செவ்வாய், 30 நவம்பர், 2010

பூக்களை வெட்டி எறியக்கூடும்...

சோவியத் யூனியன் உதயமான காலத்திலிருந்து உலக முதலாளித்துவ மானது சோஷலிஸ்ட் அரசுகளைக் கவிழ்ப்பதிலேயே முனைப்புடன் செயல் பட்டு வந்துள்ளது.

ஏகாதிபத்திய சக்திகள் சோஷலிஸ்ட் கியூபாவை அடியோடு தகர்த்திடுவதற்காக அரை நூற்றாண்டு காலமாகப் பல்வேறு சதிவேலைகளை அரங்கேற்றி வந் துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி காஸ்ட் ரோவைப் படுகொலை செய்வதற்காக அமெரிக்கப் புலனாய்வுத் துறை 300 தடவைகளுக்கும் மேல் முயற்சித்துத் தோல்வியடைந்துள்ளது.

சமீபத்தில் வெனிசுலா, பொலிவியா, ஈக்வடார் போன்ற பல்வேறு தென் அமெ ரிக்க நாடுகளில் இடதுசாரி சிந்தனை படைத்த தலைவர்கள் தேர்தல்கள் மூல மாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி யுள்ளனர். அதனால் அமெரிக்க ஆட்சி யாளர்களுக்கு மிகவும் எரிச்சலும், ஆத் திரமும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வெனி சுலா ஜனாதிபதி சாவேஸை படுகொலை செய்வதற்காகத் தொடர்ந்து திட்டமிட்ட சதிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில், கடந்த செப்டம்பர் மாதத் தில் ஈக்வடார் நாட்டு ஜனாதிபதி ரபேல் கோரியாவை சட்டவிரோதமான முறை யில் பதவி நீக்கம் செய்திடும் சதிகள் அரங்கேற்றப்பட்டன.

ஈக்வடார் நாட்டுத் தலைநகரான க்விட்டோவில் கடந்த செப்டம்பர் 20ம் நாளன்று ஜனாதிபதி ர

பேல் கோரியா சில உள்ளூர் ஏகாதிபத்தியக் கைக்கூலி களால் சிறைபிடிக்கப்பட்டார்.

ஜனாதிபதி கோரியா தென் அமெரிக் கக் கண்டத்தில் உள்ள முற்போக்கான இடதுசாரித் தலைவர்களில் ஒருவரா வார். அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஈக்வடார் நாட்டில் பல்வேறு வகையான தீவிரமான அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி வருகிறார். நாட்டில் தனி யார் வசமிருந்த ஹைட்ரோ கார்பன் தொழிற்சாலைகள் அரசுடைமையாக்கப் பட்டன. மேலும் ஜனாதிபதி கோரியா நாட்டில் பற்பல சமூக நலத்திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்.
கலகக்கார காவல்துறைப் பிரதிநிதி களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற போது

கோரியா அவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டார். மேற்படி கலகக்காரர்கள் அவரைப் பதவியிலிருந்து விலகுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டினார்கள். ஆனால் ஜனாதிபதி கோரியா சிறிது கூடக்கலங்காமல் உருக்கு உறுதியுடன் தலைநிமிர்ந்து நின்றார். “நீங்கள் விரும்பினால் என்னைச் சுட்டுத்தள்ளுங்கள்” என்று அவர் கலகக்காரர்களைப் பார்த்து தலைநிமிர்ந்து கம்பீரமாகக் கூறினார். ஜனாதிபதி கோரியா 2006ம் வருடம் பதவியேற்றார். அதற்கு முன்னர் ஈக்வடார் நாட்டில் 10 வருடங்களில் 8 பேர் ஜனாதி பதி பதவிக்கு வந்து போயுள்ளனர்.


காவலர்களின் தாக்குதல்களில் காயம்பட்ட ஜனாதிபதி கோரியா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து தொலைபேசி மூலம் பேசிய அவர் பின்வருமாறு கூறினார் “மருத்துவ மனையை விட்டு நான் அதிபராக மீண்டு வருவேன் அல்லது பிணமாகக் கொண்டு வரப்படுவேன்”. மேலும் வெனிசுலா நாட் டுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி யில் அவர் மக்கள் கவிஞர் பாப்லோ நெரு டாவின் கவிதை வரியொன்றை மேற் கோள் காட்டிப் பேசினார். “அவர்கள் பூக் களை வெட்டியெறியக்கூடும், ஆனால் மீண்டும் ஓர் புதுவசந்தம் வருவதை அவர்களால் தடுத்திட முடியாது” என் பதே மேற்படி கவிதை வரியாகும்.

அவர் கலகக்காரர்களால் சிறைப் பிடிக்கப்பட்ட செய்தியறிந்த மக்கள் பல் லாயிரக்கணக்கில் மருத்துவமனை முன் திரண்டனர். பின்னர் ஜனாதிபதியின் சிறப்பு மெய்க்காவல்படையினரால் கோரியா விடுவிக்கப்பட்டார். அந்த மீட்பு நிகழ்ச்சியில் ஒரு மெய்க்காவலர் உயிரி ழக்க நேர்ந்தது.

ஜனாதிபதி கோரியாவுக்கு நாட்டில் 70 சதவீத மக்களுடைய ஏகோபித்த ஆதரவு உள்ளது.

ஒபாமா நிர்வாகமானது தொடர்ந்து தென் அமெரிக்க நாடுகளில் இத்தகைய கவிழ்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வரு கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஈக்வடார் நாட்டின் காவல்துறைக்குள் தங்களுடைய அடியாட்களை ஊடுருவச் செய்கிறார்கள். ஜனாதிபதி கோரியா அமெ ரிக்கர்களுடைய மேற்படி சதிச்செயல் களையெல்லாம் வேரும் வேரடி மண்ணு மில்லாமல் வெட்டியெறிந்து வருகிறார்.

ஈக்வடார் நாட்டில் அமெரிக்கத் தூத ராகப் பணிபுரிந்து வரும் ஹீதர் ஹோட் ஜஸ் வேறு பல நாடுகளில் பணிபுரிந்த போதெல்லாம், அந்த நாடுகளிலுள்ள ஜனநாயக ஆட்சிகளைக் கவிழ்க்கும் சதிவேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் கியூபா அரசைக் கவிழ்ப்பதற்காகப் பற்பல முயற்சிகளை மேற்கொண்ட துண்டு. அவர்தான் 1990ம் வருடம் நிகர குவா நாட்டில் மக்களாட்சியைக் கவிழ்த் தவர். அவர்தான் தற்சமயம் ஈக்வடார் நாட் டில் அமெரிக்கத் தூதராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க ஆட்சியாளர்கள் 3.8 கோடி டாலர்களை ஈக்வடார் நாட்டி லுள்ள பற்பல தனியார் அமைப்புகளுக்கு வாரி வழங்கியுள்ளனர். மேற்படி அமைப் புகள் யாவுமே கோரியாவின் ஆட்சிக்கு எதிராக அணிதிரண்டுள்ளன. மேலும் ஈக்வடார் நாட்டிலுள்ள பெரிய பெரிய செய்தி ஊடகங்கள் யாவும் தனியார் வசம் உள்ளன.

இத்தகையதோர் சூழ்நிலைகளில் கோரியா தன் நாட்டு மக்களுக்காக நல்ல பல செயல்திட்டங்களை உருவாக்கியாக வேண்டிய ஒரு இக்கட்டான நிலைமை உள்ளது. கோரியா, தனது ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்ட பின்னர், தன்னுடைய அரசானது கலகம் செய்த காவலர்களுக்கு எதிராக எந்த ஒரு பாதகமான நடவடிக்கையையும் மேற் கொள்ளாது என்று உறுதியளித்துள்ளார். அவர் நாட்டிலுள்ள அதிருப்தியாளர் களைத் திருப்திப்படுத்தும் வகையில் பல் வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரு கிறார்.

சமீபத்திய நிகழ்ச்சிகளானவை மக் கள் மத்தியில் கோரியாவின் செல்வாக் கை அதிகப்படுத்தியுள்ளது. அவர் தன் னந்தனியாக நிராயுதபாணியாக கலகக் காரக் காவலர்களை உறுதியுடன் எதிர் கொண்டவிதம் குறித்து நாட்டு மக்கள் வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். ஒரு மிகச்சிறந்த பொருளாதாரப் பட்ட தாரியான கோரியா, தன் நாட்டில் ஆற்றிட வேண்டிய பொருளாதாரப் பணிகள் ஏராளமாக உள்ளன. அவர் தனது நாட்டு மக்களுக்கான மக்கள் சேவையில் முழு வெற்றி பெறுவார் என்பதுஉறுதி.

ஜான் செரியன்

நன்றி - “பிரண்ட்லைன்”

தமிழில்: கே. அறம்

கருத்துகள் இல்லை: