புதன், 1 டிசம்பர், 2010

காவல்துறையை நம்பாத தலைமுறை உருவாகும் பிரிட்டன் மாணவர் சங்கங்கள் எச்சரிக்கை

தங்களது நியாயமான போராட்டங்கள் மீது அடக்குமுறை பிரயோகிப்பதால் காவல்துறை தனது நம்பகத்தன்மையை இழந்து, புதிய தலைமுறை காவல்துறையை நம்பாத தலை முறையாக உருவாகிவிடும் வாய்ப்புள்ளது என்று பிரிட்டன் மாணவர் சங்கங்கள் கருத்து தெரிவித் துள்ளன.


பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக கல்வித்துறையில் பல்வேறு நிதி வெட்டுகளை பிரிட்டன் செய்யப்போவதற்கு அந்நாட்டு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மறுபுறத்தில் பெரிய தொழிற்சங்கங்களும் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதி ராக பெரும் வேலைநிறுத் தங்களில் ஈடுபடுமாறு தங் கள் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றன. பொது மற்றும் வர்த்தக சேவை சங்கத்தின் தலைவரான மார்க் செர் வோட்கா கூறுகையில், கூடுதல் ஆர்ப்பாட்டங்கள், கூடுதல் பேரணிகள் என்று குறிப்பிட்டார். வேலை நிறுத்தங்கள் தவிர்க்க முடி யாதவை. அவைதான் அர சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க சிறந்த வழி என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டுத் துவக்கத் திலிருந்தே விமான, ரயில் மற்றும் தரைப்போக்கு வரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஊர்வ லங்களை நடத்தி வருகிறார் கள். கல்வித்துறையில் வெட்டு என்றவுடன் மாண வர்கள் பெரும் அளவில் களம் இறங்கி உள்ளார்கள். கல்விக்கட்டணம் உயர்வு மாணவர்கள் மீது பெரும் சுமையை ஏற்றியுள்ளது. நவம்பர் 10 அன்று லண் டனில் நடந்த பேரணியில் 52 ஆயிரம் மாணவர்கள் பங் கேற்றனர். கல்வித்துறை யைச் சீரழிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிரான இயக்கத்தின் துவக்கமே இது என்று மாணவர்கள் தலைவர்கள் குறிப்பிட் டனர்.

மேலும் பல இயக்கங்களை நடத்தப்போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர். அதேவேளையில் அமைதியான ஊர்வலங்கள் மீது கடுமையான அடக்கு முறையை காவல்துறை தொடுத்தால் அதன் நம்பகத்தன்மை கெட்டுப் போய்விடும் என்று எச்சரித் திருக்கிறார்கள். லண்டன் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவரான கிளாரே சாலமோன், காவல் துறை மீது மக்கள் வைத்தி ருக்கும் நம்பிக்கை பறிபோய் விடும். தங்கள் மீது நம்பிக் கையில்லாத புதிய தலை முறையைக் காவல்துறை காண விரும்பினால், அதற்கேற்ற வேலையைத்தான் தற்போது செய்து கொண்டி ருக்கிறது என்று கூறலாம். காவல்துறையின் உண்மையான முகத்தைப் பல மாணவர்கள் பார்த்துள்ளார்கள். அவர்கள் காவல்துறை மீது நம்பிக்கை இழந்துள்ளார் கள் என்றார்.


பிரிட்டன் மாணவர் சங்கங்களில் பெரிய சங்கமான யுனைட் தலைவரான லென் மக்லெஸ்கி பேசுகையில், கல்விக்கான நிதிவெட்டை எதிர்க்கும் இந்த இயக்கம் வெறும் துவக்கம் மட்டும் தான். எதிர்த்து நின்று போரிடுவதற்கு இதுதான் சரியான தருணம் என்று குறிப்பிட்டார். இந்த வாரத்தில் புதிய பேரணிகள் மற்றும் இயக்கங்களுக்கு மாணவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை: