவரையிலும் இல்லாத ஒன்று என உலக அர சியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஏற்கெனவே ஆப்கன். மற்றும் இராக் போர்கள் குறித்து விக்கி லீக்ஸ் இணை யதளம் ஆயிரக்கணக்கில் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு, அமெரிக்கா வின் கோரத் தாண்டவத்தை அம்பலப்படுத்தியது. இந் நிலையில் ஞாயிறன்று சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ரகசிய ஆவணங்களை வெளி யிடப்போவதாக அந்நிறுவ னத்தின் தலைவர் ஜூலியன் அசாஞ்சே அறிவித்திருந்தார். இது சட்ட விரோதம் என்று மிரட்டிய அமெரிக்க நிர்வாகம், இந்த ஆவணங்களை வெளியிட்டு விட வேண்டாம் என்று தற்போது அசாஞ்சேயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக